விஜய் படத்திற்காக முதல் ஆளாக வாழ்த்து கூறிய அஜித்.! தளபதிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்? வெங்கட் பிரபு ஓபன் டாக்!
இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை நான் இயக்க உள்ளது குறித்து தெரிந்ததும், அஜித் தான் தன்னை முதல் நபராக வாழ்த்தியதாகவும்... படத்தின் அப்டேட் எப்போது வரும் என்பது குறித்த தகவலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இதை தொடர்ந்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. பல இயக்குனர்கள் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்ட நிலையில்... லியோ படம் வெளியாகும் முன்பே, தளபதி 68 படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியானது. தளபதியின் 68-ஆவது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளதாக கடந்த மேமாதம் படக்குழு தெரிவித்த நிலையில், விரைவில் இந்த படத்தின் படிப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகும் என கூறப்பட்டது .
Breaking: விஜய்யின் பிரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் காலமானார்!
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இப்படம் அரசியல் பின்னணி மற்றும் சமூக கருத்தை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என சில தகவல்கள் வெளியானது. எனவே இந்த படம் மூலம் வெங்கட் பிரபுவின் மாறுபட்ட இயக்கத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என கூறப்பட்டது .
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
இந்நிலையில் தளபதி 68 படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேசியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "தளபதி 68 படத்தின் அப்டேட் இப்பொழுது சொல்ல முடியாது. லியோ ரிலீஸுக்கு பிறகு அப்டேட் கண்டிப்பாக வரும். தற்போது ஃப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படம் கமிட் ஆனவுடன் முதலில் அஜித் குமார் தான் எனக்கு வாழ்த்து கூறினார் என்கிறார்". உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் தளபதி என்று தான் போடுவேன் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.