MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யபோகிறாரா நடிகர் விஷால்? சமூக வலைத்தளத்தை சூடாக்கிய தகவல்!

பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யபோகிறாரா நடிகர் விஷால்? சமூக வலைத்தளத்தை சூடாக்கிய தகவல்!

நடிகர் விஷால் ஏற்கனவே பல காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், விரைவில் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வட்டமிட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 09 2023, 12:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் விஷால் பல வருடங்களாக பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் சரத்குமாருக்கு வரலட்சுமி விஷாலை காதலித்து வந்தது, பிடிக்கவில்லை என கூறப்பாடலும் வரலட்சுமி தன்னுடைய காதலில் மிகவும் உறுதியாக இருந்தார்.

25

ஆனால் திடீர் என விஷால் தான், வரலட்சுமி மீதான காதலை முறித்து கொண்டதாக கூறப்பட்டது. விஷால் உடனான காதல் முறிவுக்கு பின்னர்... வரலட்சுமி தற்போது வரை சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருந்தாலும், திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விஷால் அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் சிக்குவதில் துவங்கி , ஒரு முறை நிச்சயதார்த்தம் வரை சென்று இவரின் திருமணம் நின்றது.

விஜய் படத்திற்காக முதல் ஆளாக வாழ்த்து கூறிய அஜித்.! தளபதிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்? வெங்கட் பிரபு ஓபன் டாக்!

35

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதல் மழையை பொழிந்து வந்த நிலையில்... திடீர் என அனிஷா ரெட்டி விஷாலுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார்.

45

 எனவே இவர்களின் திருமணம் நின்று விட்டதாக சில தகவல்கள் பரவிய நிலையில், பின்னர் திருமணம் நின்றது உறுதியானது. இதை தொடர்ந்து, விஷால் மீண்டும் பழைய காதலியான, நடிகை ஒருவருடன் தன்னுடைய காதலை புதுப்பித்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரத்துக்கொண்டுள்ளது.

Breaking: விஜய்யின் பிரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் காலமானார்!

55

அவர் வேறு யாரும் அல்ல, நடிகை லட்சுமி மேனன் தான். 28 வயதை எட்டி விட்ட இவருக்கு, ஏற்கனவே அவரின் வீட்டிலும் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்பட்டது. சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் திருமண பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், லட்சுமி மேனனுக்கும் - விஷாலுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகும் இந்த தகவல் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது வழக்கம் போல் வந்ததியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஷால் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved