- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கோர்ட் சீன் – அரசி மற்றும் பாண்டியன் பிளாஷ்பேக் காட்சிகள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கோர்ட் சீன் – அரசி மற்றும் பாண்டியன் பிளாஷ்பேக் காட்சிகள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில் பாண்டியன் மற்றும் அரசியின் பிளாஷ்பேக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 585ஆவது எபிசோடு
அரசி தொடர்ந்த வழக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 585ஆவது எபிசோடில் தீர்ப்பு சொல்லும் நேரம் வந்து விட்டது. உண்மையில் குமரவேலுவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதா? அரசி தனது வழக்கை திரும்ப பெற்றாரா? என்பது பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்ற முழு தொகுப்பையும் இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 585ஆவது எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசி மற்றும் பாண்டியன் பிளாஷ்பேக் காட்சிகள்!
இதில், குமரவேல் தன்னை கடத்தியதாக சொல்லப்படும் அரசி கொஞ்ச நாட்கள் அவரது வீட்டில் வாழ்ந்துள்ளார். இப்படி எந்த பொண்ணாவது அப்படி வாழ்வார்களா? என்று குமரவேல் தரப்பு வழக்கறிஞர் கேட்க, அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அரசி அவர்களது வீட்டில் வாழ்ந்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தது. அதே போன்று தான் குமரவேல் அரசியை கடத்தியதற்கும் ஒரு காரணம் இருந்தது. அது இருவரும் காதலித்தது தான், அந்த காரணம். இதில் துளி கூட உண்மையில்லை. எதிர்க்கட்சி தரப்பு வக்கீல் இந்த வழக்கை திசை திருப்புகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கோர்ட் சீன்
எந்தெந்த விதத்தில் அரசியை மிரட்டினார், எப்படி அரசியை அவர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தார் என்பதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறேன் என்றார் அரசி தரப்பு வழக்கறிஞர். குமரவேல் கடத்தி சென்றதால் அரசியின் திருமணம் நின்றது. அதனால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டது. அந்த அவமானத்திலிருந்து குடும்பத்தை பாதுகாக்கவே அரசி, குமரவேல் திருமணம் செய்ததாக சொல்லிவிட்டு அவரது வீட்டில் வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு தான். மேலும், அந்த வீட்டில் அரசி சந்தோஷமாக வாழவில்லை. தொடர்ந்து குமரவேல், அரசிக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.
குமரவேலுவிற்கு கடுமையான தண்டனையா?
அப்படி விதிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். அரசியை கடத்தி, அவரது வாழ்க்கையை சீரழிக்க நினைத்த குமரவேலுவிற்கு கடுமையான தண்டனை வழங்கி இந்த நீதிமன்றம் ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அரசி தரப்பு வழக்கறிஞர் அருமையாக வாதாடினார். இதைத் தொடர்ந்து நிதிபதியிடம் நீ ஏதாவது சொல்ல ஆசைப்படுகிறாயா என்று குமரவேலுவிடம் கேட்க, அதற்கு மனம் திருந்திய குமரவேல் அரசி தரப்பிலிருந்து சொல்லப்படும் எல்லாம் உண்மை தான். நான் தான் தப்பு செய்தேன். அதற்கு என்ன தண்டனையோ அதனை அனுபவிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று குமரவேல் கண்ணீர் மல்க கூறினார்.
கூலி படத்தில் நடிச்சது மிகப்பெரிய தவறு... ஆமிர் கான் இப்படி சொன்னாரா? உண்மை பின்னணி என்ன?
கிளைண்ட் ரொம்பவே பயந்துவிட்டார்
அப்போது குறுக்கிட்ட குமரவேல் தரப்பு வழக்கறிஞர், கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என்று என்னுடைய கிளைண்ட் ரொம்பவே பயந்துவிட்டார். அதனால், தான் இப்படியெல்லாம் பேசுகிறார் என்றார். அவர் பேசுவதை எல்லாம் நீங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும், எங்கள் தரப்பிலிருந்து சாட்சி சொல்ல அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதியோ சாட்சிகள் இருந்தால் இப்போதே கோர்ட்டில் ஆஜர்படுத்தலாம். குற்றம் சாட்டப்பட்டவரே குற்றத்தை ஒத்துக் கொண்டுவிட்டார். அப்படியிருக்கும் போது எந்த சாட்சி, யாருடைய சாட்சியை கொண்டு வருவீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அரசியிடம் நீதிபதி கேள்வி கேட்டார்
அதன் பின்னர் தான் அரசியிடம் நீதிபதி கேள்வி கேட்டார். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்கவே, அதற்கு அரசியோ தனது அம்மா, மாமாவின் குடும்பம், பாட்டி என்று எல்லோரையும் மனதில் வைத்துக் கொண்டு இந்த கேஸை நான் வாபஸ் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறவே குமரவேல், சக்திவேல், கோமதி, பாண்டியன், சரவணன், கதிர் என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் அரசி மற்றும் பாண்டியன் இருவரும் பேசிய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், அரசி தான் என்ன நினைக்கிறேன் என்பதை தனது அப்பாவிடம் கூறியிருக்கிறார். அது என்னவென்றால், இவளுக்காக நாம் என்னென்னவோ செய்கிறோம்.
அரசி மற்றும் குமரவேல் பிளாஷ்பேக் காட்சிகள்
இவள் இப்படியெல்லாம் செய்கிறாள் என்று கோப்பபடாதீங்க, என்னை தப்பா நினைக்காதீங்க, அப்பா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா நாம் இந்த கேஸை வாபஸ் வாங்கிவிடலாமா, ஆமாம் அப்பா, இந்த வழக்கை நாம் வாபஸ் பெற்றுவிடலாம் என்று சொல்ல, அதற்கு ஆத்திரப்பட்ட பாண்டியன், அவன் ஏதாவது பேசுனானா, மிரட்டுனானா சொல்லுப்பா அவனை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறேன் என்று வீராப்பாக பேசினார். அதற்கு அரசியோ, அப்பா குமரவேல் பண்ணது மன்னிக்க முடியாது தப்பு தான். அவன் மீது எனக்கு கோபம் இருக்கு, அவன் மேல் எனக்கு கொஞ்சம் கூட பரிதாபமோ, கருணையோ வராது. அவன் பண்ண தப்புக்காக அவனது குடும்பமும் சேர்ந்து தண்டனையை அனுபவிக்கிறதில் எனக்கு உடன்பாடு இல்லை.
குமரவேலுவிற்கு தண்டனை கிடைக்குமா?
அந்த வீட்டில் நான் கொஞ்ச நாள் தான் இருந்தேன். அம்மாச்சி, பெரிய மாமா, அத்தை என்று எல்லோருமே என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். நாம், ராஜீயை எப்படி பார்த்துக் கொள்கிறோமோ, அதே போன்று தான் என்னையும் பார்த்துக் கொண்டார்கள். அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் நல்லவர்கள் தான். அதனால், இந்த கேஸை வாபஸ் பெற்றுவிடலாம். என்னுடைய அப்பா என்னை நல்லவிதமாக வளர்த்த நிலையில் இந்த முடிவை எடுத்தேன். ஒருவேளை குமரவேல் ஜெயிலுக்கு சென்றுவிட்டால் நம்முடைய ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடாமல் போய்விடும். நீங்க அம்மாவாக நினைத்த அம்மாச்சிக்காக இந்த கேஸை வாபஸ் வாங்கிவிடலாம் அப்பா என்று முடிவு செய்தார்.
கேஸை வாபஸ் வாங்க என்ன காரணம் என்று நீதிபதி கேட்டார்
இதைத் தொடர்ந்து கோர்ட் காட்சி வரவே கேஸை வாபஸ் வாங்க என்ன காரணம் என்று நீதிபதி கேட்க, தப்பு செய்தவரே தப்ப ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது. அதன் பிறகு அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்காக இவரை நான் மன்னித்துவிட்டேன் என்றெல்லாம் அர்த்தம் இல்லை. இந்த பிரச்சனையில் எங்களுடைய ரெண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கு. அதனால், வீட்டில் இருப்பவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.
குமரவேல் ஜெயிலுக்கு சென்றால் என்ன நடக்கும்?
மேலும், எனக்கு நடந்தது பெரிய துயரம் தான். ஆனால், இவன் ஜெயிலுக்கு சென்றுவிட்டால் அதைவிட பெரிய துயரத்தை அவனுடைய குடும்பம் அனுபவிக்கும். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் இந்த கேஸை நான் வாபஸ் வாங்குறேன் என்றார். அரசி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமரவேலுவிற்கு இது சந்தோஷத்தை ஏற்படுத்தியது. சக்திவேலும் இன்ப அதிர்ச்சியில் இருந்தார். பாண்டியனுக்கு இதை பற்றி நன்கு தெரிந்த நிலையில் அவர் அமைதியாக இருந்தார். ஆனால், கோமதி ஆனந்த கண்ணீர் வடித்தார். இதற்கிடையில் சரவணன் மற்றும் கதிர் இருவரும் தான் அரசி பேசுவதைக் கேட்டு ஆத்திரமடைந்தனர். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 585ஆவது எபிசோடு முடிந்தது. இனி அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்பதை நாளைய புரோமோ வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.