- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு வீடியோவை அனுப்பிய நபர் கதிர் தான் என தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் சண்டை போட்டுள்ளார் ஜனனி. இதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் போனுக்கு ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை அனுப்பி வைத்த ராவணன் ஆதி முத்து, அதை சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இதனால் கன்பியூஸ் ஆன ஜனனி, அந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்க மதிவதினியின் உதவியை நாடினார். அவரும் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளின் மூலம் அதுபற்றி விசாரிக்க சொல்லி இருந்தார். இந்த கேப்பில் ஜனனி, ஈஸ்வரியுடன் காரில் சேலை எடுக்க சென்றபோது அவருக்கு மற்றுமொரு வீடியோ வந்தது. அதைப்பற்றி இந்த எபிசோடில் பார்க்கலாம்.
கேம் ஆடும் ராவணன்
ஜனனி அந்த வீடியோவை ஓபன் பண்ணி அனைவரிடமும் காட்டியபோது அதில் ஒரு பொம்மை படம் இருந்தது. இதனால் அனைவரும் அப்செட் ஆகினர். பின்னர் புடவை எடுக்க கடைக்குள் சென்றபோது ஜனனிக்கு போன் பண்ணிய ராவணன், அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்கிறார். ஜனனியும் அவரின் பேச்சைக் கேட்டு ரோடு ரோடாக அலைகிறார். பின்னர் அவர் தன்னை வைத்து கேம் ஆடுகிறார் என தெரிந்ததும், மதிவதினிக்கு போன் போட்டுவிட்டு, அவரது வீட்டுக்கு செல்கிறார் ஜனனி. அங்கு சென்றதும், அந்த மர்ம நபர் பற்றி கூறும் ஜனனி, அவரை கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார்.
ஜனனிக்கு தெரியவரும் உண்மை
பின்னர் மதிவதினி தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் நம்பர் கொடுத்து அதை டிராக் பண்ணுமாறு சொல்ல, அப்போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் அந்த நம்பரை டிராக் பண்ணி அது யார் பெயரில் இருக்கிறது என்பதை கூறி இருக்கிறார்கள். அந்த போன் நம்பர் கதிர்வேல் ஆதி முத்து பெயரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதைக்கேட்டதும் கடும் கோபமடைந்த ஜனனி, அப்போ அந்த வீடியோ அனுப்பியது கதிர் தானா என சந்தேகப்படுகிறார். அவனை ஒரு வழி பண்ணுகிறேன் என சொல்லிவிட்டு ஜனனி வீட்டுக்கு கிளம்புகிறார். அதற்குள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோர் சேலை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள்.
கதிர் கொடுத்த ட்விஸ்ட்
அவர்கள் வீட்டுக்கு வந்ததும் கதிர் ஜனனி எங்கே என கேட்க, அவள் ஏதோ வீடியோ விஷயமா யாரையோ பார்க்க சென்றிருப்பதாக சொல்ல, அதற்கு கதிர், அவளுக்கு இதே வேலையாபோச்சு, வேண்டுமென்றால் நீங்களே பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ இங்க வருவா, வந்து என்மேலயோ, இல்ல அண்ணன் மேலயோ ஏதாச்சும் ஒரு பழியை போடுவா பாருங்க என ஈஸ்வரியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து கரெக்டாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. வந்த வேகத்தில் டேய் கதிர்வேல் கீழ வாடா என சொல்லி கத்துகிறார். இதைப்பார்த்து அனைவரும் கன்பியூஸ் ஆகிறார்கள்.
பிரச்சனை பண்ணும் ஜனனி
கதிர் மாடியில் இருந்து கீழே வந்ததும், நீயே எனக்கு வீடியோ அனுப்புற, அதுக்கப்புறம் நீயே டெலிட் பண்ணுற என கேட்கிறார். உடனே கதிர், அங்கிருந்தவர்களிடம், நான் சொல்லல இவ இப்படி தான் பண்ணுவான்னு என சொல்ல, அனைவரும் ஜனனியிடம் என்ன ஆச்சு என கேட்கிறார்கள். கதிர் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதி குணசேகரன் பற்றிய வீடியோவை அவர் ஏன் தனக்கு அனுப்ப வேண்டும் என்கிற குழப்பமும் ஜனனியிடம் இருக்கிறது. ஆக மொத்தம் அந்த வீடியோவால் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இதன்பின் என்ன ஆனது எனபதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

