- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனிக்கு வில்லியாக மாறும் ஈஸ்வரி; குணசேகரனை பிளாக்மெயில் செய்யும் ராவணன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜனனிக்கு வில்லியாக மாறும் ஈஸ்வரி; குணசேகரனை பிளாக்மெயில் செய்யும் ராவணன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு எதிராக ஈஸ்வரியை திருப்பிவிட கதிர் மற்றும் ஞானம் ஒரு டிராமாவை போட்டுள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு ராவணன் வீடியோ அனுப்பி டெலிட் பண்ணிய நிலையில், அதுதொடர்பாக மதிவதினியை சந்தித்து பேசி உள்ளார் ஜனனி. அப்போது அந்த வீடியோ அனுப்பியவன் கண்டிப்பாக நமக்கு நல்லது செய்வதற்காக அனுப்பவில்லை. அவன் ஏதோ சதி செய்கிறான் என்று சந்தேகிக்கிறார் ஜனனி. மதிவதினியும் அது கண்டிப்பாக வெளி ஆளாக இருக்க வாய்ப்பு இல்லை. நமக்கு தெரிந்த ஒருவன் தான் இந்த வேலையை செய்திருக்கிறான் என ஹிண்ட் கொடுக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கதிர் கொடுத்த ட்விஸ்ட்
ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் ஈஸ்வரியிடம் பேசும் கதிர் மற்றும் ஞானம் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள். ஜனனிக்கு புத்தி பேதளித்துவிட்டதாகவும், அவர் ஒருநிலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி அவள் இந்த வீட்டில் இருந்தால் எந்த நல்லதுமே நடக்காது என கூறும் கதிர், அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தையின் நல்லதுக்காக சொல்கிறேன். கொஞ்ச நாளைக்கு ஜனனியும், சக்தியும் வெளியே சென்று தங்கட்டும் என கூறி இருக்கிறார். கதிரின் இந்த பேச்சைக் கேட்டு ஷாக் ஆன நந்தினி மற்றும் ரேணுகா, அவர்களை தடுக்க பார்க்கிறார்கள். ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.
ஜனனிக்கு எதிராக திரும்பும் ஈஸ்வரி
ஈஸ்வரியும் அவர்கள் சொல்லும் ஐடியா நன்றாக இருக்கிறது என சொல்வதோடு, எனக்கும் ஜனனியின் நடவடிக்கைகளில் எனக்கே நிறைய குழப்பம் இருக்கிறது என ஈஸ்வரி சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரனின் பிளான்படி ஈஸ்வரியை வைத்து ஜனனியை அந்த வீட்டை விட்டே துரத்த ஆயத்தமாகிறார்கள் கதிர் மற்றும் ஞானம். ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுக்கு திருமணம் செய்ய உள்ளதற்கு ஜனனி எதிர்ப்பு தெரிவித்தால், அவரை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வார் போல தெரிகிறது. அவரை துரத்திவிட்டு நந்தினி மற்றும் ரேணுகாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்வார்கள்.
ஆதி குணசேகரனுக்கு ஆப்பு
ஜனனியை வீட்டை விட்டு துரத்தும் பிளான் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது என்கிற மிதப்பில் ஆதி குணசேகரன் இருக்க, அவரது போனுக்கு ஒரு வீடியோ வருகிறது. அது வேறேதுவுமில்லை அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தான். அந்த வீடியோவை அனுப்பிவிட்டு ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு பேசிய ராவணனிடம் நீ யாருயா என குணசேகரன் கேட்க, உங்களுக்கு கூட பொறந்தவன்னு நினைச்சுக்கோங்க என சொல்கிறார். இதனால் இந்த வீடியோவை வைத்து ஆதி குணசேகரனை பழிவாங்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறார் ஆதி முத்து ராணா. அவருடன் அறிவுக்கரசியும் கூட்டு சேர வாய்ப்புள்ளது.
ஷாக் ஆன ஈஸ்வரி
மறுபுறம் வீட்டில் தர்ஷன் பார்கவிக்கான திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் போது பார்கவி குடும்பத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஈஸ்வரி கேட்கிறார். அப்போது அதற்கு பதில் சொல்லும் ஜனனி, அவளுக்கு அப்பா இருந்தாரு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவர் இறந்தார். அவரை அடிச்சு சித்ரவதை பண்ணி சாகடிச்சாங்க என ஜனனி வாய்தவறி சொல்லிவிட, யார் செஞ்சாங்க என ஈஸ்வரி கேட்கிறார். அவர் ஷாக் ஆகிறார். இதனால் பார்கவியின் அப்பாவை கதிர் அடித்து கொன்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரியவர வாய்ப்புள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

