- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தர்ஷனுக்கு மீண்டும் கல்யாணம்... ஈஸ்வரியின் ஆசை நிறைவேறுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
தர்ஷனுக்கு மீண்டும் கல்யாணம்... ஈஸ்வரியின் ஆசை நிறைவேறுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுக்கும், மருமகள் பார்கவிக்கும் மீண்டும் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டுள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் வாழ்க்கைக்கு குடைச்சல் கொடுத்து வந்த அறிவுக்கரசியை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார் ஈஸ்வரி. தன்னை வெளியே துரத்திய ஆதி குணசேகரனின் குடும்பத்தை வேறோடு அறுக்க காத்திருக்கிறார் அறிவுக்கரசி. இதற்காக அவருக்கு சப்போர்ட் பண்ண ராவணன் ஆதி முத்து களத்தில் இறங்கி உள்ளார். அவரும் ஆதி குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்கிற முனைப்போடு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனிடையே வீட்டில் மற்றுமொரு பிரச்சனை வெடித்துள்ளது. அது என்ன என்பதை இன்றைய எபிசோடில் விரிவாக பார்க்கலாம்.
ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மைகள்
மெமரி லாஸ் ஆன ஈஸ்வரிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்துபோனது. அதை மறுபடியும் அவரது நினைவுக்கு கொண்டு வர நினைத்தால், அது ஆபத்தில் முடியலாம் என டாக்டர் எச்சரித்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தர்ஷனுக்கும், பார்கவிக்கும் திருமணம் முடிந்த விஷயம் ஈஸ்வரிக்கு தெரியவருகிறது. அதைக்கேட்டதும் மயக்கம் போட்டு விழுந்தார் ஈஸ்வரி. பின்னர் தான் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே அவர்களது திருமணம் நடைபெற்றது என்றும், நீங்கள் விருப்பப்பட்ட படியே அவர்களுக்கு திருமணம் முடிந்தது என்றும் கூறுகிறார்கள்.
அப்பத்தா சொன்ன முக்கிய விஷயம்
அதுமட்டுமின்றி அப்பத்தா வீட்டிற்கு ஈஸ்வரியை பார்க்க வந்திருந்தபோது, அவர் ஈஸ்வரியை மாடிக்கு தனியாக அழைத்து சென்று, உனக்கு அதிர்ச்சியான விஷயங்கள் எல்லாரும் சொல்லிருப்பாங்க, நான் ஒரு குட் நியூஸ் சொல்கிறேன் என்று ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் தமிழ் சோறு பிசினஸ் நடத்திய விஷயத்தை கூறுகிறார். அதை ஆதி குணசேகரன் சதி செய்து மூட வைத்ததையும் சொல்லிய அப்பத்தா, அதை மீண்டும் நீங்கள் திறப்பதாக இருந்தால் அதற்கு நான் உறுதுணையாக இருக்கிறேன் என்றும் கூறி இருக்கிறார். இதனால் ஈஸ்வரி, ஜனனி ஆகியோர் செம சந்தோஷத்தில் இருக்கிறார்.
தர்ஷன் - பார்கவி இடையே மனக்கசப்பு
இப்படி ஈஸ்வரிக்கு ஒவ்வொரு விஷயமாக தெரிந்து அவர் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி வரும் நிலையில், அவரது மகன் தர்ஷன், தன் மனைவி பார்கவி உடன் இணக்கமாக இருக்க முடியவில்லை என்கிற சோகத்தில் இருக்கிறார். பார்கவி ஏதோ ஒரு குழப்பத்திலேயே இருக்கிறார். இதனால் அவரால் தர்ஷன் உடன் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இதனை ஜனனியிடம் சொல்லி புலம்பிய தர்ஷன், பார்கவியை அழைத்து பேசுமாறு சொல்ல, அவரும் பார்கவியை தனியாக அழைத்து சென்று பேசி உள்ளார். அவர்கள் பிரச்சனை முடிவதற்குள் வீட்டில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் நடந்துள்ளது.
ஈஸ்வரியின் ஆசை
ஈஸ்வரி, தன்னுடைய கணவர் ஆதி குணசேகரனிடம் பேசுகையில், தான் தர்ஷனின் திருமணத்தை நேரில் பார்க்காததால், அவனுக்கும் பார்கவிக்கும் மீண்டும் திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுவதாக கூறி உள்ளார். இதைக்கேட்ட ஆதி குணசேகரன், வீட்டில் வைத்தே தாய் மீனாட்சி முன்னிலையில் சிறப்பா நடத்திவிடலாம் என கூறுகிறார். அதற்கு முன் அன்புக்கரசிக்கும், தர்ஷனுக்கும் திருமணம் பதிவாகி உள்ளதை எப்படியாவது நீக்க வேண்டும் என கூறுகிறார். ஏனெனில் அதைவைத்து அறிவுக்கரசி நம்மளை பழிவாங்க திட்டமிடுவாள் என கூறுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

