- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஈஸ்வரிக்கு அப்பத்தா சொன்ன குட் நியூஸ்; கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஈஸ்வரிக்கு அப்பத்தா சொன்ன குட் நியூஸ்; கரிகாலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை தனியாக அழைத்துச் சென்றுள்ள அப்பத்தா அவருக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி பழசை எல்லாம் மறந்து விட்டதால் அவருக்கு ஒவ்வொரு நிகழ்வாக மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் ஜனனி. அதன்படி ஜீவானந்தம் பற்றி ஜனனி கேட்டதும் சற்று அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி அவரை எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கிறார். அதற்குள் வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கும் அப்பத்தா, ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆன விஷயம் தெரியாமல் அவரிடம் இவ்வளவு பிரச்சனை நடந்தும் நீ எப்படி இவ்வளவு சாந்தமாக இருக்க என கேட்கிறார். அப்போது அருகில் இருந்த ஆதி குணசேகரன் சற்று ஷாக் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஈஸ்வரியை தனியாக அழைத்து செல்லும் அப்பத்தா
ஈஸ்வரிடம் அப்பத்தா பேசிக் கொண்டிருக்க, அவரை தடுத்து நிறுத்தும் குணசேகரன் நீ பாட்டுக்கு வந்து எதுவும் குட்டையை குழப்பி விட்டு விடாதே எனக் கூறுகிறார். வெளியே சென்று இருந்த கதிர் மற்றும் ஞானம் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது அப்பத்தாவை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறார்கள். அவர் ஈஸ்வரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஷாக்கான கதிர், நீங்க ஏன் பழசை எல்லாம் பேசுறீங்க என சொல்லி அவரை தடுத்து நிறுத்துகிறார். இதையெல்லாம் நோட் பண்ணும் ஈஸ்வரி என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது என சொல்ல, பின்னர் அவரை மாடிக்கு அழைத்துச் செல்லும் அப்பத்தா உன்னிடம் நிறைய விஷயம் சொல்ல வேண்டி இருக்கு என கூறுகிறார்.
அப்செட் ஆன ஆதி குணசேகரன்
அப்பத்தா, ஈஸ்வரியை மாடிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசுவதை அறிந்த ஆதி குணசேகரன் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பயத்திலேயே அமர்ந்திருக்கிறார். அதுமட்டும் இன்றி விசாலாட்சியிடம் உன்னுடைய அத்தக்காரி காலம் போன காலத்துல என்ன பண்ணிக்கிட்டு இருக்கா பாரு. எதுக்கு தனியா கூட்டிட்டு போய் பேசுறா என கேட்கிறார். இப்போதான் நிம்மதியா இருக்கோம் அது பிடிக்கல அவளுக்கு, மாடிக்கு போய் இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி ஈஸ்வரியை மாற்ற பார்க்கிறார்களா என கேட்டு ஆதங்கத்தை கொட்டுகிறார் ஆதி குணசேகரன். அதெல்லாம் இருக்காது என சொல்லி விசாலாட்சி மழுப்புகிறாள்.
அப்பத்தா சொல்லும் குட் நியூஸ்
மாடியில் ஈஸ்வரிடம் பேசிக் கொண்டிருக்கும் அப்பத்தா உன்கிட்ட அதிர்ச்சியான தகவலை சொன்னதுக்கு அப்புறம் சந்தோசமான தகவலையும் சொல்லனும் இல்லையா என கேட்கிறார். அங்கிருந்த ஜனனியை பார்த்து, என்ன ஜனனி அந்த ஹேப்பியான நியூஸ சொல்லிடலாமா என கேட்கிறார் அப்பத்தா. இப்படி ஈஸ்வரிக்கு அப்பத்தா சொல்லப்போகும் ஹேப்பியான நியூஸ் என்ன? என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர்களின் தமிழ் சோறு பிசினஸை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஏதேனும் குட் நியூஸ் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தமிழ்ச்சோறு பிசினஸ் ஈஸ்வரியின் ட்ரீம் ப்ராஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
கரிகாலனுக்கு ஷாக்
இத்தனை நாட்களாக ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்த கரிகாலன் தற்போது வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார். வந்த வேகத்தில் ஈஸ்வரியிடம் சென்று நீங்கள் பழசையெல்லாம் மறந்து விட்டீர்கள் என சொன்னார்கள். மத்தவங்களை எல்லாம் மறந்தால் பரவாயில்லை என்னையுமா மறந்துட்டீங்க என கேட்கிறார். அப்போது ஈஸ்வரி, நீங்க யாருன்னு எனக்கு தெரியல தம்பி என சொன்னதும் கரிகாலன் ஷாக் ஆகிறான். அதைக் கேட்ட நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி ஆகியோர் நக்கலாக சிரிக்கிறார்கள். கரிகாலன் வரவால் வீட்டில் ஏதோ பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது என்ன பிரச்சனை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

