- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Anna Serial: முத்துபாண்டியை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி; எச்சரிக்கும் ஆன்மா? அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: முத்துபாண்டியை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி; எச்சரிக்கும் ஆன்மா? அண்ணா சீரியல் அப்டேட்!
சண்முகம் குடும்பத்தை எப்படி பிரிப்பது என யோசித்து கொண்டிருந்த சௌந்தரபாண்டி தற்போது வெங்கடேஷ், முத்து பாண்டியை வைத்து கேம் ஆட துவங்கியுள்ள நிலையில், என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்:
தங்கைகளுக்கு ஒரு அப்பாவாக வாழும் உன்னத பாசத்தை வெளிப்படுத்தி வரும் சீரியல் தான், 'அண்ணா'. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துடன் கிளினிக் கிளம்பி செல்லும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
கோபம் கொள்ளாத பரணி:
சண்முகம் அமெரிக்காவுக்கு போக வேண்டாம் கூறியதால், பரணி அவன் மீது கோவமாக இருப்பாள் என்பது சண்முகத்தின் யூகமாக இருந்தாலும், பரணி சண்முகத்திடம் எந்த ஒரு கோபத்தையும் வெளியே காட்டாமல் மிகவும் சாதாரணமாக இருக்கிறாள். கிளீனிக் வந்ததும், நீ போய் டீ வாங்கிட்டு வா என சாதாரணமாக சொல்ல, பரணியின் நடவடிக்கையால் சண்முகம் குழப்பம் அடைகிறான்.
பதறிய இசக்கி; ஷண்முகம் சொல்லியும் கேட்காமல் பரணி எடுத்த முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்!
பரணியை பிரிக்க நினைக்கும் சௌந்தரபாண்டி
மறுபக்கம் சௌந்தரபாண்டி, வெங்கடேஷை பார்த்து, பரணி அமெரிக்கா போவது பத்தி நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என கேட்க, அது அவங்க தனிப்பட்ட விஷயம் இதுல நான் என்ன சொல்ல முடியும் என சாதாரணமாக பதில் சொல்ல, அப்படியெல்லாம் நீங்க இருந்திட கூடாது. அவங்க உங்க வாழ்க்கையில தலையிடுறாங்க. அந்த மாதிரி நீ அவங்க வாழ்க்கையில நீங்களும் தலையிடனும். அவங்க உன் பேச்சை கேட்கிற மாதிரி நீங்கி செய்யணும் அப்போதானே நீங்க அந்த வீட்டு மருமகன் என சொல்லி... பரணி மற்றும் சண்முகம் பிரிஞ்சா தான் உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும் என்று தூபம் போடுகிறார். ஏற்கனவே சண்முகம் குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் வெங்கடேஷுக்கு இது துருப்பு சீட்டு போல் அமைகிறது.
சூடாமணி ஆன்மா சொன்ன விஷயம்:
இதைத் தொடர்ந்து வைகுண்டம் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட, அவன் முன்பு தோன்றும் சூடாமணி ஆன்மா, பரணிய அமெரிக்க அனுப்பிடாதீங்க அவ அமெரிக்கா போயிட்ட அந்த சௌந்திர பாண்டி நம்ப குடும்பத்தை பிரித்து விடுவான் என்று சொல்கிறது.
முத்துபாண்டியை ஏத்திவிட்ட சொந்தரபாண்டி:
வெங்கடேஷை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்... முத்துப்பாண்டியை சந்தித்து, அந்த சண்முகம் அவன் தங்கச்சிக்காகவும், அவங்க வாழ்க்கைக்காவும் என்னென்னவோ செய்றான், ஆனால் நீ உன் தங்கச்சிக்காக எதுவும் பண்ண மாட்டியா? அவ வாழ்க நல்ல இருக்கணும்னு நீ நினைச்சா பரணியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிற வழிய பாரு என்று சொல்ல முத்துப்பாண்டியும் இது பற்றி யோசிக்கிறான். அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகும், இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பற்றி அறிய தொடர்ந்து சீரியலை பாருங்கள்.