- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்துவை காப்பாற்றிய சின்னத்தம்பியை மகனாக ஏற்றுக் கொண்ட அபிராமி நாச்சியார் – மகளே என் மருமகளே சீரியல்!
முத்துவை காப்பாற்றிய சின்னத்தம்பியை மகனாக ஏற்றுக் கொண்ட அபிராமி நாச்சியார் – மகளே என் மருமகளே சீரியல்!
Abirami Thanks Chinnathambi in Magale En Marumagale Serial : மகளே என் மருமகளே என்ற தொடரில் முத்துவை காப்பாற்ற அவரை தூக்கிக் கொண்டு வரும் சின்னத்தம்பிக்கு அவரது வீட்டிலேயே வேலை கிடைக்கிறது.

முத்துவை காப்பாற்றிய சின்னத்தம்பியை மகனாக ஏற்றுக் கொண்ட அபிராமி நாச்சியார் – மகளே என் மருமகளே சீரியல்!
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று தான் மகளே என் மருமகளே. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் நவீன் குமார், அவினாஷ் அசோக், வர்ஷினி சுரேஷ், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலானது ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகுவா ஓ மகுவா என்ற சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளே என் மருமகளே சீரியல் 7ஆவது எபிசோடு
இதில் வர்ஷினி சுரேஷ் இதற்கு முன்னதாக நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்துள்ளார். அந்த சீரியலில் பணக்கார வீட்டு பெண்ணாக படித்து வேலை பார்க்கும் பெண் ரோலில் நடித்திருந்தார். தற்போது மகளே என் மருமகளே என்ற சீரியலில் ஒரு நடுத்தர வீட்டு பெண் ரோலில் நடித்துள்ளார். ஆனால், ரேஷ்மா பசுபுலேட்டி பணக்கார வீட்டு பெண்ணாகவும் ஊருக்கு நாட்டாமை அதாவது பஞ்சாயத்து சொல்லும் அபிராமி நாச்சியார் என்ற ரோலில் நடித்துள்ளார். இவரது மகன் தான் நவீன் குமார். முத்து என்ற ரோலில் நடித்துள்ளார். அவினாஷ் அசோக் சின்னத்தம்பி என்ற ரோலில் அபிராமி வீட்டு வேலைக்காரனாக நடித்து வருகிறார்.
அபிராமி நாச்சியார், முத்து, சின்னத்தம்பி, மகளே என் மருமகளே இன்றைய எபிசோடு
இந்த சீரியலானது மாமியார் மற்றும் மருமகள் இடையிலான கதையை மையப்படுத்திய சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய 7ஆவது எபிசோடில் அபிராமி நாச்சியாரின் வாரிசான முத்துவை கருந்தேள் ஒன்று கடித்து அவர் மயங்கி விழுந்துவிட்டார். அதன் பிறகு அங்கு சின்னத்தம்பியாக வரும் அவினாஷ் அவரை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு மருத்துவரான அவரது அப்பா முத்துவிற்கு மருந்து போட அபிராமி நாச்சியார் முத்துவை தனது மடி மீது வைத்து அழுகிறார். தங்கமே, என்னை பெத்த ராசா, நான் பெத்த ராசா கண்ணை திறந்து பாரு என்று கதறி அழுகிற முத்துவும் கண் விழுக்கிறார்.
மகளே என் மருமகளே சீரியல், மகளே என் மருமகளே சீரியல் நடிகர் நடிகைகள்
அவரை தூக்கிக் கொண்டு வந்த சின்னத்தம்பிக்கு அனைவரும் நன்றி தெரிவிக்க, அவர் அபிராமி நாச்சியாரை தனது அம்மாவாக எண்ணிக் கொண்டேன் என்று சொல்கிறார். நான் செல்லும் ஊர் தான் எனக்கு சொந்த ஊர், அங்குள்ளவர்கள் தான் எனது உறவினர்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவர் தனது பையை எடுத்துக் கொண்டு செல்ல, அவரை தங்கமே என்று அபிராமி நாச்சியார் கூப்பிடுகிறார். நீயும் இந்த வீட்டில் ஒருவன் தான் என்று சொல்ல, அவரும் முத்துவை சின்னையா என்று கூப்பிடுகிறார்.
மகளே என் மருமகளே புதிய சீரியல்
இதைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க சீட்டு போடும் துளசி முதல் சீட்டுக்காக வரும் போது அந்த சீட்டு பிடிக்கும் அவரது பெண் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டே வெளியில் வர மறுக்கிறார். அதன் பிறகு துளசி தன்னிடம் ரூ.5000 இருக்கு. தான் அதனை செலுத்த வந்த போது தான் நீங்கள் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தீங்க. என்னால், ரூ.5000 கூட கட்ட முடியாதா என்று கேட்கிறார் துளசி. அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.