போட்டிபோட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... டிவி-யில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்கள் வரும் என்பதால் வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ரிலீசாகி உள்ளது.
பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியாவது போல், தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சூப்பர்ஹிட் படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவி
சன் டிவியில் வருகிற ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படமும், மதியம் 2 மணிக்கு சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படமும், மாலை 6.30 மணிக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ஜனவரி 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பேட்ட திரைப்படமும், மதியம் 2 மணிக்கு விஜய் நடித்துள்ள தெறி படமும், மாலை 6.30 மணிக்கு விஷாலின் லத்தி படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜய் டிவி
விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு விஜய் சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படமும், மதியம் 2 மணிக்கு ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படமும், மாலை 5.30 மணிக்கு ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16-ந் தேதி காலை 10 மணிக்கு அருண்விஜய் நடித்த ஓ மை டாக் படமும், மதியம் 12.30 மணிக்கு கார்த்தியின் விருமன் படமும், மாலை 4 மணிக்கு கமலின் விக்ரம் படமும் ஒளிபரப்பரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... கூடுதல் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு... துணிவை தட்டிவிட்டு தாறுமாறாக அதிகரிக்கப்படும் வாரிசு பட ஷோக்கள்
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற ஜனவரி 15-ந் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் திரைப்படமும், மதியம் 3.30 மணிக்கு அருண் விஜய்யின் யானை திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் மாட்டுப்பொங்கல் தினத்தன்று மதியம் 1 மணிக்கு பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படமும், மாலை 3.30 மணிக்கு சசிகுமாரின் காரி படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
கலைஞர் டிவி
பொங்கல் தினமான ஜனவரி 15-ந் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், மதியம் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் ஜனவரி 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று மதியம் 1.30 மணிக்கு சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... துணிவு பட கொண்டாட்டத்தில் இளைஞர் பலி! படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துற வேலையை பாருங்க!DGP அட்வைஸ்