MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 7,80,000 ஆண்டுகளுக்கு பிறகு மாறிய பூமியின் காந்த சக்தி: சாட்டிலைட்டுகளுக்கு பேராபத்து? நாசா சொல்லும் அதிர்ச்சி உண்மை!

7,80,000 ஆண்டுகளுக்கு பிறகு மாறிய பூமியின் காந்த சக்தி: சாட்டிலைட்டுகளுக்கு பேராபத்து? நாசா சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பூமியின் காந்தப்புலம் கடந்த 200 ஆண்டுகளில் 9% வரை பலவீனமடைந்துள்ளதாலும், வட காந்த துருவம் சைபீரியாவை நோக்கி வேகமாக நகர்வதாலும் காந்த துருவ மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 01 2026, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காந்த துருவங்கள் தலைகீழாக மாறும்போது என்ன நடக்கும்?
Image Credit : gemini

காந்த துருவங்கள் தலைகீழாக மாறும்போது என்ன நடக்கும்?

இன்றைய உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இதற்குக் மனிதர்களின் செயல்பாடுகளே முதன்மைக் காரணம் என்பதை நாம் அறிவோம். இருப்பினும், சில ஆய்வாளர்கள் இதனைப் பூமியில் சில ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘காந்த துருவ மாற்றத்துடன்’ தொடர்புபடுத்துகின்றனர். பூமியின் வடக்கு மற்றும் தெற்கு காந்த துருவங்கள் தங்களுக்குள் இடத்தை மாற்றிக்கொள்ளும் நிகழ்வின் போது, பூமியின் பாதுகாப்பாக விளங்கும் காந்தப்புலம் (Magnetic Field) பெருமளவில் பலவீனமடைகிறது. கடந்த 200 ஆண்டுகளில் பூமியின் காந்தப்புலம் சுமார் 9 % பலவீனமடைந்துள்ளது.

இது துருவ மாற்றம் விரைவுபடுத்தப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காந்தப்புலம் பலவீனமடைவதால் விண்வெளியில் இருந்து வரும் 'சூரியக் கதிர்கள்' மற்றும் 'காஸ்மிக் கதிர்கள்' (Cosmic Rays) பூமியின் வளிமண்டலத்திற்குள் எளிதாக ஊடுருவக்கூடும். ஆய்வாளர் ஜேக்கப் ஸ்வென்ஸ்மார்க் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி, இந்தக் கதிர்கள் வளிமண்டலத்தில் ஐயோனியாக்கத்தை (Ionisation) அதிகரித்து, மேகங்களின் அமைப்பிலும் பருவநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது மனிதர்களின் டி.என்.ஏ -வையும் பாதிக்கக்கூடிய 2-ம் நிலை கதிர்வீச்சுகளை உருவாக்கும் திறன் கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மனித இனம் அழியுமா - அறிவியல் உண்மைகள் என்ன?
Image Credit : gemini

மனித இனம் அழியுமா - அறிவியல் உண்மைகள் என்ன?

நாசாவின் (NASA) கூற்றுப்படி, கடந்த காலத்தில் நடந்த காந்த துருவ மாற்றங்கள் எப்போதுமே உயிரினங்களின் மொத்த அழிவிற்கோ அல்லது பெரிய இயற்பியல் பேரழிவுகளுக்கோ வழிவகுத்ததில்லை. படிம ஆதாரங்களும் காந்த துருவ மாற்றத்திற்கும் உயிரின அழிவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், காந்தப்புலம் பலவீனமாக இருக்கும் இடைப்பட்ட காலத்தில், சூரியத் துகள்களின் கதிர்வீச்சு காரணமாக பூமிக்கு சில நடைமுறைச் சிக்கல்கள் வரக்கூடும்:

செயற்கைக்கோள் தொடர்புகள் துண்டிக்கப்படுவது, மின்சார விநியோகக் கட்டமைப்புகள் (Power Grids) பாதிக்கப்படுவது, விமானப் போக்குவரத்து மற்றும் ஜி.பி.எஸ் (GPS) அமைப்புகள் சீர்குலைவது.

34
துருவ மாற்றம் நடக்க எவ்வளவு காலம் ஆகும்?
Image Credit : gemini

துருவ மாற்றம் நடக்க எவ்வளவு காலம் ஆகும்?

காந்த துருவ மாற்றம் என்பது ஒரே இரவில் நடக்கும் திடீர் நிகழ்வு அல்ல. முழுமையான மாற்றம் நடப்பதற்கு 2,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை ஆகலாம். இந்த மாற்றத்தின் போது, பூமியில் ஒரே ஒரு வட துருவம் மற்றும் தென் துருவத்திற்குப் பதிலாக, ஆங்காங்கே பலவீனமான பல சிறிய காந்த துருவங்கள் உருவாகி, பின்னர் மீண்டும் நிலைபெறும். இதை துல்லியமாக கணிப்பது சாத்தியமில்லை. வரலாற்றின் படி, ஒவ்வொரு 2,00,000 முதல் 3,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை காந்த மாற்றம் நடந்துள்ளது. ஆனால், கடைசியாகப் பூமி சந்தித்த மாபெரும் காந்த துருவ மாற்றம் சுமார் 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகும், அடுத்த மாற்றம் எப்போது நடக்கும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது.

44
காந்த துருவ மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதா?
Image Credit : gemini

காந்த துருவ மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதா?

துருவங்கள் தங்களின் இடத்தை மாற்றத் தொடங்கிவிட்டன என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 150–200 ஆண்டுகளில் பூமியின் காந்த சக்தி 9% வரை குறைந்துள்ளது. வட காந்த துருவம் கனடாவின் வடபகுதியில் இருந்து சைபீரியாவை நோக்கி ஆண்டுக்கு 50–60 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தென்னமெரிக்கா மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே காந்தப்புலம் பலவீனமடைந்துள்ள பகுதி விரிவடைந்து வருகிறது. பூமியின் காந்த துருவ மாற்றம் ஏற்கனவே தொடங்கயிருந்தாலும் கூட, அதனால் மனித இனத்திற்கு பேரழிவோ அல்லது உயிரினங்கள் மொத்தமாக அழிவதோ ஏற்படாது என்பதை அறிவியல் ஆதாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rare snake spotted: பார்க்க ஒல்லி... ஆனால் புல்லட் வேகம்; 150 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட அரிய மணல் பாம்பு!
Recommended image2
JioPC: பழைய லேப்டாப் தூக்கிப்போடாதீங்க... வெறும் ரூ.11-க்கு 8GB RAM, 500GB ஸ்டோரேஜ் சூப்பர் கம்ப்யூட்டர் தரும் ஜியோ!
Recommended image3
Jio Offer: ரூ.299-க்கே 4ஜி போன்.. ஜியோ 10வது ஆண்டு சலுகை..எப்படி வாங்குவது தெரியுமா?
Related Stories
Recommended image1
JioPC: பழைய லேப்டாப் தூக்கிப்போடாதீங்க... வெறும் ரூ.11-க்கு 8GB RAM, 500GB ஸ்டோரேஜ் சூப்பர் கம்ப்யூட்டர் தரும் ஜியோ!
Recommended image2
Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved