MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • சுட்டெரிக்கும் சஹாராவில் கொட்டப்பட்ட மில்லியன் கணக்கான தேனீக்கள்: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆப்ரிக்காவின் மெகா ஆபரேஷன் பின்னணி என்ன?

சுட்டெரிக்கும் சஹாராவில் கொட்டப்பட்ட மில்லியன் கணக்கான தேனீக்கள்: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆப்ரிக்காவின் மெகா ஆபரேஷன் பின்னணி என்ன?

2024-ல் அதிநவீன குளிர்சாதன கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு பாலைவனத்தில் திறக்கப்பட்ட மில்லியன் கணக்கான தேனீக்கள், தீவிர மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டு அக்கேசியா போன்ற மரங்களைப் பரவச் செய்தன.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 03 2026, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சுட்டெரிக்கும் சகாராவில் பல லட்சம் சூப்பர் தேனீக்கள்
Image Credit : x

சுட்டெரிக்கும் சகாராவில் பல லட்சம் சூப்பர் தேனீக்கள்

பகலில் 58 டிகிரி செல்சியஸ் கொதிக்கும் அனல்... இரவிலோ நடுங்க வைக்கும் உறைபனி... உயிரினங்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத பூமியின் நரகமாகக் கருதப்படும் சகாரா பாலைவனத்தில், திடீரென லட்சக்கணக்கான தேனீக்களைத் திறந்துவிட்டால் என்ன நடக்கும்? விபரீத விளையாட்டு என உலகம் நினைத்த ஒரு முயற்சி, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதன் பரபரப்பான பின்னணி பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
1. விரிவடையும் சகாராவும் நடுங்கும் உலகமும்!
Image Credit : x

1. விரிவடையும் சகாராவும் நடுங்கும் உலகமும்!

எகிப்து, அல்ஜீரியா, லிபியா என 11 நாடுகளை விழுங்கி நிற்கும் உலகின் மாபெரும் வெப்ப மண்டல பாலைவனமான சகாரா, பருவநிலை மாற்றம் மற்றும் மனிதத் தவறுகளால் சாஹேல் (Sahel) பகுதியை நோக்கித் தெற்கே அசுர வேகத்தில் விரிவடைந்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் கருகிப் பஞ்சம், பட்டினி மற்றும் உள்நாட்டுப் போர்கள் வெடிக்கின்றன.

இங்கிருந்து கிளம்பும் ‘ஹபூப்’ (Haboob) புயல்கள் அட்லாண்டிக் கடலைத் தாண்டி அமெரிக்கா, ஐரோப்பா வரை சென்று மனிதர்களுக்குச் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, பவளப் பாறைகளையும் நாசம் செய்கின்றன. (அதேநேரம் அமேசான் காடுகளுக்கு உரமாக மாறுவதும் ஒரு விசித்திரம்!)

37
2. கிரேட் கிரீன் வால் எனும் கனவும்... நாசா காட்டிய மரண அடியும்!
Image Credit : x

2. கிரேட் கிரீன் வால் எனும் கனவும்... நாசா காட்டிய மரண அடியும்!

பாலைவனத்தை முடக்க 2007-ல் ஆப்ரிக்க யூனியன் களமிறங்கியது. செனகல் முதல் ஜிபூட்டி வரை 8,000 கி.மீ நீளத்திற்கு மரங்களை நட்டுப் பசுமைச் சுவர் எழுப்பும் பிரம்மாண்ட திட்டம் தொடங்கியது.

ஆனால் 2015-ல் நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் ஒரு கசப்பான உண்மையை உடைத்தன. நடப்பட்ட மரங்களில் சுமார் 60% மரங்கள் கடுமையான அனல் காற்றாலும், பாறை போன்ற கெட்டித் தரை மற்றும் மகரந்தச் சேர்க்கை இல்லாததாலும் சுக்குநூறாகக் காய்ந்து கருகிவிட்டன. மரங்களை நட்டால் மட்டும் போதாது, அவை அடுத்த தலைமுறை விதைகளை உருவாக்க மகரந்தச் சேர்க்கை (Pollination) செய்யும் பூச்சிகள் வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.

47
3. களமிறங்கிய ஆப்ரிக்கனைஸ்டு சூப்பர் தேனீக்கள்
Image Credit : x

3. களமிறங்கிய ஆப்ரிக்கனைஸ்டு சூப்பர் தேனீக்கள்

சாதாரணத் தேனீக்களால் சகாராவின் அனலில் ஒரு நிமிடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. அதற்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் 'ஆப்பிரிக்கனைஸ்டு சூப்பர் தேனீக்கள்'! 1956-ல் பிரேசில் மரபியல் ஆய்வாளர் டாக்டர் வார்விக் எஸ்டெவம் கெர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த தேனீக்கள், சாதாரண இனங்களை விட 5 மடங்கு வேகமும், அதீத ஆக்ரோஷமும், பாலைவனத்தின் கடும் வெப்பத்தைத் தாங்கி உயிர்வாழும் அசுர வலிமையும் கொண்டவை.

57
4. ஹை-டெக் குளிர்சாதன கன்டெய்னர்கள்: நள்ளிரவில் அரங்கேறிய ஆப்ரேஷன்!
Image Credit : x

4. ஹை-டெக் குளிர்சாதன கன்டெய்னர்கள்: நள்ளிரவில் அரங்கேறிய ஆப்ரேஷன்!

கொதிக்கும் பாலைவனத்திற்குத் தேனீக்களைக் கொண்டு செல்வது சாதாரண விஷயம் அல்ல. உறைபனி நிலைக்குப் போனால் தேனீக்கள் இறந்துவிடும் என்பதால், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டு ‘ஹைபர்னேஷன்’ (தற்காலிக உறக்க நிலை) போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

சென்சார்கள், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கன்டெய்னர்கள் மூலம் 2024-ல் சாட் (Chad) நாட்டின் பாலைவன எல்லைக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டன. அதிகாலை விடிந்ததும் திறக்கப்பட்ட கன்டெய்னர்களில் இருந்து வெளிப்பட்ட லட்சக்கணக்கான சூப்பர் தேனீக்கள், அக்கேசியா போன்ற வறட்சியைத் தாங்கும் மரங்களில் தீவிரமாக மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட்டன.

67
5. நாசாவைத் திகைக்க வைத்த பசுமைப் புரட்சி... கூடவே வந்த புது ஆபத்து!
Image Credit : x

5. நாசாவைத் திகைக்க வைத்த பசுமைப் புரட்சி... கூடவே வந்த புது ஆபத்து!

விஞ்ஞானிகளின் இந்த உழைப்பு வீண் போகவில்லை! அக்கேசியா மரங்கள் வேகமாகப் பரவி காடாக மாறியதை நாசா படங்கள் உறுதிப்படுத்தின. தாவரங்களின் நீராவிப் போக்கால் காற்றில் ஈரப்பதம் கூடி, பாலைவனத்தின் தகிக்கும் வெப்பம் தணிந்து மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

ஆனால், வெற்றியோடு சேர்ந்து ஒரு பெரும் தலைவலியும் வந்தது! இந்த அதி-ஆக்ரோஷமான தேனீக்களின் எண்ணிக்கை காடுகளோடு சேர்ந்து மளமளவெனப் பெருகி, அருகில் உள்ள மனிதக் குடியிருப்புகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கின. இது உள்ளூர் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் எப்படிப் பாதுகாப்பாகக் கையாள்வது என்பது தற்போது விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

77
7. தேனீக்கள் அழியுமானால் மனிதன் தப்ப முடியாது!
Image Credit : x

7. தேனீக்கள் அழியுமானால் மனிதன் தப்ப முடியாது!

இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை தேனீக்களின் அருமையை உலகம் உணர வேண்டும். நாம் தினசரி தட்டில் வைத்துச் சாப்பிடும் பழங்கள், காய்கறிகளில் 3-ல் ஒரு பங்கு (ஆப்பிள், பாதாம், தக்காளி, வெங்காயம் முதலியவை) தேனீக்களின் உழைப்பால் விளைபவை. கால்நடைகள் உண்ணும் தீவனப் புற்கள் வளரவும் தேனீக்களே தேவை. தேனீக்கள் அழிந்தால் பால், முட்டை, கறி என மனிதனின் முழு உணவுச் சங்கிலியும் சீட்டுக்கட்டு போலச் சரிந்துவிடும்.

தேனீக்களின் இந்த இலவச சேவையால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் சுமார் $235 பில்லியன் முதல் $577 பில்லியன் வரை லாபம் கிடைக்கிறது. ஒரு தேனீ தன் முழு வாழ்நாளில் சேகரிப்பது வெறும் 1/12 தேக்கரண்டி தேன் மட்டுமே. தனக்குக் கிடைக்காத அந்தத் தேனுக்காகவும், இந்த உலகத்தின் எதிர்காலத்திற்காகவும் தன் சிறகுகள் கருகும் வெயிலிலும் அது உழைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
விலை வெறும் ரூ.9,999 தான்... ஆனா 5,000mAh பேட்டரி, 50MP கேமரா: ஏ.ஐ+ போனின் மிரட்டலான சிறப்பம்சங்கள்!
Recommended image2
200MP சென்சார் கேமிரா டூ 100x ஜூம் வரை... DSLR தரத்தில் போட்டோகிராஃபி; ஐபோனைத் தூக்கி சாப்பிடும் ஆண்ட்ராய்டு போன்கள்!
Recommended image3
BSNL 300 Days Plan: 10 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலை இல்லை.. 300 நாட்கள் வேலிடிட்டி பிளான் விலை இவ்ளோதானா
Related Stories
Recommended image1
வெறும் 5.2 கிராம் எடையுள்ள அரிய இரட்டைத் தலை ஆமை: இயற்கையின் அபூர்வ அதிசயம்!
Recommended image2
7,80,000 ஆண்டுகளுக்கு பிறகு மாறிய பூமியின் காந்த சக்தி: சாட்டிலைட்டுகளுக்கு பேராபத்து? நாசா சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved