MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • யூவி டெம்பர்டு , மேட் பினிஷ், செராமிக்: எந்த போனுக்கு எந்த டெம்பேர் கிளாஸ் பெஸ்ட்?

யூவி டெம்பர்டு , மேட் பினிஷ், செராமிக்: எந்த போனுக்கு எந்த டெம்பேர் கிளாஸ் பெஸ்ட்?

மொபைலுக்கு எந்த டெம்பர்டு கிளாஸ் போடலாம்? செராமிக், யுவி மற்றும் மேட் பினிஷ் கிளாஸ்களின் சிறப்பம்சங்கள் பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 07 2026, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மொபைல் பாதுகாப்பிற்கு எந்த டெம்பேர்ட் கிளாஸ் பெஸ்ட்?
Image Credit : X

மொபைல் பாதுகாப்பிற்கு எந்த டெம்பேர்ட் கிளாஸ் பெஸ்ட்?

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், நமது ஸ்மார்ட்போன் என்பது வெறும் கருவி அல்ல; அது நம் வாழ்வின் ஒரு அங்கம். விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கியவுடன் நாம் செய்யும் முதல் வேலை, அதற்கு ஒரு நல்ல டெம்பேர்ட் கிளாஸ் (Tempered Glass) மற்றும் கவர் வாங்குவதுதான். ஆனால், கடைக்குச் சென்றால் யுவி, மேட் பினிஷ், செராமிக் என பல வகைகள் நம்மை குழப்பும். எந்த போனுக்கு எந்த கிளாஸ் சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
செராமிக் கிளாஸ் (Ceramic Glass)
Image Credit : X

செராமிக் கிளாஸ் (Ceramic Glass)

தற்காலத்தில் அதிகம் விற்பனையாகும் வகைகளில் இதுவும் ஒன்று. இது தூய கண்ணாடியால் ஆனது அல்ல; கண்ணாடி மற்றும் செராமிக் கலவையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது மிக மெல்லியதாகவும், எளிதில் உடையாமலும் இருக்கும். குறிப்பாக, குழந்தைகள் கைகளில் போனை கொடுப்பவர்கள் மற்றும் அடிக்கடி போனை கீழே போடுபவர்களுக்கு செராமிக் கிளாஸ் ஒரு சிறந்த தேர்வு. எட்ஜ் (Edge) மற்றும் பிளாட் ஸ்கிரீன் என அனைத்து வகையான போன்களுக்கும் இது பொருந்தும்.

35
யுவி டெம்பேர்ட் கிளாஸ் (UV Tempered Glass)
Image Credit : X

யுவி டெம்பேர்ட் கிளாஸ் (UV Tempered Glass)

சாம்சங் போன்ற பிராண்டுகளின் வளைந்த திரைகள் (Curved Displays) கொண்ட போன்களைப் பயன்படுத்துகிறீர்களா? சாதாரண கிளாஸ்கள் இதில் ஒட்டாது அல்லது சீக்கிரம் கழன்றுவிடும். இதற்குத் தீர்ர்தான் யுவி கிளாஸ். திரையில் ஒரு சிறப்பு திரவ ஊடகத்தை ஊற்றி, யுவி லைட் (UV Light) கொண்டு இது ஒட்டப்படுகிறது. போனின் வளைந்த விளிம்புகள் வரை கச்சிதமாகப் பொருந்தி, தொடுதிரை உணர்திறனை (Touch Sensitivity) அற்புதமாகப் பாதுகாக்கும். பிரீமியம் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு இதுவே முதன்மையான தேர்வாகும்.

45
மேட் பினிஷ் கிளாஸ் (Matte Finish / Anti-Glare Glass)
Image Credit : X

மேட் பினிஷ் கிளாஸ் (Matte Finish / Anti-Glare Glass)

கேமிங் பிரியர்களுக்கும், அதிக நேரம் போனைப் பயன்படுத்துபவர்களுக்கும் மேட் பினிஷ் ஒரு வரப்பிரசாதம். இதன் மேற்பரப்பு சற்று சொரசொரப்பாக (Frosty look) இருக்கும். இதனால் போனில் கைரேகை (Fingerprints) படியாது. வெயிலில் செல்லும்போது போன் ஸ்கிரீன் ரிஃப்ளெக்ட் ஆவதைத் தடுத்து, கண்களுக்குக் குளிர்ச்சியைக் தரும். ஆனால், இதன் நிறம் சாதாரண கிளாஸ் அளவுக்குத் துல்லியமாக (Crystal Clear) இருக்காது என்பது இதன் சிறிய குறை.

55
உங்கள் போனுக்கு எது பெஸ்ட்?
Image Credit : X

உங்கள் போனுக்கு எது பெஸ்ட்?

சாதாரண மற்றும் பிளாட் ஸ்கிரீன் போன்கள் - செராமிக் கிளாஸ் மிக நீண்ட உழைப்பைக் கொடுக்கும்.

வளைந்த திரைகள் (Curved Displays) - யுவி டெம்பேர்ட் கிளாஸ் மட்டுமே சரியான மற்றும் முழுமையான பாதுகாப்பை வழங்கும்.

கேமிங் மற்றும் அவுட்டோர் பயன்பாடு - மேட் பினிஷ் கிளாஸ் உங்கள் கண்களுக்குச் சோர்வைத் தராமல் பாதுகாக்கும்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
செவ்வாயில் அதிகாலை விடியல் எப்படி இருக்கும்? நாசாவின் கியூரியோசிட்டி அனுப்பிய அரிய காட்சி!
Recommended image2
டால்பி விஷன், 48W சவுண்ட்: 1 பில்லியன் கலர் சப்போர்ட்; 62% ஆஃபரில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி!
Recommended image3
Best Home Theatre: தியேட்டருக்கு போக வேண்டாம்... ரூ.5,000 முதல் கிடைக்கும் டாப் 5 ஹோம் தியேட்டர்ஸ்!
Related Stories
Recommended image1
டால்பி விஷன், 48W சவுண்ட்: 1 பில்லியன் கலர் சப்போர்ட்; 62% ஆஃபரில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி!
Recommended image2
Best Home Theatre: தியேட்டருக்கு போக வேண்டாம்... ரூ.5,000 முதல் கிடைக்கும் டாப் 5 ஹோம் தியேட்டர்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved