MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Best Home Theatre: தியேட்டருக்கு போக வேண்டாம்... ரூ.5,000 முதல் கிடைக்கும் டாப் 5 ஹோம் தியேட்டர்ஸ்!

Best Home Theatre: தியேட்டருக்கு போக வேண்டாம்... ரூ.5,000 முதல் கிடைக்கும் டாப் 5 ஹோம் தியேட்டர்ஸ்!

அதிகப் பணம் செலவழிக்காமல் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலான பட்ஜெட்டில் வீட்டின் வரவேற்பறையை மினி தியேட்டராக மாற்றக்கூடிய 5 சிறந்த ஹோம் தியேட்டர் ஆடியோ அமைப்புகள் பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 07 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.5,000 முதல் ரூ.10,000 க்குள் டாப் 5 ஹோம் தியேட்டர்கள்!
Image Credit : Blaupunkt

ரூ.5,000 முதல் ரூ.10,000-க்குள் டாப் 5 ஹோம் தியேட்டர்கள்!

இன்றைய நவீன ஸ்மார்ட் டிவி-களில் காட்சிகளின் தரம் மிகச் சிறப்பாக இருந்தாலும், அவற்றில் உள்ள ஸ்பீக்கர்கள் போதிய ஒலித் திறனை (Power) தருவதில்லை என்ற குறை பெரும்பாலான பயனர்களிடையே உள்ளது. அதிகப் பணம் செலவழிக்காமல் ரூ.5,000 முதல் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் வீட்டின் வரவேற்பறையை மினி தியேட்டராக மாற்றக்கூடிய 5 சிறந்த ஆடியோ அமைப்புகள் சந்தையில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. டிவி-யில் உள்ள HDMI ARC அல்லது Optical வசதியைப் பயன்படுத்தி எளிதாக இணைக்கக்கூடிய, பட்ஜெட்டுக்கு ஏற்ற 5 முக்கிய மாடல்களின் முழு விவரங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. போட் அவாந்தே 2.1 1550 பிளஸ் (boAt Aavante 2.1 1550 Plus)
Image Credit : boAt

1. போட் அவாந்தே 2.1 1550 பிளஸ் (boAt Aavante 2.1 1550 Plus)

விலை: சுமார் ரூ.5,899

அமைப்பு: 2.1 Channel Setup

சிறப்பம்சங்கள்: சவுண்ட்பாருடன் தனியாக வரும் சப்வூஃபர் மூலம் அதிர வைக்கும் பேஸ் (Bass) அனுபவத்தைப் பெற முடியும். 160W அவுட்புட் கொண்டுள்ள இதில் HDMI ARC, Optical மற்றும் AUX வசதிகள் உள்ளன. திரைப்படங்களில் வரும் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் இசையை ரசிக்க இது உகந்தது. குறைந்த செலவில் டிவி ஆடியோவை அப்கிரேட் செய்ய நினைப்பவர்களுக்கான சிறந்த தேர்வு.

36
2. கோவோ கோசரவுண்ட் 945 ப்ரோ (GOVO GoSurround 945 Pro)
Image Credit : GOVO

2. கோவோ கோசரவுண்ட் 945 ப்ரோ (GOVO GoSurround 945 Pro)

விலை: சுமார் ரூ.4,899

அமைப்பு: 5.1 Channel Setup

சிறப்பம்சங்கள்: ரூ.5,000-க்குள் சவுண்ட்பார், சப்வூஃபர் மட்டுமின்றி ரியர் ஸ்பீக்கர்களுடன் (Rear speakers) உண்மையான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. HDMI ARC மற்றும் புளூடூத் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மிகக் குறைந்த பட்ஜெட்டில் சரவுண்ட் சவுண்ட் மற்றும் அதிக ஸ்பீக்கர்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றது.

46
3. எப் அண்ட் டி F3000X (F&D F3000X)
Image Credit : F&D F3000X

3. எப் அண்ட் டி F3000X (F&D F3000X)

விலை: சுமார் ரூ.6,490

அமைப்பு: 4.1 Channel Setup

சிறப்பம்சங்கள்: சுமார் 80W RMS அவுட்புட் கொண்ட இந்த மல்டி-பர்பஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தில் புளூடூத் இணைப்புடன் எஃப்.எம் ரேடியோ (FM Radio) வசதியும் உள்ளது. டிவி மட்டுமின்றி மொபைல் வழி இசை கேட்பதற்கும், கணினியுடன் (PC) இணைத்துப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற ஆல்-ரவுண்டர் மாடல்.

56
4. சோனி SA-D40M2 (Sony SA-D40M2)
Image Credit : Sony

4. சோனி SA-D40M2 (Sony SA-D40M2)

விலை: சுமார் ரூ.9,499

அமைப்பு: 4.1 Channel Setup

சிறப்பம்சங்கள்: நன்கு அறியப்பட்ட முன்னணி பிராண்டான சோனியின் இந்த அமைப்பில் 4 சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப்வூஃபர் என மொத்தம் 5 ஸ்பீக்கர் யூனிட்கள் உள்ளன. இதனுடன் USB கனெக்டிவிட்டி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பகமான பிராண்ட் வேல்யூ மற்றும் மல்டி-ஸ்பீக்கர் அமைப்பை விரும்புபவர்களுக்கு உகந்தது.

66
5. ஜேபிஎல் சினிமா SB510 (JBL Cinema SB510)
Image Credit : JBL

5. ஜேபிஎல் சினிமா SB510 (JBL Cinema SB510)

விலை: சுமார் ரூ.9,999

அமைப்பு: 3.1 Channel Soundbar

சிறப்பம்சங்கள்: இதிலுள்ள பிரத்யேக சென்டர் சேனல் (Centre channel), திரைப்படங்களில் வரும் வசனங்களை (Dialogues) மிகவும் தெளிவாகக் கேட்க உதவுகிறது. மேலும் இதில் டால்பி ஆடியோ (Dolby Audio), HDMI ARC மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டி போன்ற பிரீமியம் வசதிகள் உள்ளன. டால்பி ஆடியோ ஆதரவுடன் படங்களின் வசனங்கள் மிகத் துல்லியமாகக் கேட்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ்.

ஹோம் தியேட்டர் வாங்கும்போது வெறும் 'வாட்ஸ்' (Watts) அளவை மட்டும் பார்க்காமல் சேனல்களின் எண்ணிக்கை, சப்வூஃபர், அறையின் அளவு மற்றும் ஸ்பீக்கர்களை வைக்கும் இடம் ஆகியவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும். குறிப்பாக உங்கள் டிவியுடன் இணைக்க HDMI ARC போர்ட் இருந்தால், ஒரே கேபிள் மூலம் இணைத்து டிவி ரிமோட் மூலமாகவே ஹோம் தியேட்டரின் ஒலியையும் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Recommended image2
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்: புதிய 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' அம்சம் அறிமுகம்; செக் பண்ணி பாருங்க!
Recommended image3
ஏஐ பீச்சர்ஸ், OIS கேமரா, பிரீமியம் டிசைன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் 17000 முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!
Related Stories
Recommended image1
வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்: புதிய 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' அம்சம் அறிமுகம்; செக் பண்ணி பாருங்க!
Recommended image2
iPhone: ஐபோன்ல போட்டோ எடுக்குறீங்களா? இந்த 7 செட்டிங்ஸ் தெரியாம விட்டுடாதீங்க.. போட்டோ தரமே மாறிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved