MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • இனி இன்கமிங் கால்கள் கட் ஆகாது.. மிச்ச டேட்டாவும் வீணாகாது.. டிராய் சொல்லப்போகும் குட்நியூஸ்!

இனி இன்கமிங் கால்கள் கட் ஆகாது.. மிச்ச டேட்டாவும் வீணாகாது.. டிராய் சொல்லப்போகும் குட்நியூஸ்!

இப்போது ரீசார்ஜ் கட்டணம் மற்றும் சேவை விதிகளை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை 'டிராய்' கண்காணிக்கும்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 24 2026, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டெலிகாம் நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் கோபம்
Image Credit : stockPhoto

டெலிகாம் நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் கோபம்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் பிஎஸ்என்எல் தவிர மற்ற நிறுவனங்கள் மாதம் 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் மட்டுமே பெரும்பாலும் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் வாடிக்கையாளர்கள் கோபத்தில் இருந்தனர். இந்த புகாரை இப்போது மத்திய அரசு சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
நாடாளுமன்றம் வரை சென்ற குரல்
Image Credit : ChatGPT

நாடாளுமன்றம் வரை சென்ற குரல்

அதாவது தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெலிகாம் நிறுவனங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான்களை வழங்குவது குறித்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினார். 28 நாட்கள் பிளான் போடுவதால், ஒரு வருடத்தில் 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒருவிதமான கூடுதல் நிதிச் சுமை.

இன்கமிங் கால்கள் தொடர வேண்டும்

தினமும் கிடைக்கும் 2GB டேட்டாவில் 500MB மிச்சம் இருந்தாலும், அது நள்ளிரவுக்குப் பிறகு காலாவதியாகிவிடுகிறது. பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவை அடுத்த நாளுக்கு ஏன் பயன்படுத்தக் கூடாது? ரீசார்ஜ் முடிந்த பிறகும், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது இன்கமிங் கால்கள் மற்றும் மெசேஜ்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

Related Articles

Related image1
பிஎஸ்என்எல் ஹோலி ஆபர்.. 14 நாள் வேலிடிட்டி + 28 ஜிபி டேட்டா இலவசம்.. வாடிக்கையாளர்கள் குஷி!
Related image2
அடடே.. இது செம ஆஃபரா இருக்கே! 164 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா அள்ளிக்கொடுக்கும் BSNL!
34
30 நாள் பிளானை கட்டாயம் வைக்க வேண்டும்
Image Credit : Google

30 நாள் பிளானை கட்டாயம் வைக்க வேண்டும்

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் பிளான்களில் குறைந்தபட்சம் ஒரு 30 நாள் பிளானையாவது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று டிராய் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கட்டாய 30 நாள் பிளான்: ஜியோ, ஏர்டெல், Vi போன்ற ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் ஸ்பெஷல் டேரிஃப் அல்லது காம்போ வவுச்சர்களில் ஒரு முழு மாதத்திற்கான (30 நாட்கள்) பிளானை வழங்கியே ஆக வேண்டும்.

44
இன்கமிங் சேவை மற்றும் டேட்டா ரோல்ஓவர் விதி
Image Credit : Getty

இன்கமிங் சேவை மற்றும் டேட்டா ரோல்ஓவர் விதி

இந்த 30 நாள் பிளான்களைப் பற்றி நிறுவனங்கள் இன்னும் அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும். அப்போதுதான் 28 நாள் மற்றும் 30 நாள் பிளான்களுக்கு உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள். ரீசார்ஜ் முடிந்த பிறகு இன்கமிங் சேவை மற்றும் டேட்டா ரோல்ஓவர் விதிகளை 'டிராய்' தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.

கண்காணிக்கும் டிராய்

தற்போது, டெலிகாம் துறையில் 'ஃபார்பியரன்ஸ்' (Forbearance) கொள்கை அமலில் உள்ளது. இதன்படி, ரீசார்ஜ் கட்டணம் மற்றும் சேவை விதிகளை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சுதந்திரம் உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை 'டிராய்' கண்காணிக்கும். தற்போதைய விதிப்படி, 90 நாட்கள் வரை சிம் கார்டை செயலிழக்கச் செய்ய முடியாது. இந்த விதியை இன்னும் எளிதாக்க அரசு ஆலோசித்து வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மறுஊட்டத் திட்டம்
ஜியோ
ஏர்டெல்
வோடபோன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Flipkart-ல் iPhone 17 Pro Max- க்கு அதிரடி தள்ளுபடி!
Recommended image2
HMD Vibe 2 5G : பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. HMD Vibe 2 மொபைலுக்கு இந்தியாவே வெயிட்டிங்
Recommended image3
Amazon Sale : 8000mAh பேட்டரி, 50MP கேமரா.. Nord CE6 இப்போது தள்ளுபடியில்.. ஆர்டர் குவியுது
Related Stories
Recommended image1
பிஎஸ்என்எல் ஹோலி ஆபர்.. 14 நாள் வேலிடிட்டி + 28 ஜிபி டேட்டா இலவசம்.. வாடிக்கையாளர்கள் குஷி!
Recommended image2
அடடே.. இது செம ஆஃபரா இருக்கே! 164 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா அள்ளிக்கொடுக்கும் BSNL!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved