- Home
- Lifestyle
- Fridge Safety : ஃபிரிட்ஜுக்கு கவர் போடுறீங்களா? கரண்ட் பில் எகிறும், தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கு!
Fridge Safety : ஃபிரிட்ஜுக்கு கவர் போடுறீங்களா? கரண்ட் பில் எகிறும், தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கு!
Fridge Safety : உங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் மீது தூசி விழாமல் இருக்க கவர் போட்டுருக்கீங்களா? நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு ஃபிரட்ஜ் பழுதாகுவது மட்டுமல்லாமல், பெரிய ஆபத்துக்கும் வழிவகுக்கும். அது எப்படி? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

கவர் போடுவது எப்படி ஆபத்தானது?
தூசு மற்றும் அசுத்தங்களிலிருந்து பாதுகாக்க பலரும் ஃபிரிட்ஜிற்கு கவர் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த சிறிய தவறு உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்! ஃபிரிட்ஜ் இயங்கும் போது அதன் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் மூலம் வெப்பம் வெளியேற வேண்டும். கவரால் ஃபிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் போது இந்த வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் கம்ப்ரஸர் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஃபிரிட்ஜ் பழுதாகுவதுடன் மின்சார நுகர்வு அதிகரித்து தீ விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகலாம்.
இதையும் படிங்க : Banana : கருப்பு புள்ளிகள் உள்ள வாழைப்பழங்களை சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா? கெட்டதா?
பின்புறம் சூடாவது ஏன்?
ஃபிரிட்ஜின் உள்ளே குளிர்விக்கப்பட்டாலும், அதன் வெளிப்பகுதி (Body) சூடாக இருக்கும். மேலே கவர் போட்டால், அந்த வெப்பம் வெளியேற முடியாமல் ஃபிரிட்ஜ் அதிகமாக சூடாவதுடன் (Overheat). ஃபிரட்ஜில் உள்ள கம்ப்ரஸர் மற்றும் கன்டென்செர் சுருள்கள் (Condenser coils) உணவுப் பொருட்களை குளிர்விக்க உழைக்கும் போது இயற்கையாகவே வெப்பத்தை வெளியிடுகின்றன. காற்று தாராளமாக சுழன்றால் மட்டுமே இந்த வெப்பம் வெளியேறும், ஆனால் கவர் காற்று ஓட்டத்தைத் தடுத்து ஃபிரிட்ஜின் ஆயுளைக் குறைக்கிறது.
இதையும் படிங்க : Tirupati Laddu : 311 ஆண்டுகளாக மாறாத சுவை! திருப்பதி லட்டு வீட்டிலேயே செய்வது எப்படி?
அதிகமாக சூடாவது எப்படி?
ஃபிரிட்ஜை குளிர்ச்சியாக வைத்திருக்க கம்ப்ரஸர் தொடர்ந்து வேலை செய்கிறது மற்றும் சுருள்கள் (coils) வழியாக வெப்பம் வெளியேறுகிறது. கவர் போடும் போது இந்த வெப்பம் வெளியேற முடியாமல் ஃபிரிட்ஜின் உள் வெப்பநிலை அதிகரித்து, கம்ப்ரஸர் பழுதாகி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் ஆபத்து உண்டாகலாம்.
இதையும் படிங்க : Kitchen : கண்ணாடி ஜாடியா? பிளாஸ்டிக் டப்பாவா? உணவுப் பொருட்களுக்கு எது சிறந்தது?
மின் கட்டணம் அதிகமாக வரலாம்!
கம்ப்ரஸர் மீது கூடுதல் சுமை (Load) விழுவதால், ஃபிரிட்ஜின் உள்ளே உள்ள குளிர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள அது வழக்கத்தை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வெப்பம் வெளியேற வழியில்லாததால் கம்ப்ரஸர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும், இதனால் மின் நுகர்வு அதிகரித்து மாத இறுதியில் உங்கள் கரண்ட் பில் (Current Bill) கணிசமாக உயரும்.
இதையும் படிங்க : Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகலாம்!
ஃபிரிட்ஜின் உள்ளேயுள்ள வெப்பநிலை அடிக்கடி மாறுபடுவதால் ஒரே சீரான குளிர்ச்சி இருக்காது. இதன் காரணமாக, ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கப்படும் காய்கறிகள், பால் மற்றும் சமைத்த உணவுகள் போன்ற பொருட்கள் சீக்கிரமே கெட்டுப்போய் துர்நாற்றம் வீசக்கூடும். வெப்பம் வெளியேறாமல் ஃபிரட்ஜ் முழுவதும் வெப்பமயமாவதால், உட்புற குளிரூட்டும் தன்மை (Cooling efficiency) குறைந்து உணவின் தரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
இதையும் படிங்க : சுக்ர மங்கள யோகம் : கணவன்-மனைவியும் இந்த ராசிகளில் பிறந்திருந்தால் கோடீஸ்வர யோகம் உறுதி!
தண்ணீர் கசிவு மற்றும் அடைப்பு!
கவரால் குளிர்விக்கும் முறை (Cooling system) பாதிக்கப்பட்டு, ஃபிரிட்ஜின் உள்ளே தேவையில்லாமல் அதிகப்படியான பனி (Ice) சேர்ந்து அது திடீரென உருகி தண்ணீர் வரத் தொடங்கும். இதனால் ஃபிரிட்ஜின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்குவதுடன், காலப்போக்கில் தண்ணீர் வெளியேறும் 'டிரைன்' (Drain hole) குழாயிலும் அடைப்பு ஏற்பட்டு மோசமான நாற்றம் மற்றும் பூஞ்சை வளர வழிவகுக்கும்.
இதையும் படிங்க : Facts : விமான ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கு? இதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய காரணமா?
காற்று ஓட்டம் நின்றுவிடுகிறது
ஃபிரிட்ஜைச் சுற்றிலும் காற்று சுழற்சி இருந்தால் மட்டுமே கன்டென்செர் சுருள்கள் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் கவர் போடுவதால் இந்த காற்றோட்ட அமைப்புக்கு (Ventilation) தடை ஏற்படுகிறது. இதனால் ஃபிரிட்ஜ் இன்னும் அதிகமாக வெப்பமடைகிறது.
சென்சார் பழுதாகலாம்!
அதிகப்படியான வெப்பத்தால் (Overheating) ஃபிரட்ஜின் உட்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சென்சார்கள் பழுதடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஃபிரிட்ஜ் சரியான முறையில் குளிர்விப்பதை நிறுத்திவிடும், இதனால் உணவுப் பொருட்கள் முழுமையாகப் பாதிக்கப்படும்.
ஷார்ட் சர்க்யூட் ஆபத்து!
ஃபிரிட்ஜ் மிகவும் சூடாகி, காற்றோட்டத்திற்கு வழியில்லாத போது கம்ப்ரஸர் மீது அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. இது ஒயரிங் உருகி ஷார்ட் சர்க்யூட் ஆவதற்கோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படுவதற்கோ மிக முக்கிய காரணமாக அமையலாம்! எனவே, ஃபிரிட்ஜின் பாதுகாப்பிற்காக கவர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க : Fridge Food : பிரிட்ஜில் வைத்த உணவை திரும்பத் திரும்ப சூடு படுத்தி சாப்பிடலாமா? பலருக்கும் தெரியாத உண்மை!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
