- Home
- Lifestyle
- Electric Shock: நம்ம உடம்பில் கரண்ட் எப்படி பாய்கிறது? ஷாக் அடிப்பதற்கான உண்மையான காரணம்? தப்பிப்பது எப்படி?
Electric Shock: நம்ம உடம்பில் கரண்ட் எப்படி பாய்கிறது? ஷாக் அடிப்பதற்கான உண்மையான காரணம்? தப்பிப்பது எப்படி?
Electric Shock: குளிர் மற்றும் மழைக்காலங்களில் எலெக்ட்ரிக் ஷாக் அடிப்பது அதிகம் நடக்கிறது. நமது உடலில் கரண்ட் எப்படி பாய்கிறது? ஷாக் அடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன? தப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களுக்கு ஏன் அதிகம் ஷாக் அடிக்கிறது?
மனிதர்களுக்கு மட்டும் ஏன் இப்படி அதிகம் ஷாக் அடிக்கிறது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கு. மனித உடம்பில் எப்படி கரண்ட் பாஸ் ஆகிறது, ஏன் ஷாக் அடிக்கிறது? மின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம்.
அனைத்து பொருட்களுமே அணுக்களால் (Atoms) உருவானவைதான். அணுக்களில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று 3 துகள்கள் இருக்கும். எலக்ட்ரான்கள் நெகட்டிவ் (-) சார்ஜ் கொண்டவை. புரோட்டான்கள் பாசிட்டிவ் (+) சார்ஜ் கொண்டவை. நியூட்ரான்கள் நியூட்ரலாக இருக்கும். நம் உடம்பிலும் இந்த மூன்றும் இருக்கு. புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் தங்களை பேலன்ஸ் செய்ய வேலை செய்யும். இரண்டும் சமமாக இருக்கும் வரை அணுக்கள் நிலையாக இருக்கும்.
மனித உடலில் கரண்ட் உள்ளதா?
ஆனால், ஒரு நபர் அல்லது பொருளில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நெகட்டிவ் சார்ஜ் அதிகமாகிவிடும். இந்த எலக்ட்ரான்கள், மற்ற நபர் அல்லது பொருளில் உள்ள பாசிட்டிவ் சார்ஜை ஈர்க்கும். இதனால்தான் நமக்கு ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் எலக்ட்ரான்கள் ஒரே இடத்தில் வேகமாகச் சேரத் தொடங்கும். மனிதர்களின் சருமத்தில் இந்த எலக்ட்ரான்கள் சுலபமாகத் தங்கிவிடும். நெகட்டிவ் சார்ஜ் கொண்ட எலக்ட்ரான்கள், பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட நபர் அல்லது பொருளைத் தொடும்போது ஒரு ஸ்பார்க் போல கரண்ட் பாஸ் ஆகிறது. கோடைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருப்பதால் எலக்ட்ரான்கள் இப்படி ஒரே இடத்தில் சேராது. அதனால் அப்போது ஷாக் அடிப்பதில்லை.
நாம் பயன்படுத்தும் பொருட்களும் காரணம்
நாம் பயன்படுத்தும் பொருட்களும் இந்த ஷாக் உணர்வுக்கு ஒரு காரணம். நைலான் அல்லது கம்பளியால் செய்யப்பட்ட கார்பெட்கள் மீது நடப்பது, அந்த வகை துணிகளை அணிவது, ரப்பர் சோல் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஷூக்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் நம் உடலில் எலக்ட்ரான்களின் சார்ஜ் அதிகமாகிறது.
குளிர்காலத்தில் கதகதப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் கால்களை தரையில் வைக்க மாட்டோம். ரொம்ப நேரம் கால்கள் தரையில் படாமல் இருந்தால் இந்த பிரச்சனை அதிகமாகும். அதனால் அடிக்கடி உங்கள் பாதங்களை தரையில் படும்படி வைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது உடலில் சேர்ந்திருக்கும் எலக்ட்ரான் சார்ஜ் பூமிக்குச் சென்றுவிடும்.
எலெக்ட்ரிக் ஷாக்கை தவிர்ப்பது எப்படி?
உங்கள் உடம்பில் சார்ஜ் தங்காது. நீங்கள் ஷூ போட்டிருந்தால், கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை உங்கள் முழங்கை அல்லது கைகளை சுவரில் தொடுங்கள். இது மற்றவர்களிடம் இருந்தோ, பொருட்களிடம் இருந்தோ உங்களுக்கு ஷாக் அடிப்பதைத் தடுக்கும். அதேபோல, குளிர்காலத்தில் நைலான் மற்றும் கம்பளி துணிகள் அணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்போர்ட்ஸ் ஷூக்களுக்குப் பதிலாக லெதர் ஷூக்களைப் பயன்படுத்தலாம்.
வீடுகளில் பயன்படுத்தும் மெயின் கரண்ட் (AC Power) மூலம் ஏற்படும் மின் தாக்குதல் உயிருக்கே ஆபத்தானது. ஒருவேளை யாராவது மின்சாரத்தால் தாக்கப்பட்டுவிட்டால், உடனடியாக உங்களது வெறும் கைகளால் அவர்களைத் தொடக்கூடாது; ஏனெனில் கரண்ட் உங்களுக்கும் பாயும். அதற்குப் பதிலாக உலர்ந்த மரம், பிளாஸ்டிக் துடைப்பம், ரப்பர் மேட் அல்லது காகிதக் கட்டுகள் போன்ற மின்கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி அவர்களை மின்சாரத்திலிருந்து விலக்க வேண்டும்.
உடனடியாக மெயின் சுவிச்சை ஆஃப் செய்யவும் அல்லது மின்கடத்தாப் பொருளால் வயரைத் துண்டிக்கவும். பாதிக்கப்பட்ட நபருக்குச் சுவாசம் நிற்பது போலிருந்தால் உடனடியாக 'CPR' முதலுதவி அளித்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உயிரைக் காப்பாற்ற உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

