MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Facts : விமான ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கு? இதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய காரணமா?

Facts : விமான ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கு? இதுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய காரணமா?

Facts : வேறு எந்த வாகனத்திற்கும் இல்லாத வகையில் விமானத்திற்கு மட்டும வட்ட வடிவ ஜன்னல்கள் இருப்பதால், அது தனித்துவமாகத் தெரிகிறது. இந்த வட்ட வடிவ ஜன்னல்கள் வெறும் அழகுக்காக அல்ல! இவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அறவியல் குறித்து காண்போம்.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 31 2026, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
the real reason why airplane windows are round
Image Credit : Chatgpt

the real reason why airplane windows are round

பேருந்து, கார், லாரி, ரயில் இப்படி எந்த வாகனத்தை எடுத்துக்கொண்டாலும் ஜன்னல்கள் சதுர வடிவிலேயே இருக்கும். பூமியில் மட்டுமல்ல, நீரில் பயணம் செய்யும் கப்பல், க்ரூஸ் போன்றவற்றிலும் கூட இதுபோன்ற ஜன்னல்கள்தான் இருக்கும். கடைசியாக வீடுகள், பெரிய பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், சொகுசு மாளிகைகளிலும் கூட ஜன்னல்களின் வடிவம் சதுரமே. விமானத்தில் மட்டும் ஜன்னல்கள் சதுரமாக இல்லாமல், வட்டமாகவும், நீள்வட்டமாகவும் (Oval) இருக்கும். இது விமானம் பார்க்க அழகாக இருப்பதற்காகவே என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதற்காக அல்ல. இதற்குப் பின்னால் விமானங்களைப் விபத்துகளில் இருந்து காப்பாற்றும் அறிவியல் மறைந்துள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க : Shopping Malls : ஷாப்பிங் மால்களில் ஜன்னல்கள் இல்லாதது ஏன்? சீக்ரெட் இதுதான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விமானத்தில் சதுர வடிவ ஜன்னல்கள் இருந்தால் என்ன நடக்கும்?
Image Credit : Gemini AI

விமானத்தில் சதுர வடிவ ஜன்னல்கள் இருந்தால் என்ன நடக்கும்?

ஆரம்பத்தில் வணிக விமானங்களிலும் பிற வாகனங்களைப் போலவே நான்கு மூலைகளுடன் கூடிய சதுர வடிவ ஜன்னல்கள்தாம் இருந்தன. 1950களில் விமானங்கள் அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கின. இப்படி உயரத்தில் பறப்பதால் எரிபொருள் மிச்சமாவது மட்டுமின்றி பயணமும் சுமுகமாக அமையும் என்பதைக் கண்டறிந்தனர். ஆனால் விமானம் உயரத்திற்குச் செல்லச் செல்ல வெளியே காற்றின் அழுத்தம் கடுமையாகக் குறைகிறது. அதனால்தான் பயணிகள் பாதுகாப்பாகச் சுவாசிக்க ஏதுவாக விமானத்திற்குள் காற்றின் அழுத்தத்தைச் செயற்கையாக அதிகரிக்கிறார்கள். இப்படி விமானத்திற்குள்ளே அழுத்தம் அதிகமாகவும், வெளியே அழுத்தம் குறைவாகவும் இருக்கும் போது விமானத்தின் உடல் ஒரு பலூனைப் போல வெளியே வீங்கும்.

இப்படி விமானத்தில் அழுத்தம் அதிகரிக்கும் போது கண்ணாடிகளின் மீதும் கடுமையான அழுத்தம் விழுகிறது. இத்தகைய சமயத்தில் சதுர வடிவ ஜன்னல்களின் கூர்மையான மூலைகளுக்கு இந்த அழுத்தம் வந்துசேர்கிறது. இதனை அறிவியலின் மொழியில் "அழுத்தச் செறிவு" (Stress Concentration) என்கிறார்கள். இந்த அழுத்தம் அதிகரித்தால் விமானத்தின் கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த காலத்தில் பல விபத்துகள் நடந்து, பயணிகள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : Restaurant : கல்லறைகளுக்கு நடுவுல சாப்பாடு! இங்க போய் சாப்பிட செம்ம தில்லு வேணும்! உங்களுக்கு இருக்கா?

Related Articles

Related image1
Air Fryer : Air Fryer-ல் சமைத்த உணவு உண்மையிலேயே ஆரோக்கியமானதா? உண்மை இதுதான்!
Related image2
Shopping Malls : ஷாப்பிங் மால்களில் ஜன்னல்கள் இல்லாதது ஏன்? சீக்ரெட் இதுதான்!
34
விமான விபத்துகளைக் குறைப்பதற்காகவே வட்டமான ஜன்னல்கள்
Image Credit : Getty

விமான விபத்துகளைக் குறைப்பதற்காகவே வட்டமான ஜன்னல்கள்

1954 இல் 'டி ஹாவில்லாண்ட் காமட்' (de Havilland Comet) என்ற பயணிகள் விமானங்கள் வானத்திலேயே வெடித்துச் சிதறி விபத்துகளுக்குள்ளாகின. இந்த விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறியப் பாய்ந்த ஆராய்ச்சிகளில், சதுர வடிவ ஜன்னல்களின் மூலைகளில் தொடர்ந்து அழுத்தம் விழுந்ததால் அவை பலவீனமடைந்ததாகத் தெரியவந்தது. அந்த மூலைகளில் இருந்துதான் விமானத்தின் உடல் உடைந்துபோனது என்பதைக் கண்டறிந்தனர். இந்த விபத்துகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட பொறியாளர்கள் ஜன்னல்களின் வடிவமைப்பை முழுமையாக மாற்றினர்.

வட்டமான அல்லது நீள்வட்டமான ஜன்னல்களில் கூர்மையான மூலைகள் இருக்காது. இதனால் உள்ளிருந்து வரும் காற்றின் அழுத்தம் ஜன்னலின் விளிம்புகளின் வழியே சீராகப் பரவுகிறது. இதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளியிலும் கடுமையான அழுத்தம் விழாமல், விமானத்தின் அமைப்பு மிகவும் வலுவாக இருக்கும். அதனால்தான் விமானத்தில் வட்டமான ஜன்னல்களை அமைத்தனர். இதனால் விபத்துகள் குறைந்தன. இவ்வாறு பாதுகாப்பு காரணங்களுக்காகவே அனைத்து விமானங்களிலும் வட்டமான அல்லது நீள்வட்டமான ஜன்னல்கள் இருக்கின்றன.

இதையும் படிங்க : Air Fryer : Air Fryer-ல் சமைத்த உணவு உண்மையிலேயே ஆரோக்கியமானதா? உண்மை இதுதான்!

44
விமானக் கண்ணாடிகளுக்குப் பின்னால் மேலும் சில சிறப்பம்சங்கள்
Image Credit : Getty

விமானக் கண்ணாடிகளுக்குப் பின்னால் மேலும் சில சிறப்பம்சங்கள்

விமானக் கண்ணாடி ஒரே ஒரு கண்ணாடியால் செய்யப்பட்டதல்ல. இதில் அடிப்படையாக மூன்று அடுக்குகள் (Acrylic Layers) உள்ளன. வெளி அடுக்கு கடுமையான வெளிப்புறச் சூழலைத் தாங்குகிறது, அதே சமயம் உள் அடுக்கு பயணிகளின் தொடுதலிலிருந்து பாதுகாக்கிறது.

விமானத்தின் ஜன்னலின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது மத்திய அடுக்கு மற்றும் வெளி அடுக்குக்கு இடையேயான காற்று அழுத்தத்தைச் சமன் செய்யவும், மேலும் கண்ணாடியின் மீது பனிமூட்டம் (Fog) படிவதைத் தடுக்கவும் உதவுகிறது.

நாம் தினமும் பார்க்கும் ஒரு சிறிய வடிவியல் (Geometry) மாற்றம் விமானப் பயணத்தை எவ்வளவு பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். கூர்மையான மூலைகளை நீக்கிவிட்டு, வட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த, பாதுகாப்பான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

இதையும் படிங்க : Graduation : பட்டமளிப்பு விழாவில் தொப்பியைத் தூக்கி எறிவது ஏன்? இதன் வரலாறு தெரியுமா?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வானூர்திப் பயணங்கள்
அறிவியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Flipkart: பொருளை இப்போ வாங்குங்க.. பணத்தை அப்புறம் கட்டுங்க! பிளிப்கார்ட்டின் 'Pay Later' மாஸ் வசதி!
Recommended image2
இந்தியாவின் நடுத்தர-பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட புதுமைகளை OPPO எவ்வாறு கொண்டு வருகிறது?
Recommended image3
ஆயிரங்கள் செலவு செய்து வாங்கிய LED டிவியை காப்பாற்ற ஸ்டெப்லைசர் அவசியமா..? பலரும் அறியாத உண்மை!
Related Stories
Recommended image1
Air Fryer : Air Fryer-ல் சமைத்த உணவு உண்மையிலேயே ஆரோக்கியமானதா? உண்மை இதுதான்!
Recommended image2
Shopping Malls : ஷாப்பிங் மால்களில் ஜன்னல்கள் இல்லாதது ஏன்? சீக்ரெட் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved