MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Restaurant : கல்லறைகளுக்கு நடுவுல சாப்பாடு! இங்க போய் சாப்பிட செம்ம தில்லு வேணும்! உங்களுக்கு இருக்கா?

Restaurant : கல்லறைகளுக்கு நடுவுல சாப்பாடு! இங்க போய் சாப்பிட செம்ம தில்லு வேணும்! உங்களுக்கு இருக்கா?

Restaurant : சுவையான உணவு, அழகான சூழல் இருந்தால்... அந்த ரெஸ்டாரெட்டுக்கு மக்கள் வரிசையில் நிற்பார்கள். ஆனால், கல்லறைகளுக்கு நடுவே உணவு பரிமாறப்பட்டாலும், மக்கள் வரிசையில் நிற்கும் ஒரு ரெஸ்டாரெட்டைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 31 2026, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
would you eat at a restaurant surrounded by graves
Image Credit : Chatgpt

would you eat at a restaurant surrounded by graves

விநோதமான ரெஸ்டாரெண்ட்!

தினமும் வீட்டில் சாப்பிடுவது சோர்வாகத் தோன்றினால் அவ்வப்போது ரெஸ்டாரெட்டுக்குச் சென்று சுவையாகச் சாப்பிட்டுவிட்டு வருவோம். நல்ல ரெஸ்டாரெண்ட் என்றால். எவ்வளவு தூரமானாலும் சென்று சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பொதுவாக எத்தகைய ரெஸ்டாரெட்டுகளுக்குச் செல்வார்கள்? உணவு சுவையாக இருப்பவை அல்லது பார்க்க ஆம்பியன்ஸ் (சூழ்நிலை) நன்றாக இருக்கும் ரெஸ்டாரெட்டுகளுக்குச் செல்வார்கள். ஆனால், கல்லறைகளுக்கு நடுவே உட்கார்ந்து சாப்பிடுவதைப் பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா? கேட்பதற்கே விசித்திரமாகத் இருக்கிறது அல்லவா? ஆனால், அகமதாபாத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் கல்லறைகளுக்கு நடுவே உட்கார்ந்து உணவு பரிமாறப்படுகிறது. அங்கு மக்களும் வரிசையில் நின்று சாப்பிட்டு வருகிறார்கள். அந்த ரெஸ்டாரெண்டின் ஸ்பெஷாலிட்டி என்னவென்று இப்போது பார்ப்போம்.

இதையும் படிங்க : Terrace Garden : மாடித்தோட்டத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய 5 காய்கறிகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
எங்கே இருக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட்?
Image Credit : Instagram

எங்கே இருக்கிறது இந்த ரெஸ்டாரெண்ட்?

அகமதாபாத் நகரில் 'நியூ லக்கி ரெஸ்டாரெண்ட்' உள்ளது. இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதுமே கல்லறைகளுக்கு நடுவில்தான் அமைந்துள்ளது. கல்லறைகள் அருகில் இருந்தாலும் கூட மக்கள் இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்து மகிழ்ச்சியாக வயிறார சாப்பிடுகிறார்கள். இந்த ரெஸ்டாரெண்ட் உலகின் மிக விசித்திரமான உணவு உண்ணும் இடமாகக் கருதப்படுகிறது. மற்ற ரெஸ்டாரெட்டுகளை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் ஹோட்டலுக்கு நடுவே கல்லறைகளை வைக்கவில்லை. கல்லறைகளுக்கு நடுவிலேயே இந்த ரெஸ்டாரெண்டை வடிவமைத்துள்ளனர். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப்பட்டுள்ளது. அதைக் கட்டும் போது, இங்கு கல்லறைகள் இருப்பதை அதன் உரிமையாளர் கிரிஷன் குட்டி தெரிந்து கொண்டார். தனது வியாபாரத்திற்காக யாருடைய மன புண்படுத்துவதையும் விரும்பாத அவர், அவற்றை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு, அவற்றுக்கு நடுவே தனது ரெஸ்டாரெண்டை அமைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க : Air Fryer : Air Fryer-ல் சமைத்த உணவு உண்மையிலேயே ஆரோக்கியமானதா? உண்மை இதுதான்!

Related Articles

Related image1
Attukal Paya : பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செஞ்சு பாருங்க...அதோட சுவைக்கு நீங்க அடிமையாடுவீங்க!
Related image2
Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
33
26 கல்லறைகள்!
Image Credit : Chat GPt

26 கல்லறைகள்!

இந்த ரெஸ்டாரெண்டில் மொத்தம் 26 கல்லறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்லறைக்கும் வேலி அமைத்து, அவை சேதமடையாமலும், அவற்றை யாரும் அவமதிக்காமலும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி ஹோட்டல் ஊழியர்கள் தினமும் அந்தப் பகுதியைத் சுத்தம் செய்து, புதிய பூக்களைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். கல்லறைகளின் அருகில் யார் உட்கார்ந்து சாப்பிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு வருகிறார்கள். இந்த ரெஸ்டாரெண்ட் எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கும். யாரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் இங்கு வந்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமின்றி, இந்த ரெஸ்டாரெண்ட் குறித்து ஒரு நம்பிக்கையும் உள்ளது. இங்கு சாப்பிட்டாலோ அல்லது ஒரு கப் காபி குடித்தாலோ அதிர்ஷ்டம் பெருகும் என்று நம்புகிறார்கள். குறிப்பாகத் தொழில் செய்பவர்களுக்குச் சரியான லாபம் வராவிட்டால் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்வார்கள். அப்படிச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

இதையும் படிங்க : குளித்த உடனே பாத்ரூம் கதவை ஏன் திறந்து வைக்க வேண்டும்? பலருக்கும் தெரியாத காரணம்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
உணவு விடுதி வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூப்பர் ஃபுட் முருங்கை.. நோய்களை விரட்டும் 7 அற்புதங்கள்!
Recommended image2
Hemoglobin Levels: வெறும் 7 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.!
Recommended image3
டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
Attukal Paya : பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செஞ்சு பாருங்க...அதோட சுவைக்கு நீங்க அடிமையாடுவீங்க!
Recommended image2
Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved