MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.10,000-ல் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்.. பட்ஜெட் விலையில் இவ்வளவு வசதிகளா!

ரூ.10,000-ல் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்.. பட்ஜெட் விலையில் இவ்வளவு வசதிகளா!

ரூ.10,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல், அவற்றின் பேட்டரி, டிஸ்ப்ளே, விலை போன்றவற்றை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 06 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.10,000 குறைவான விலை ஸ்மார்ட்போன்கள்
Image Credit : Google

ரூ.10,000 குறைவான விலை ஸ்மார்ட்போன்கள்

குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்கும் மாடல்கள் என்னென்ன என்பது குறித்து மக்களுக்கு பல கேள்விகள் உள்ளது. முன்னணி செல்போன் நிறுவனங்கள் ரூ.10,000-க்குள் பல புதிய போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. தினசரி பயன்பாடு, ஆன்லைன் வகுப்புகள், வீடியோ பார்வை, சமூக வலைதளங்கள் என அனைத்திற்கும் ஏற்ற மாடல்கள் இப்போது இந்த விலையில் கிடைக்கின்றன.

25
பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
Image Credit : Google

பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

இந்த பட்டியலில் முதலில் இடம்பெற்றுள்ளது ரியல்மி சி71. பெரிய பேட்டரி விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக உள்ளது. 6300mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 90Hz / 120Hz ரிஃப்ரெஷ் ரேட் ஆதரவு ஆகியவை இதன் முக்கிய பலங்கள். Unisoc T7250 ப்ராசசர், 4GB அல்லது 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் மற்றும் 13MP அல்லது 50MP கேமரா ஆகியவை இந்த போனின் அம்சங்கள். இதன் விலை சுமார் ரூ.8,699 ஆகும்.

Related Articles

Related image1
தினமும் 560 கார்கள் விற்பனை.. டாடா நிறுவனத்தையே அசைத்து பார்த்த எஸ்யூவி கார் எது?
Related image2
கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!
35
குறைந்த விலை போன்கள்
Image Credit : Google

குறைந்த விலை போன்கள்

அடுத்ததாக லாவா போல்ட் என்1 இந்திய பிராண்டு விரும்புவோருக்கு நல்ல தேர்வாக இருக்கிறது. 6.75 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிஃப்ரெஷ் ரேட், Unisoc 9863A ப்ராசசர், 4GB RAM, 128GB ஸ்டோரேஜ் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. 5000mAh பேட்டரியுடன் வரும் இந்த போன் ரூ.7,999 விலையில் கிடைக்கிறது.

45
மலிவான ஸ்மார்ட்போன்
Image Credit : Google

மலிவான ஸ்மார்ட்போன்

5G வசதி தேவைப்படுவோருக்கு இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி மொபைல் நல்ல தேர்வாகும். 120Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் டிஸ்ப்ளே, MediaTek Dimensity 6400 ப்ராசசர், 8GB RAM + டைனமிக் RAM ஆதரவு, 128GB ஸ்டோரேஜ் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன. 50MP ரியர் கேமரா கொண்ட இந்த போன் ரூ.9,999 விலையில் கிடைக்கிறது.

55
2026 புதிய போன்கள்
Image Credit : Google

2026 புதிய போன்கள்

இறுதியாக, சாம்சங் கேலக்சி எப்06 5G மற்றும் விவோ ஒய்19இ ஆகியவை எண்ட்ரி-லெவல் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாம்சங் மாடலில் 90Hz டிஸ்ப்ளே, Dimensity 6300 சிப்செட், 25W சார்ஜிங் உள்ளது. Vivo Y19e-l 5500mAh பேட்டரி, 13MP கேமரா வழங்கப்படுகிறது. இவை ரூ.9,999 மற்றும் ரூ.8,999 விலையில் கிடைக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் நல்ல செயல்திறன் தேடுபவர்களுக்கு இந்த போன்கள் சரியான தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திறன் பேசி
நகர்பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டீ குடிக்கும் காசை விட கம்மி விலை.. வெறும் ரூ.5க்கு அன்லிமிடட் டேட்டா..! PM Wani அட்டகாசமான டேட்டா பேக்
Recommended image2
கூகுள், ஓபன்ஏஐ-க்கு போட்டியாக அடோப்! இலவசமாக அன்லிமிடெட் வீடியோக்கள்! Adobe கொடுத்த பம்பர் ஆஃபர்!
Related Stories
Recommended image1
தினமும் 560 கார்கள் விற்பனை.. டாடா நிறுவனத்தையே அசைத்து பார்த்த எஸ்யூவி கார் எது?
Recommended image2
கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved