MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!

கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!

வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க கணிப்புகளுக்கு மத்தியில், மத்திய வங்கி தனது 'நியூட்ரல்' நிலைப்பாட்டைத் தொடர்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 06 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆர்பிஐ ரெப்போ விகிதம்
Image Credit : stockPhoto

ஆர்பிஐ ரெப்போ விகிதம்

மத்திய பட்ஜெட் 2026க்கு பிறகு வெளியான முதல் நாணயக் கொள்கை அறிவிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்துள்ளது. இருமாத ஒருமுறை நடைபெறும் நாணயக் கொள்கைக் குழு (MPC) மூன்று நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முடிவை அறிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மத்திய வங்கி கொள்கை
Image Credit : Getty

மத்திய வங்கி கொள்கை

வலுவான பொருளாதார வளர்ச்சியும், வர்த்தக வரிகளின் அழுத்தம் குறைந்திருப்பதும், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதே சந்தையின் பொதுக் கணிப்பாகும். அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக இருப்பதாகவும், உலகின் முக்கிய பொருளாதாரங்களிலேயே இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

35
ரெப்போ விகிதம் மாற்றமில்லை
Image Credit : Asianet News

ரெப்போ விகிதம் மாற்றமில்லை

மேலும், ஆர்பிஐ தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை “நியூட்ரல்” என்றே தொடர்ந்துள்ளது. இதன் மூலம், குறைந்த வட்டி விகித சூழல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்ற சிக்னலை மத்திய வங்கி அளித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்திய பொருளாதாரம் நிலைத்த பாதையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

45
பணவீக்கம் கணிப்பு
Image Credit : Getty

பணவீக்கம் கணிப்பு

பணவீக்கம் குறித்த கணிப்புகளிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (மார்ச்–மே) பணவீக்கம் 4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த காலாண்டில் இது 4.2% ஆக உயரலாம். நடப்பு நிதியாண்டின் மொத்த சில்லறை பணவீக்கம் 2.1% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

55
மொத்த உள்நாட்டு உற்பத்தி
Image Credit : Getty

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.4% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 6.9% மற்றும் இரண்டாம் காலாண்டில் 7% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சி வேகம் தொடரும் என்பதைக் காட்டுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
கடன்
ரெப்போ விகிதம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Today: தாறுமாறா இறங்கிய தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்.! இப்போ வங்கலாமா?
Recommended image2
PM-KISAN: அடுத்த ரூ.2,000 தவணை வருமா? விவசாயிகள் உடனே செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்!
Recommended image3
Home Appliance Prices Climb: ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை உயர்கிறது! எப்போது வாங்கினால் சேமிக்கலாம்?
Related Stories
Recommended image1
அகவிலைப்படி 60% உயரப்போகுது.. எப்போ தெரியுமா? அரசு ஊழியர்களுக்கு புதிய அப்டேட்
Recommended image2
கோடை காலத்தில் தினமும் ரூ.1,000 சம்பாதிக்கலாம்.. வெயில் அதிகமானா காசும் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved