ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை; அடிச்சு தூக்கும் ஆபர்; எந்தெந்த போன்களுக்கு விலை குறைப்பு?
ப்ளிப்கார்ட்டில் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13ம் தேதி முதல் தொடங்குகிறது. எந்தெந்த போன்களுக்கு விலை குறைப்பு? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
Flipkart Republic Day Sale
குடியரசு தின சிறப்பு
இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் செல்போன்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளன. ப்ளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்கள் மற்றும் விவேஷ தினங்களில் சிறப்பு விற்பனை அறிவித்து மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட்டில் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Flipkart Special Sales
போன்களுக்கு விலை குறைப்பு
அதாவது பிளிப்கார்ட்டின் குடியரசு தின சிறப்பு விற்பனை Flipkart Plus எனப்படும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு 13ம் தேதியும், மற்ற சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 14ம் தேதியும் தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 16, கேலக்ஸி S24 பிளஸ், CMF போன் 1 மற்றும் மேக்புக் ஏர் M2 சாம்சங் கேலக்ஸி S24+, மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ, நத்திங் CMF போன் 1 உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
ஜியோ பயனர்களே! அடிக்கடி மிஸ்டு கால் வருதா? இதை மட்டும் செஞ்சிடாதீங்க!
IPHONE 16
ஐபோன் மாடல்கள்
மிக முக்கியமாக ஐபோன் 16, கேலக்ஸி S24 பிளஸ், CMF போன் 1 மற்றும் மேக்புக் ஏர் M2மாடல்களுக்கு அதிக ஆபர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 மாடலை பொறுத்தவரை ரூ.64,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும். அதன் ஆரம்ப விலையான ரூ.79,900 இலிருந்து ரூ.15,000 தள்ளுபடி செய்யப்படும். மேலும் தேர்வு செய்யபட்ட வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது கூடுதல் தள்ளுபடியை பெறலாம், இது தவிர iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும்.
Best Discount On Smartphones
ரூ.15,000 தள்ளுபடி
Galaxy ஸ்25 சீரிஸ் போன்கள் வெளியீட்டிற்கு முன்பு Galaxy S24 Plus போன் ரூ.60,000க்கும் குறைவாக விற்பனை செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது ரூ.99,999 விலையில் இருந்தது. இந்த விலையில் இருந்து அதிரடி தள்ளுபடியை ப்ளிப்கார்ட் வழங்க இருக்கிறது. மேலும் குடியரசு தின சிறப்பு விற்பனையில் CMF போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.14,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் இந்தியாவில் ரூ.16,999க்கு அறிமுகமான நிலையில் கிட்டத்தட்ட ரூ.3,000 விலை குறைப்பு செய்யப்படுகிறது.
இதேபோல் MacBook Air M2 மாடல் போன் ரூ.75,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16ஜிபி ரேம் வசதி கொண்ட இந்த போன் ரூ.90,000 என்ற விலையில் அறிமுகமான நிலையில், ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. குறைந்த விலையில் செல்போன்களை வாங்க ப்ளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனை சிறந்த தேர்வாக இருக்கும்.
ரூ.10,000 விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்; அட! லிஸ்ட்ல இந்த போனும் இருக்கா?