ரூ.10,000க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா போன்கள்; முழு விவரம்!
புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்கள் போனின் கேமரா குவாலிட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் ரூ.10,000 விலையில் சிறந்த கேமரா கொண்ட போன்கள் குறித்து பார்ப்போம்.
Best Camera Smartphones
பொங்கல் பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலானோர் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் நல்ல கேமரா குவாலிட்டி கொண்ட போன்களே இப்போது அனைவரின் தேர்வாக உள்ளது. அந்த வகையில் ரூ.10,000 விலைக்குள் நல்ல குவாலிட்டி கேரமா கொண்ட போன்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Vivo Smartphones
விவோ ஒய்18டி (vivo Y18T)
விவோ ஒய்18டி ஸ்மார்ட்போனில் 50 MP + 0.08 MP மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக 8 MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. மெயின் கேமராவில் Rear f/1.8லென்சும், செல்பி கேமராவில் f/2.0லென்சும் கொடுக்கப்பட்டுள்ளதால் நீங்கள் விரும்பியபடிய துல்லியமான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
இந்த போனில் 6.5 இன்ஸ் எல்சிடி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 15W வேகமான சார்ஜிங்குடன் 5000 mAh பேட்டரி பெற்றுள்ளது. Unisoc Octa-core இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்பேஸ் பிளாக், ஜெம் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.9,499 ஆகும்.
ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை! ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்!
Xiaomi Smartphones
சியோமி ரெட்மி A4 (Xiaomi Redmi A4)
இந்த பட்டியலில் சியோமி ரெட்மி A4 ஸ்மார்ட்போன் முதலிடத்தில் உள்ளது. இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா, 5எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் f/1.8, (wide)
Auxiliary லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களால் துல்லியமான தனித்துவமான போட்டோக்களை எடுக்க முடியும். செல்பி கேமராவில் 1080p@30fps லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதால் செல்பி போட்டோக்கள் அச்சு பதித்ததுபோல் இருக்கும்.
இந்த போனின் மற்ற அம்சங்களை பார்த்தோம் என்றால் 6.88 இன்ச் 120Hz IPS LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த Snapdragon 4s Gen 2 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 18W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5160 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.9,498 மட்டுமே. குறைந்த விலையில் நல்ல கேமரா போன்களை தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
Moto smartphone
மோட்டோரோலா ஜி35 (Motorola G35)
மோட்டோரோலா ஜி35 போனில் அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட 50MP பிரதான கேமரா, 16MP செல்பி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பயணம் செய்பவர்கள் விதவிதமான துல்லியமான போட்டோக்களை எடுக்க இந்த போன் வழிவகை செய்கிறது. இந்த போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.72 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. T760 Processor கொண்ட இந்த போனில் பாஸ்ட் சார்ஜிங் வழங்கும் 5000 mAh பேட்டரியும் அமைந்துள்ளது. Android 14 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. பல்வேறு வசதிகளை பெற்ற இந்த போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கிறது.
ரயில்வேயின் புதிய வாட்ஸ்அப் சேவை! ஒரே கிளிக்கில் முழுமையான தகவல்கள்!