ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. இது குறித்து ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடிக்கடி வரும் மிஸ்டு கால்
அடிக்கடி வரும் மிஸ்டு கால் எண்ணுக்குத் திருப்பிக் கூப்பிட்டால், உங்கள் கால் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த செயலை தவிர்ப்பது நல்லது.
பிரீமியம் ரேட் சேவை மோசடி
அதாவது பிரீமியம் ரேட் சேவை மோசடியில் சர்வதேச எண்களிலிருந்து மிஸ்டு கால்களை கொடுக்கிறார்கள். இந்த எண்ணுக்கு திருப்பிக் கூப்பிட்டால், பிரீமியம் ரேட் சேவையுடன் இணைக்கப்படும்.
மொத்த பணமும் காலியாகும்
இந்த மோசடியில், பயனர்களிடமிருந்து அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது. இது உங்கள் வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் காலி செய்யக்கூடும்.
மோசடியைத் தவிர்ப்பது எப்படி?
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நீங்கள் அறியாத குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். அவை உங்களுக்கு உண்மையான நம்பர்போல் தோன்றும்.
இதை செய்யாதீர்கள்
ஆகவே '+91' அல்லாத நாட்டுக் குறியீடுகளைக் கொண்ட எண்களைத் திருப்பிக் கூப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உள்ளூர் எண்களிடமும் உஷார்
சந்தேகத்திற்குரிய சர்வதேச எண்களிலிருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகளைப் பெற்றால் கவனமாக இருங்கள். தெரியாத உள்ளூர் எண்களுக்கும் திருப்பிக் கூப்பிடாதீர்கள்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
இந்த மோசடி பரவலைத் தடுக்க உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குத் இந்த மோசடி குறித்து தெரியப்படுத்துங்கள்