- Home
- டெக்னாலஜி
- 5.1 வயர்லெஸ் 3D ஆடியோ, மிரட்டும் எஃபெக்ட்ஸ்: வீட்டை தியேட்டராக மாத்தும் டி.சி.எல் டால்பி அட்மாஸ் சவுண்ட்பார்!
5.1 வயர்லெஸ் 3D ஆடியோ, மிரட்டும் எஃபெக்ட்ஸ்: வீட்டை தியேட்டராக மாத்தும் டி.சி.எல் டால்பி அட்மாஸ் சவுண்ட்பார்!
பிரதான சவுண்ட்பாருடன் ஒரு வயர்லெஸ் சப்வூஃபர், தலைக்குப் பின்னால் வைக்கக்கூடிய 2 வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன; போலி சரவுண்ட் போல் இல்லாமல் உண்மையான 3டி சவுண்ட் தருகிறது. ஸ்மார்ட்போனை இணைக்க ப்ளூடூத் வசதியும் உண்டு.

வீட்டை தியேட்டராக மாத்தும் டி.சி.எல் டால்பி அட்மாஸ் சவுண்ட்பார்!
புதுசா நல்ல இயர்பட்ஸ் வாங்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா? அதே பட்ஜெட்டில் உங்க வீட்டையே மினி தியேட்டராக மாற்றினால் எப்படி இருக்கும்? கற்பனை அல்ல, நிஜம். TCL S65K S சீரிஸ் 5.1 சேனல் சவுண்ட்பார் இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. டால்பி அட்மாஸ், டிடிஎஸ்:X வசதியுடன் வரும் சவுண்ட்பார் ஏன் இப்போது டெக் பிரியர்களின் ஹாட் சாய்ஸ்? பார்க்கலாம்!
உண்மையான தியேட்டர் ஃபீல்... போலி சரவுண்ட் இல்ல!
சந்தையில் சும்மா "சரவுண்ட் சவுண்ட்" என்று விளம்பரம் செய்யும் பல ஸ்பீக்கர்கள் சாப்ட்வேர் மூலமாக ஏதோ ஒலியைப் பெரிதாக்கிக் காட்டும். ஆனால், டி.சி.எல் கொடுப்பது பக்கா 5.1 ஆடியோ செட்டப். ஒரு மெயின் சவுண்ட்பார், அதிரவைக்கும் பேஸ் தரும் வயர்லெஸ் சப்வூஃபர், தலைக்கு பின்னால் வைக்கக்கூடிய 2 வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள்
ஸ்கிரீன் உங்களுக்குப் பின்னால் இருந்து ஹெலிகாப்டர் பறந்து போனால், நிஜமாகவே உங்க பின்னால் இருந்து அந்தச் சத்தம் பாய்ந்து வரும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கும் பாருங்கள்... அந்த ஃபீலை மென்பொருளால் தரவே முடியாது; நிஜ ஸ்பீக்கர்களால் மட்டுமே தர முடியும்!
வயர் சிக்கல் இல்லை... தலைவலியும் இல்லை!
ஹோம் தியேட்டர் என்றாலே ஹால் முழுக்க வயர் ஓடும், கால் இடறி கீழே விழுவோம் என்ற பயம் இனி வேண்டாம். இதில் வரும் சப்வூஃபர், ரியர் ஸ்பீக்கர்கள் எல்லாமே வயர்லெஸ். பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கு பவர் பாயிண்ட்டில் பிளக் போட்டால் போதும்; பிரதான சவுண்ட்பாருடன் நொடியில் கனெக்ட் ஆகிவிடும்.
வீட்டின் சீலிங்கில் தனியாக ஸ்பீக்கர் மாட்ட வேண்டிய அவசியமே இல்லை. டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம், மழைச் சத்தம் மற்றும் விமானத்தின் இரைச்சலை மேலிருந்து நேராக உங்க தலைக்கு மேல் இறக்கி முப்பரிமாண (3D Spatial Audio) மாயாஜாலத்தைக் கண்முன் நிறுத்தும்.
மினி தியேட்டராக மாற்றும் டி.சி.எல்-ன் புதிய சவுண்ட்பார்!
பல டிவிகளில் பின்னணி இசை அதிரும், ஆனால் நடிகர் என்ன பேசுகிறார் என்றே புரியாது. டி.சி.எல் உள்ள பிரத்யேக 'சென்டர் சேனல்' ஸ்பீக்கர், வசனங்களை மட்டும் தனியாகப் பிரித்து உங்கள் காதுகளுக்குத் துல்லியமாகக் கொண்டு சேர்க்கிறது.
HDMI eARC மூலம் ஒரே ஒரு கேபிளில் டிவியோடு இணைந்துவிடும். சவுண்ட்பாருக்குத் தனியாக ரிமோட் தேட வேண்டாம்; டிவி ரிமோட்டிலேயே வால்யூமை ஏற்றலாம், குறைக்கலாம். ஸ்மார்ட் போனை ப்ளூடூத்தில் இணைத்து உங்களுக்குப் பிடித்த பாடல்களை ரசிக்கலாம். மூவி, மியூசிக், கேமிங் மோட்ஸ் என நீங்க பார்ப்பதற்கு ஏற்ப தானாக ஒலிை மாற்றிக்கொள்ளும் ஆப்ஷன்களும் உண்டு.
பட்ஜெட் விலையில் பட்டையக் கிளப்பும் சரவுண்ட் சவுண்ட்
ஸ்பீக்கர்களை எங்கு வைப்பது என்று யோசித்து செட் பண்ண அதிகபட்சம் 20 நிமிஷம் போதும். டிவி ஆன் ஆனால் இதுவும் ஆன் ஆகும்; ஆஃப் ஆனால் இதுவும் ஆஃப் ஆகும். ஒரு சாதாரண இயர்பட்ஸ் வாங்கும் விலையில், வாழ்நாளே கொண்டாடும் தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த TCL 5.1 சவுண்ட்பார்... மிஸ் பண்ணவே கூடாத செம டீல்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

