MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தியேட்டர் அனுபவம் இனி வீட்டிலேயே... 1,610W ஆடியோவுடன் களமிறங்கிய ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 11000!

தியேட்டர் அனுபவம் இனி வீட்டிலேயே... 1,610W ஆடியோவுடன் களமிறங்கிய ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 11000!

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல், 1,610W RMS அவுட்புட் கொண்ட ஜூக் பார் 11000 சவுண்ட்பாரை அறிமுகப்படுத்தி உள்ளது. 20.32 செ.மீ சப்வூஃபர்கள், டால்பி அட்மாஸ், டிடிஎஸ்:X ஆதரவுடன் தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

1 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 17 2026, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 11000: விலை & சலுகை விவரங்கள்
Image Credit : ZEBRONICS

ஜெப்ரானிக்ஸ் ஜுக் பார் 11000: விலை & சலுகை விவரங்கள்

வீட்டிலேயே தியேட்டர் போன்ற அதிரடியான சவுண்ட் அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய ஜூக் பார் 11000 (Juke Bar 11000) சவுண்ட்பாரை சந்தையில் களமிறக்கியுள்ளது. அமேசான் தளத்தில் தற்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட ஆஃப்ர்ஸ், இதன் பிரம்மாண்ட அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜெப்ரானிக்ஸ் Juke Bar 11000 சவுண்ட்பாரில் என்ன ஸ்பெஷல்?
Image Credit : ZEBRONICS

ஜெப்ரானிக்ஸ் Juke Bar 11000 சவுண்ட்பாரில் என்ன ஸ்பெஷல்?

அமேசானில் இதன் விலை ரூ.69,999 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும்போது ரூ.2,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடி போக இந்த சவுண்ட்பாரை ரூ.67,499-க்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். கூடுதல் பலனாக கேஷ்பேக் மற்றும் வட்டி இல்லா சுலபத் தவணை (No Cost EMI) வசதிகளும் உள்ளன.

34
இந்தியாவின் முதல் 11.2.4 சேனல் ஆடியோ
Image Credit : ZEBRONICS

இந்தியாவின் முதல் 11.2.4 சேனல் ஆடியோ

11 டிரைவர்களுடன் கூடிய 11.2.4 சேனல் அமைப்பைக் கொண்ட இந்த சவுண்ட்பார், 1,610W RMS அவுட்புட் திறனுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள முதல் மாடலாகும். ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பாடல்களின் தாளத்தை மெருகேற்ற, 20.32 செ.மீ சப்வூஃபர்கள் இதில் 2 இணைக்கப்பட்டு உள்ளன. டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ்:X ஆகிய இரண்டின் ஆதரவுடன், அறையின் அனைத்து திசைகளிலிருந்தும் மிகத் துல்லியமான ஆடியோவை இது வழங்குகிறது.

44
அமேசானில் அசத்தும் ஜெப்ரானிக்ஸ் சவுண்ட்பார் டீல்!
Image Credit : ZEBRONICS

அமேசானில் அசத்தும் ஜெப்ரானிக்ஸ் சவுண்ட்பார் டீல்!

மிகவும் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் சுவரில் எளிதாகப் பொருத்தலாம் (Wall-mounted). மேலும், இதில் தெளிவான LED டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்டிங் வசதி மற்றும் மேக்னடிக் டாக்கிங் ரிமோட் (Magnetic docking remote) கொடுக்கப்பட்டுள்ளது. இசை பிரியர்களுக்காக UHF வயர்லெஸ் மைக்ரோஃபோனுடன் வருகிறது. பார்ட்டிகள் மற்றும் கரோக்கி பாடல்களுக்கு இது சிறந்தது.

True Wireless Home Audio ஆதரவு மூலம் பிற ஸ்பீக்கர்களுடன் எளிதாக இணைக்கலாம். அத்துடன் ப்ளூடூத் 5.3, TV eARC, Optical In, USB, AUX போர்ட்கள் மூலம் டிவி, ஸ்மார்ட்போன் மற்றும் கேமிங் கன்சோல்களை இணைக்கும் வசதி உள்ளது. ஹோம் தியேட்டர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைப்பவர்களுக்கு இந்த சவுண்ட்பார் மிகச் சிறந்த தேர்வு!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
F J Key: கீபோர்டில் F, J எழுத்தில் மட்டும் இந்த கோடு ஏன்? தினமும் பயன்படுத்தியும் கவனிக்காத ரகசியம்
Recommended image2
இன்னும் 0.02°C ஏறினால் அவ்ளோதான்... வரலாற்றின் மிக மோசமான 'காட்ஜில்லா' எல் நினோவாக உருவெடுக்கிறதா? விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை!
Recommended image3
Rainbow : வானவில் ஏன் எப்போதும் வளைந்து தெரியுது? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?
Related Stories
Recommended image1
AI Video : லட்சங்களில் வருமானம் தரும் AI வீடியோக்கள்! எப்படி உருவாக்குறாங்க தெரியுமா? நீங்களும் உருவாக்கலாம்!
Recommended image2
இன்னும் 0.02°C ஏறினால் அவ்ளோதான்... வரலாற்றின் மிக மோசமான 'காட்ஜில்லா' எல் நினோவாக உருவெடுக்கிறதா? விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved