அமெரிக்காவையே மிஞ்சப்போகும் இந்தியா? சுந்தர் பிச்சை போட்ட பலே பிளான்.. மோடி ஹேப்பி!"
Sundar Pichai கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI ஹப் மற்றும் 'இந்தியா அமெரிக்கா கனெக்ட்' திட்டத்தை அறிவித்தார். மோடி ஹேப்பி!"

Sundar Pichai
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா AI இம்பாக்ட் உச்சி மாநாட்டில்' (India AI Impact Summit 2026) பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நமது வாழ்நாளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தளம்" என்று குறிப்பிட்டார். இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் மொழி பன்முகத்தன்மை ஆகியவை AI வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா கனெக்ட் திட்டம்
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, 'இந்தியா-அமெரிக்கா கனெக்ட் இனிஷியேட்டிவ்' (India-America Connect Initiative) என்ற புதிய திட்டத்தை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்கா, இந்தியா மற்றும் தெற்கு அரைக்கோள நாடுகளில் உள்ள நாடுகளுக்கிடையே AI இணைப்பை மேம்படுத்த புதிய நீர்மூழ்கி கேபிள்கள் (Subsea Cables) அமைக்கப்பட உள்ளன. இது இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI ஹப்
கூகுள் நிறுவனம் இந்தியாவில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.2 லட்சம் கோடி) மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான 'AI ஹப்' (AI Hub) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் கிகாவாட் அளவிலான கம்ப்யூட்டிங் திறன் மற்றும் சர்வதேச நீர்மூழ்கி கேபிள் நுழைவாயில் ஆகியவை இடம்பெறும். இந்த முதலீடு இந்தியாவில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உலகத் தரத்திலான AI உள்கட்டமைப்பை இந்தியாவிற்கு கொண்டு வரும்.
இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு
இந்திய இளைஞர்களை AI உலகிற்குத் தயார்படுத்தும் வகையில், கூகுள் நிறுவனம் மிகப்பெரிய திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Skilling Programmes) அறிவித்துள்ளது. இதில் 'கூகுள் AI புரொபஷனல் சர்டிபிகேட்' (Google AI Professional Certificate) ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கப்படும். மேலும், கர்மயோகி பாரத் (Karma Yogi Bharat) திட்டத்தின் மூலம் 2 கோடி அரசு ஊழியர்களுக்கு AI கருவிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, அடல் டிங்கரிங் லேப்ஸ் (Atal Tinkering Labs) உடன் இணைந்து 10,000 பள்ளிகளில் ஜெனரேட்டிவ் AI (Generative AI) கருவிகள் அறிமுகப்படுத்தப்படும்.
ஆராய்ச்சிக்கான நிதி உதவி
அறிவியல் ஆராய்ச்சியைத் துரிதப்படுத்தும் நோக்கில், 'AI for Science Impact Challenge' என்ற திட்டத்தின் கீழ் 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.250 கோடி) நிதியையும் கூகுள் ஒதுக்கியுள்ளது. ஐஐடி (IITs) போன்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த அறிவிப்புகள் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய AI மையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

