- Home
- Lifestyle
- HBD Sundar Pichai: கல்லூரி காதல்... கூகுள் சிஇஓ!! வறுமையில் வாடிய சுந்தர் பிச்சை உச்சத்திற்கு போனது இப்படிதான்
HBD Sundar Pichai: கல்லூரி காதல்... கூகுள் சிஇஓ!! வறுமையில் வாடிய சுந்தர் பிச்சை உச்சத்திற்கு போனது இப்படிதான்
இன்று பிறந்தநாள் காணும் கூகுள் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குறித்த சுவாரசிய தகவல்கள்..அவருக்கு வயது 51.

நம் நாட்டைப் பெருமைப்படுத்திய பல ஆளுமைகளில் ஒருவர் சுந்தர் பிச்சை. இவர் 1972 இல் ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவில் தவிர்க்கமுடியாத இடத்திற்கு சென்ற சுந்தர்பிச்சை குறித்த சில சுவாரசிய தகவல்களை காணலாம்.
வறுமையில் வாடிய சுந்தர்:
இப்போது பல கோடிகளை வருமானமாக ஈட்டும் சுந்தர் பிச்சை, தன் பால்ய காலத்தில் நடுத்தரக் குடும்பத்தில் தான் வளர்ந்திருக்கிறார். சுந்தர் பிச்சை சிறுவயதில் வளர்ந்த வீட்டில் வறுமை இருந்தது என்றும் பால்ய கால வறுமையால் நிறைய கவலை அடைந்ததாகவும் கூறியுள்ளார். அப்பொதெல்லாம் வீட்டின் கூடத்தில் எல்லோரும் ஒன்றாக தரையில் படுத்து கொள்வார்களாம். இப்போது கூட அவருடைய படுக்கைக்கு அருகே தண்ணீர் பாட்டில் இல்லாமல் தூங்கவேமாட்டாராம்.
சுந்தர் பிச்சை முதலாவதாக கூகுளில் பணியமர்த்தப்படவில்லை. அவர் 2004ஆம் ஆண்டு கூகுளில் பணியில் சேரும் முன்பாக மெக்கின்சி & கம்பெனியில் தான் கொஞ்ச காலம் வேலை செய்தார். அதன் பிறகு அந்த மாற்றம் வந்தது. அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி நமக்கு முட்டாள்கள் தினமாக தானே தெரியும். ஆனால் சுந்தர் பிச்சையின் புத்திசாலித்தனத்தை வெளிகாட்ட நல்ல வாய்ப்பை அவருக்களித்த நாள் தான் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி. அன்றைய கூகுள் ஜிமெயில் லாஞ்ச் செய்துள்ளது. சுந்தரிடம் ஜிமெயில் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஜிமெயிலை எப்படியெல்லாம் விரிவாக்கம் செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.
கூகுளின் தயாரிப்புகளான குரோம், குரோம் ஓஎஸ் போன்ற பலவற்றை சுந்தர் பிச்சை மேலாண்மை செய்துள்ளார். பரவலாக பயன்பாட்டில் இருக்கும் கூகுள் டிரைவின் வளர்ச்சியில் கூட இவருக்கு பங்குள்ளது. கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல புதிய தயாரிப்புகளின் மேம்பாட்டையும் சுந்தர் தொடர்ந்து மேற்பார்வையிட்டார்.
உழைப்பின் பயனாக ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு, சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான 5 ஆண்டுகளுக்குப் பிறகு, பிச்சை ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் 3ஆவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
மண வாழ்க்கை:
தன்னுடன் கல்லூரியில் பயின்ற அஞ்சலியை சுந்தர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கிரண் என்ற மகனும், காவ்யா என்ற மகளும் உள்ளனர். இவரது குடும்ப வாழ்க்கை தவிர தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு பிடித்த விஷயங்கள் இரண்டு. ஒன்று கிரிக்கெட், மற்றொன்று கால்பந்து. எஃப்சி பார்சிலோனாவின் தீவர ரசிகர் தான் சுந்தர பிச்சை.
இதையும் படிங்க: அம்பானி மனைவி பிட்னஸுக்கு இதையா பண்ணுறாங்க! பணம் இருந்தாலும் அப்படிதனா