MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னையில் வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கியதும் இடித்து தரைமட்டமாக்கிய தமிழ் நடிகர்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னையில் வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கியதும் இடித்து தரைமட்டமாக்கிய தமிழ் நடிகர்

கூகுள் நிறுவனத்தில் சிஇஓ-வாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை தன் இளமை காலத்தில் சென்னையில் வாழ்ந்த வீட்டை தமிழ் நடிகருக்கு விற்றுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 23 2023, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலகளவில் புகழ்பெற்ற தேடுபொறி தளமாக விளங்கி வருகிறது கூகுள். மனிதனின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவும் கூகுள் மாறிவிட்டது. ஏதேனும் தகவல் வேண்டுமானால் அனைவரும் முதலில் நாடுவது கூகுளை தான். அந்த அளவுக்கு பேமஸ் ஆன தேடுபொறி தளமாக விளங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் தான் தன் பள்ளிப்படிப்பை முடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளி பயின்றபோது அசோக் நகரில் தான் வசித்து வந்தார். அங்கு சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சைக்கு சொந்தமாக வீடு இருந்தது. அந்த வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார்களாம். சுந்தர் பிச்சை வளர்ந்த அந்த வீட்டை தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கு சி மணிகண்டன் என்பவர் தான் தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்... குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான கியூட் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய ‘அகநக’ பாடலின் முழு வீடியோ இதோ

35

இந்த சொத்தை வாங்கியது எப்படி என்பது பற்றி மணிகண்டன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தாராம் மணிகண்டன். சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இது என்பதால் அவர் பெயரில் தான் இந்த வீடு இருந்ததாம். அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க 4 மாதங்கள் ஆனதாம்.

45

வீட்டிற்கான சொத்து ஆவணங்களை தன்னிடம் வழங்கியபோது ரெகுநாத பிச்சை கண்கலங்கியதாக தெரிவித்துள்ள மணிகண்டன், சுந்தர் பிச்சையின் அம்மா தனக்கு சுவையான் பில்டர் காபி போட்டுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சுந்தர் பிச்சையின் தந்தை என அலட்டிக்கொள்ளாமல் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து எல்லா வரிகளையும் செலுத்திவிட்டு சொத்துக்கான ஆவணங்களை ரெகுநாத பிச்சை தன்னிடம் ஒப்படைத்ததாக மணிகண்டன் கூறி உள்ளார்.

55

வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்பதற்காக ரெகுநாத பிச்சை தன் மகனின் பெயரை ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை என மணிகண்டன் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை வாழ்ந்த வீட்டை வாங்கியதும் அதனை தரைமட்டமாக இடித்த மணிகண்டன் அங்கு தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறாராம். 

இதையும் படியுங்கள்...  Pichaikkaran 2 Review : பிச்சைக்காரன் 2 படம் பார்த்துவிட்டு வந்த கூல்சுரேஷ் மற்றும் மக்கள் கருத்து!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுந்தர் பிச்சை
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved