Vivo S2: விலை மிடில் கிளாஸ்.. ஃபீச்சர்ஸ் டாப் கிளாஸ்... விவோவின் அட்டகாசமான போன் ரெடி!
Vivo S2: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, தனது S1 மாடலுக்குப் பிறகு சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பின் Vivo S2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வளைந்த AMOLED டிஸ்ப்ளே, பிரீமியம் அனுபவம்
Vivo S2 போனில் 6.83-இன்ச் 1.5K 3D வளைந்த அமோலெட் டிஸ்ப்ளேவை கொடுத்திருக்காங்க. இந்த ஸ்க்ரீன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்வதால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் ரொம்பவே ஸ்மூத்தாக இருக்கும். மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருப்பதால், நேரடி சூரிய ஒளியிலும் ஸ்கிரீனை தெளிவாகப் பார்க்க முடியும். இந்த போன் ஆண்ட்ராய்டு 16 OriginOS 6-ல் இயங்குகிறது. இதன் செயல்திறனை அதிகரிக்க மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசஸரை பயன்படுத்தியுள்ளனர்.
4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்
பிரம்மாண்ட பேட்டரி... IP69 பாதுகாப்பு
விலை எவ்வளவு?
Vivo S2 போனை நிறுவனம் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் வெளியிட்டுள்ளது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.39,999 ஆகவும், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.45,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர், ஃபிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். ஆகஸ்ட் 11 முதல் விற்பனை தொடங்குகிறது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற சலுகைகளும் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

