- Home
- டெக்னாலஜி
- SpaceX Stock: 3 நாட்களில் ரூ.57 லட்சம் கோடி போச்சு.. உலகையே அதிரவைத்த சரிவை சந்தித்த ஸ்பேஸ்எக்ஸ்
SpaceX Stock: 3 நாட்களில் ரூ.57 லட்சம் கோடி போச்சு.. உலகையே அதிரவைத்த சரிவை சந்தித்த ஸ்பேஸ்எக்ஸ்
SpaceX Stock: உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்த சில நாட்களிலேயே, ஸ்பேஸ்எக்ஸ் எதிர்பாராத பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

சாதனை வளர்ச்சிக்குப் பிறகு அதிர்ச்சி சரிவு
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்த சில நாட்களிலேயே, எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்துள்ளது. வெறும் மூன்று வர்த்தக நாட்களில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்த இழப்பு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பையும் பல மடங்கு மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
பங்குகள் ஏன் திடீரென சரிந்தன?
மெகா பங்கு வெளியீட்டின் மூலம் சாதனை அளவிலான முதலீட்டை ஈர்த்த பிறகு, நிறுவனத்தின் பங்கு விலை வேகமாக உயர்ந்தது. இந்த உயர்வை பயன்படுத்தி பல முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்ய பங்குகளை விற்பனை செய்ததால், பங்கின் விலையில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக மூன்று நாட்களில் பங்கு விலை 23 சதவீதம் வரை சரிந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு முதலீடு கவனத்தில்
செயற்கை நுண்ணறிவு துறையில் ஸ்பெஸ்எக்ஸ் தீவிர முதலீட்டைத் தொடங்கியிருப்பது சந்தையில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. புதிய நிதி திரட்டும் திட்டங்கள் மற்றும் ஏஐஐ நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் குறித்து வெளியான தகவல்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் இருந்தாலும், குறுகிய காலத்தில் அதன் தாக்கம் பங்கின் விலையை பாதித்ததாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று
கடுமையான சரிவுக்குப் பிறகு, 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன் ஸ்பெஸ்எக்ஸ் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. இருப்பினும், வேகமான வளர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட இந்த திடீர் சரிவு, அதிக மதிப்பீடு பெற்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

