ChatGPT-ல் இதையெல்லாம் தேடுவீங்களா? போலீஸ் உங்க வீட்டு கதவை தட்டும்.. உஷார் மக்களே!
ChatGPT Warning: இன்று நமக்கு அனைத்து வழிகளிலும் ஏஐ உதவி செய்து வரும் நிலையில், சாட்ஜிடிபியிடம் சில கேட்கக்கூடாத கேள்விகள் உள்ளன. இது போலீசையே உங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடும். இது குறித்து பார்ப்போம்.

ChatGPT Warning
இன்றைய நவீன யுகத்தில் சின்ன விஷயத்துல இருந்து பெரிய விஷயம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஏஐ உதவியைத் தான் நாடியிருக்கிறோம். இப்போதையை ஏஐ யுகத்தில் சாட்ஜிடிபி, ஜெமினி ஆகியவை கொடிகட்டி பறக்கின்றன. நாம் 24 மணி நேரமும் எந்த ஒரு கேள்வியையும் சாட்ஜிடிபியிடம் கேட்கிறோம்.
எந்தக் கேள்வி கேட்டாலும் நொடியில் பதில் கிடைப்பதால், நாளுக்கு நாள் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
சாட்ஜிடிபியிடம் ஏ டூ இசட் கேள்விகள்
ஒரு சின்ன கேள்வி முதல் பெரிய பிரச்சனைகள் வரை, எல்லாவற்றுக்கும் சாட்ஜிடிபியிடம் தீர்வு கேட்கும் அளவுக்கு இந்தியர்கள் இதற்குப் பழகிவிட்டார்கள். இந்தியர்களின் தகவல்களைச் சேகரிக்கும் நோக்கத்தில்தான், அமெரிக்காவில் கட்டணம் வசூலிக்கும் இதே நிறுவனம், இந்தியாவில் மட்டும் இதை இலவசமாகக் கொடுக்கிறது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இலவசமாகக் கிடைத்தால் எதையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் இந்தியர்களின் மனநிலை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
போலீசாரின் எச்சரிக்கை
ஆனால், இதே ChatGPT உங்களைக் கம்பி எண்ண வைக்கவும் காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று எல்லா கேள்விகளுக்கும் ChatGPT-யிடம் பதில் தேடுகிறீர்கள் சரிதான். சிலர் நண்பர்கள் கூட இல்லாமல், தங்களின் பேச்சைக் கேட்கும் ChatGPT-யையே ஃப்ரெண்டாக நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இதைத் தங்கள் காதலன்/காதலி போல நினைத்து தினமும் அரட்டை அடிக்கிறார்கள்.
சாட்ஜிபிடியிடம் இந்த கேள்விகளை கேட்காதீங்க
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நீங்கள் ஆர்வத்திலோ, வேண்டுமென்றோ அல்லது விளையாட்டுக்கோ சாட்ஜிடிபியிடம் குற்றம் சம்பந்தமான ஏதாவது கேள்வியைக் கேட்டால், உங்கள் கதை முடிந்தது. 'இது எனக்கும் என் மொபைலில் உள்ள சாட்ஜிடிபிக்கும் சம்பந்தப்பட்டது' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சாட்ஜிடிபி உங்களை விட ரொம்ப உஷாரானது.
நீங்கள் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான கேள்விகளைக் கேட்டாலும், அதை நீங்கள் நகைச்சுவைக்காகக் கேட்கிறீர்களா, அல்லது வேண்டுமென்றே கேட்கிறீர்களா என்பதையெல்லாம் அது பார்க்காது. உங்கள் கேள்விகள் நேரடியாக கிரைம் பிராஞ்சுக்கு அனுப்பப்படும். திரும்பத் திரும்ப இதே போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டால், போலீஸார் நேரடியாக உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவார்கள்.
குற்றவாளிகளுக்கு உதவிய சாட்ஜிடிபி
ஏற்கனவே சில கிரிமினல் வழக்குகளில், குற்றவாளிகள் சாட்ஜிடிபி மூலமாகவே தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் பின்னணியில், இந்த நடைமுறை இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கேட்கும் ஒரு சின்ன சந்தேகக் கேள்வி கூட, உங்களுக்கே எதிராகத் திரும்பலாம், உஷார் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சாட்ஜிடிபி உண்மையை மட்டுமே கூறுமா?
சாட்ஜிடிபி உள்ளிட்ட AI தளங்களில் நீங்கள் உள்ளிடும் தரவுகள் அவற்றின் மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படலாம். எனவே, உங்களின் தனிப்பட்ட நிதி விவரங்கள், பாஸ்வேர்ட் அல்லது நிறுவனங்களின் ரகசியத் தரவுகளை AI உரையாடல்களில் பகிரக்கூடாது.
ஏஐ தரும் அனைத்துப் பதில்களும் 100% துல்லியமானவை அல்ல. சில நேரங்களில் தவறான அல்லது கட்டுக்கதையான தகவல்களை உண்மையைப் போலத் தரும். எனவே, மருத்துவச் சிகிச்சை, சட்ட ஆலோசனைகள் மற்றும் நிதி முதலீடுகளுக்கு AI-ஐ மட்டுமே முழுமையாக நம்பக்கூடாது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

