- Home
- டெக்னாலஜி
- சாம்சங் vs எல்ஜி ஸ்மார்ட் டிவி: இரண்டில் எது உங்க பணத்திற்கு வொர்த்? தொழில்நுட்ப வல்லுநர்களின் ரிப்போர்ட்!
சாம்சங் vs எல்ஜி ஸ்மார்ட் டிவி: இரண்டில் எது உங்க பணத்திற்கு வொர்த்? தொழில்நுட்ப வல்லுநர்களின் ரிப்போர்ட்!
புதிய ஸ்மார்ட் டிவி வாங்குபவர்களுக்குச் சிறந்த தேர்வாக விளங்கும் சாம்சங் மற்றும் எல்ஜி பிராண்டுகளின் இயங்குதளங்களை தொழில்நுட்ப நிபுணர்கள் ஒப்பீடு செய்துள்ளனர்.

சிறந்த ஸ்மார்ட் டிவி எந்த பிராண்டினுடையது?
ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்கத் திட்டமிட்டால், உங்கள் நினைவுக்கு வரும் முதல் 2 முக்கிய பிராண்டுகள் சாம்சங் (Samsung) மற்றும் எல்ஜி (LG) ஆகும். 'கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்' வெளியிட்ட முன்னணி டிவி பிராண்டுகளின் தரவரிசையில் இவ்விரு நிறுவனங்களும் முதலிடத்தில் உள்ளன.
மேலும் 2026-ஆம் ஆண்டின் சிறந்த டிவியாக Samsung QN65S90F மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரையின் தரம் (Display Quality) மட்டுமின்றி, ஒரு டிவி எவ்வளவு சிறப்பாக 'ஸ்மார்ட் டிவி'யாகச் செயல்படுகிறது என்பதும் மிக முக்கியமான காரணியாகும். சாம்சங் மற்றும் எல்ஜி டிவிகளின் ஸ்மார்ட் இயங்குதளங்கள் (Operating Systems), வசதிகள் மற்றும் ஏ.ஐ (AI) உதவியாளர்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ரிப்போர்ட்களை பற்றி பார்போம்.
ஸ்மார்ட் டிவி இயங்குதளம் & பயன்பாடு
சாம்சங் நிறுவனம் 'டைசன்' (Tizen) என்ற இயங்குதளத்தையும், எல்ஜி நிறுவனம் 'வெப்ஓஎஸ்' (webOS) என்ற இயங்குதளத்தையும் பயன்படுத்துகின்றன. இரண்டுமே ஆப்ஸ்கள் (Apps), பரிந்துரைக்கப்படும் வீடியோக்கள் மற்றும் சமீபத்தில் பார்த்த உள்ளடக்கங்களை காண்பிக்கும் 'டைல்' (Tile) வடிவ முகப்புப் பக்கத்தைக் கொண்டுள்ளன.
வடிவமைப்பு ஒப்பீடு - TechRadar மற்றும் Pocket-lint ஆகிய தொழில்நுட்ப தளங்கள் சாம்சங்கை விட எல்ஜியின் webOS இயங்குதளத்தையே சற்றே சிறந்ததாகக் கருதுகின்றன.
அமைப்புகள் (Settings Menu) - Pocket-lint தளத்தின் கருத்துப்படி, எல்ஜி டிவியில் செட்டிங்ஸ் பேனல் திரையின் இடதுபுறத்தில் ஒரு பத்தியாக (Column) தோன்றும். இதனால் திரையின் படத்தின் தன்மையை மாற்றும்போது காட்சி தெளிவாகத் தெரியும். ஆனால் சாம்சங் டிவியில் செட்டிங்ஸ் விண்டோ திரையின் நடுவிலேயே தோன்றுவது சற்று அசௌகரியமாக உள்ளது.
சாம்சங் பிக்ஸ்பி எல்ஜி திங்க் ஏ.ஐ ஒப்பீடு
முன்பு எல்ஜி டிவிகளில் 'கூகுள் அசிஸ்டெண்ட்' (Google Assistant) நேரடியாக வழங்கப்பட்டதால் எல்ஜி முன்னிலையில் இருந்தது. ஆனால் 2025-இல் எல்ஜி தனது டிவிகளில் கூகுள் அசிஸ்டெண்ட் சேவையை நிறுத்திவிட்டது. தற்பொழுது 2 பிராண்டுகளும் ஆமேசான் அலெக்சா (Amazon Alexa) ஆதரவை மட்டுமே வழங்குகின்றன.
மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot) - கூகுள் அசிஸ்டெண்டிற்குப் பதிலாக இரு நிறுவனங்களும் 'மைக்கேரோசாஃப்ட் கோபைலட்' ஏ.ஐ-ஐ அறிமுகப்படுத்தின. எல்ஜி பயனர்களிடமிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 2025 டிசம்பரில் அந்த ஐகானை மறைக்கும் வசதியை எல்ஜி வழங்கியது. சாம்சங் டிவிகளிலும் இந்த ஏ.ஐ வசதி இருந்தாலும், அதை எளிதில் அகற்ற முடிவதில்லை என்று பயனர்கள் புகாரளிக்கின்றனர்.
சொந்த ஏ.ஐ உதவியாளர்கள் - சாம்சங்கின் பிக்ஸ்பி (Bixby) மற்றும் எல்ஜியின் ThinQ AI ஆகியவை பெரிய அளவில் பயனர்களைக் கவரவில்லை. "இன்று இரவில் டிவியில் என்ன ஒளிபரப்பாகிறது?" போன்ற எளிய கேள்விகளுக்குக் கூட பிக்ஸ்பி சரியான பதிலை அளிக்கவில்லை என Tom's Guide விமர்சித்துள்ளது.
இறுதித் தீர்ப்பு (Final Verdict)
தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துப்படி, ஏ.ஐ வாய்ஸ் உதவியாளர்களை விட இயங்குதளத்தின் (OS) பயன்பாட்டு எளிமையே ஒரு டிவியின் தரத்தை தீர்மானிக்கிறது. பயன்பாட்டு வசதியில் எல்ஜியின் webOS சற்றே முன்னிலையில் இருந்தாலும், சாம்சங்கின் Tizen OS அதற்கடுத்தபடியாக ஒரு சிறந்த தேர்வாகவே நீடிக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.








