MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • SIM Cards: உங்க ஆதாரில் எத்தனை சிம் இருக்கு? 2 நிமிஷத்துல செக் பண்ணுங்க.. இல்லனா சிக்கல்தான்!

SIM Cards: உங்க ஆதாரில் எத்தனை சிம் இருக்கு? 2 நிமிஷத்துல செக் பண்ணுங்க.. இல்லனா சிக்கல்தான்!

SIM Cards: சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை 2 நிமிடங்களில் ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம். அறிமுகமில்லாத எண்கள் இருந்தால் உடனே புகார் அளித்து முடக்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 08 2026, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உங்கள் பெயரில் எத்தனை சிம்கள் உள்ளன?
Image Credit : our own

உங்கள் பெயரில் எத்தனை சிம்கள் உள்ளன?

உங்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, உங்களுக்குத் தெரியாமலேயே யாராவது சிம் கார்டு வாங்கியிருந்தால், அதனால் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீங்களே பொறுப்பாக நேரிடும். அந்தச் சிம் கார்டைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றம், பண மோசடி அல்லது போலி அழைப்புகள் செய்தால், காவல்துறை முதலாவதாக உங்களையே விசாரணை செய்யும்.

9 சிம் கார்டுகள்

மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) விதிமுறைப்படி, ஒருவரின் பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே இருக்க முடியும். ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த எல்லை 6 சிம் கார்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, ஆதார் விவரங்களைத் திருடி சிம் கார்டு பெற்று, வங்கிச் கணக்கில் உள்ள பணத்தைக் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, உங்களின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயல்பாட்டில் (Active) உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பரிசோதிக்கும் முறை
Image Credit : social media

பரிசோதிக்கும் முறை

இதற்காக நீங்கள் எங்கும் நேரில் செல்ல வேண்டியதில்லை. மத்திய அரசின் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) இணையதளத்தில் உள்ள TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) சேவை மூலம் 2 நிமிடங்களில் இதனைச் சரிபார்க்கலாம்.

முதலில் உங்களின் கைப்பேசி அல்லது கணினியில் tafcop.sancharsaathi.gov.in அல்லது sancharsaathi.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும். இது முழுமையாக மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட இணையதளமாகும்.

இணையதளத்தில் 'Citizen Centric Services' பிரிவில் உள்ள 'Know Your Mobile Connections' என்ற தேர்வைக் கிளிக் செய்யவும். உங்களின் ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணைப் பதிவிட்டு, கேப்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும். வேலிடேட் ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் செல்போனுக்கு வரும் ஓடிபி யை டைப் செய்து உள்நுழையவும்.

Related Articles

Related image1
உங்கள் வாட்ஸ்அப் முடங்கப்போகிறதா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய 'SIM' விதிமுறை!
Related image2
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
34
தேவையற்ற எண்களைப் புகாரளித்தல்
Image Credit : our own

தேவையற்ற எண்களைப் புகாரளித்தல்

உள்நுழைந்ததும், உங்களின் ஆதார் அட்டையைக் கொண்டு பெறப்பட்ட அனைத்துச் செயல்பாட்டிலுள்ள செல்போன் எண்களின் பட்டியல் திரையில் தோன்றும். அப்பட்டியலைச் கவனமாகச் சரிபார்க்கவும். அதில் உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத எண்கள் ஏதேனும் இருந்தால், அந்த எண்ணிற்கு அருகில் உள்ள பாக்சில் டிக் செய்யவும்.

44
புகாரளிக்கும் முறை
Image Credit : our own

புகாரளிக்கும் முறை

எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, கீழே 'This is not my number', 'Not required', 'Required' ஆகிய மூன்று தேர்வுகள் காணப்படும். உங்களுக்குத் தெரியாத எண்ணிற்கு 'This is not my number' என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்து, 'Report' பட்டனை கிளிக் செய்யவும்.

நீங்கள் புகாரளித்தவுடன், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனம் அதனை ஆய்வு செய்யும். அது உண்மையிலேயே முறைகேடான எண் என்று உறுதிசெய்யப்பட்டால், 30 முதல் 45 நாட்களுக்குள் அந்த எண் முடக்கப்படும் (Block). உங்களின் புகாரைக் கண்காணிக்கக் கோரிக்கை அடையாள எண் (Request ID) வழங்கப்படும். அதனைக் கொண்டு புகாரின் நிலையைக் கண்டறியலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சிம் அட்டை
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 18 Pro Max: விலை, கேமரா, பேட்டரி அப்டேட்ஸ்... செப்டம்பர் 9-ல் என்ன ஸ்பெஷல்?
Recommended image2
Xiaomi 18 Fold: இன்னைக்கு லாஞ்ச்! பாஸ்போர்ட் சைஸ், மிரட்டலான கேமரா... விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஒரே சார்ஜில் 2 நாட்கள் பேக்கப்! பிரீமியம் அம்சங்களுடன் களம் இறங்கிய மோட்டோ வாட்ச் அல்ட்ரா!
Related Stories
Recommended image1
உங்கள் வாட்ஸ்அப் முடங்கப்போகிறதா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய 'SIM' விதிமுறை!
Recommended image2
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved