பொங்கலுக்கு முன்பே ஷாக்! சாம்சங் போன்கள் விலை தாறுமாறு உயர்வு!
சாம்சங் நிறுவனம், ஜனவரி 2026 முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன.

சாம்சங் விலை உயர்வு
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புத்தாண்டு தொடக்கமே உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சாம்சங் நிறுவனம் ஜனவரி 2026 முதல் தனது சில பிரபலமான ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக கேலக்ஸி ஏ சீரீஸ் மற்றும் கேலக்ஸி எஃப் சீரிஸில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் இப்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதும், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான முதலீட்டு அழுத்தமும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். புதிய விலைகள் ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விலை உயர்வில் அதிகபட்ச பாதிப்பை சந்தித்தது சாம்சங் கேலக்சி A56 மாடல். அனைத்து ஸ்டோரேஜ் வேரியண்ட்களுக்கும் ரூ.2,000 நேரடி உயர்வு செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் போன்
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இப்போது ரூ.46,999 ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.43,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி பேஸ் வேரியண்ட் ரூ.40,999 ஆகவும் விற்கப்படுகிறது. இதேபோல், மிட்-ரேஞ்ச் பயனாளர்களிடையே பிரபலமான சாம்சங் கேலக்சி A36 மாடலின் விலை ரூ.1,500 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பிரிவில் உள்ள போன்களும் சற்று காஸ்ட்லியாக மாறியுள்ளது.
பட்ஜெட் பிரிவிலும் விலை உயர்வு தாக்கம் ஏற்படுத்தியது. சாம்சங் கேலக்சி F17 5G மாடலின் அனைத்து வேரியண்டுகளுக்கும் ரூ.1,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் 5G போன் வாங்க நினைத்தவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், கேலக்ஸி S25 சீரிஸ், கேலக்ஸி Z ஃபோல்டு 7, Z ஃபிளிப் 7 போன்ற ஃப்ளாக்ஷிப் மாடல்களின் விலையை உயர்த்தியதாக சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சந்தை தகவல்களின்படி, வரவிருக்கும் கேலக்ஸி S26 சீரிஸுக்கும் இந்த விலை உயர்வு தற்போது பொருந்தாது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

