தினமும் சார்ஜ் போட வேண்டாம்.. ஒன்பிளஸ் 9,000mAh போன் ரெடி.. எப்போது தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனம் 9,000mAh சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சீனாவில் ஒன்பிளஸ் டர்போ சீரிஸ் ஆகவும், உலகளவில் ஒன்பிளஸ் நார்ட் 6 சீரிஸ் ஆகவும் அறிமுகமாக உள்ளது.

ஒன்பிளஸ் புதிய ஸ்மார்ட்போன்
சிறிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் காரணமாக பலர் தினமும் அல்லது மூன்று முறை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், மொபைல் நிறுவனங்கள் தற்போது அதிக திறன் கொண்ட பேட்டரிகளை கொண்ட போன்களை உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில், OnePlus நிறுவனம் 9,000mAh சக்திவாய்ந்த பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் டர்போ சீரிஸின் ஒரு சீன சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் வெளியான தகவல்களின் படி, இந்த போனுக்கான முன்பதிவுகளை ஒன்பிளஸ் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாடல், ஓன்பிளஸ் 15 போன்ற செவ்வக வடிவ கேமரா மாட்யூலை கொண்ட மிட்-பேட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பிளஸ் டர்போ சீரிஸ்
இந்த ஒன்பிளஸ் டர்போ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 7-சீரிஸ் பிராசஸர் பயன்படுத்தப்படலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இன்-டிஸ்ப்ளே பஞ்ச்-ஹோல் கேமராவும் இதில் இடம் பெறும். இந்த அம்சங்கள் அனைத்தும் இதை ஒரு பவர்ஃபுல் மிட்-ரேஞ்ச் போனாக மாற்றுகின்றன.
முக்கியமாக, இந்த போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9,000mAh பேட்டரி என வழங்கப்படும். இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது OnePlus Nord 6 Series என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம். 2026 மார்ச் மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress நிகழ்ச்சியில் இந்த புதிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் வெளியிடும் வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய பேட்டரி தேடும் பயனர்களிடையே இந்த போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

