ஒரு கப் டீ விலையை விட குறைவு.. ரூ.11-க்கு ஜியோ பயனர்களுக்கு சூப்பர் ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.11 விலையில் ஒரு புதிய டேட்டா பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ வழங்கும் இந்த ப்ரீபெய்டு டேட்டா பிளானின் விலை வெறும் ரூ.11 மட்டுமே.

ஜியோ ரூ.11 ரீசார்ஜ்
ஒரு கப் டீ விலையிலேயே ரீசார்ஜ் செய்யலாம். உண்மைதான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் ஒரு கப் டீ கூட ரூ.10 முதல் ரூ.15 வரை செலவாகும் நிலையில், அதைவிட குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான் வழங்கப்படுகிறது. குறைந்த செலவில் அவசர தேவைக்கு இணைய வசதி தேவைப்படுவோரைக் கவனத்தில் கொண்டு, ஜியோ இந்த சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ வழங்கும் இந்த ப்ரீபெய்டு டேட்டா பிளானின் விலை வெறும் ரூ.11 மட்டுமே.
ஜியோ மலிவு பிளான்
குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வேண்டும் என்ற பயனர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த பிளான், குறிப்பாக அவசர நேரங்களில் மிகவும் பயன்படக்கூடியதாக உள்ளது. ரூ.11 ரீசார்ஜ் பிளானின் முக்கிய அம்சம், இதில் 10ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுவது தான். ஆனால், இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் 1 மணி நேரம் மட்டுமே. அதாவது, குறுகிய நேரத்தில் அதிக அளவு டேட்டா தேவைப்படும் சூழ்நிலைகளுக்காகவே இந்த பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோ டவுன்லோடு, அவசர ஆஃபீஸ் வேலை, அல்லது முக்கிய கோப்புகள் அனுப்ப வேண்டிய நேரங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோ டேட்டா பிளான்
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இது ஒரு டேட்டா-மட்டும் பிளான். இதில் அழைப்புகள், எஸ்எம்எஸ் அல்லது பிற கூடுதல் நன்மைகள் கிடையாது. உங்கள் முதன்மை ரீசார்ஜ் பிளானுடன் இணைத்து இதை பயன்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக, ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.11 போன்ற பிளான் இல்லை. அங்கு கிடைக்கும் குறைந்தபட்ச டேட்டா பிளான் ரூ.22 ஆகும்; அதில் 1GB டேட்டா மட்டும், 1 நாள் வாலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதனால், அவசர டேட்டா தேவைக்கு ஜியோவின் ரூ.11 பிளான் அதிக கவனம் பெறுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

