- Home
- டெக்னாலஜி
- கலக்கலான பொங்கல் ட்ரீட்.. 9,000mAh பேட்டரி, Snapdragon சிப்.. ஒன்பிளஸ் செய்யப்போகும் தரமான சம்பவம்
கலக்கலான பொங்கல் ட்ரீட்.. 9,000mAh பேட்டரி, Snapdragon சிப்.. ஒன்பிளஸ் செய்யப்போகும் தரமான சம்பவம்
9,000mAh என்ற பிரம்மாண்ட பேட்டரி, Snapdragon 8s Gen 4 சிப், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் ஒன்பிளஸ் Turbo 6 சீரிஸ் வரவுள்ளது. இது மிட்-ரேஞ்ச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் Turbo 6 சீரிஸ்
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் சீனாவில் Turbo 6 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த சீரியஸில் Turbo 6 மற்றும் Turbo 6V என இரண்டு மிட்-ரெஞ்ச் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, 9,000mAh என்ற மிகப்பெரிய பேட்டரி இந்த போன்களின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட Qualcomm சிப் செட் மற்றும் உயர் தர நீர், தூசி பாதுகாப்பு வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச சான்றிதழ்கள்
இந்த Turbo 6 சீரிஸ் உலகளாவிய சந்தைகளிலும், இந்தியாவிலும் ஒன்பிளஸ் Nord 6 மற்றும் Nord CE 6 என்ற பெயர்களில் அறிமுகமாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு ஆதாரமாக, ஒன்பிளஸ் Nord 6 மாடல் மலேசியாவின் SIRIM, UAE-யின் TDRA உள்ளிட்ட பல சர்வதேச சான்றிதழ்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இத்தகைய சான்றிதழ்கள், போன் அறிமுகத்திற்கு சில வாரங்கள் அல்லது மாதத்திற்கு முன்பே கிடைப்பது வழக்கம்.
சீனாவை வெளியீடு
ஒன்பிளஸ் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், சீனாவில் வெளியான டர்போ மாடல்களை உலக சந்தைகளுக்கு Nord பிராண்டில் மாற்றி அறிமுகப்படுத்துவது நிறுவனத்தின் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதனால், Nord 6 சீரிஸும் Turbo 6 ஹார்ட்வேரை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் Turbo 6 விலை
சீனாவில் Turbo 6 மாடல் சுமார் ரூ.27,000 முதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஒன்பிளஸ் Nord 6 விலை ரூ.28,000 முதல் ரூ.32,000 வரை இருக்கலாம். Nord CE 6 மாடல் ரூ.22,000 முதல் ரூ.25,000 வரையிலான விலை பிரிவில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது.
மிட்-ரேஞ்ச் போன்
இதன் அம்சங்களை பார்க்கையில் Nord 6 மாடல் Qualcomm Snapdragon 8s Gen 4 சிப், 16GB வரை RAM, 512GB வரை ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் வரக்கூடும். 9,000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், உயர்தர IP ரேட்டிங், 50MP Sony கேமரா போன்ற அம்சங்கள் இணைந்தால், Nord 6 சீரிஸ் மிட்-ரேஞ்ச் போன்களில் முக்கியமான மாற்றங்களை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

