ஒரு கிளிக் போதும்.. Instagram-ஐ கலக்கும் படங்களை இலவசமாக உருவாக்கலாம்! எப்படி?
கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் மூலம் நானோ பனானா எனப்படும் 3D ஃபிகுரைன் படங்களை எளிதாக உருவாக்கலாம். சாதாரண புகைப்படங்களை சில நிமிடங்களில் 3D மாதிரியாக மாற்றும் இந்த அம்சம் முற்றிலும் இலவசம்.

நானோ பனானா
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புதிய AI படங்களைப் பலரும் பார்த்திருப்பீர்கள். அவை நிஜ தோற்றமுள்ள ஃபிகுரைன் படங்கள் ஆகும். சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வரும் இந்தப் புதிய டிரெண்டின் பெயர் 'நானோ பனானா'. கூகிளின் AI உதவியாளரான ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் மூலம், இதுபோன்ற ஃபிகுரைன் படங்களை எளிதாகவும் சில நொடிகளிலும் உருவாக்கலாம். அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் ஜெமினி
ஜெமினி மூலம் உருவாக்கப்படும் அழகான 3D வடிவங்களே நானோ பனானா டிரெண்டில் உள்ள ஃபிகுரைன் படங்கள். கூகுள் ஜெமினி மூலம் சில கிளிக்குகளில் யார் வேண்டுமானாலும் இவற்றை உருவாக்கலாம். சமூக ஊடகங்களில் பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரும் தங்கள் சொந்த 'நானோ பனானா' 3D படங்களை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு நீங்கள் தொழில்நுட்ப வல்லுநராக இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஒரு கார்ட்டூன் க்ரஷ் சிலை வேண்டுமா அல்லது உங்கள் சொந்த மினியேச்சர் வடிவம் வேண்டுமா, ஜெமினி மூலம் உடனடியாக உருவாக்கி எந்த சமூக ஊடகத்திலும் பகிரலாம்.
ஜெமினியின் புதிய 3D அம்சம் என்ன?
சமீபத்தில் கூகுள் ஜெமினியில் இந்தப் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், மக்கள் இதை நானோ பனானா என்ற வேடிக்கையான பெயரால் அழைக்கின்றனர். இந்த AI கருவியின் சிறப்பு என்னவென்றால், உங்கள் சாதாரண புகைப்படங்களை சில நிமிடங்களில் 3D மாதிரியாக மாற்றுகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. இது முற்றிலும் இலவசம்.
ஜெமினியில் ஃபிகுரைன் படத்தை எப்படி உருவாக்குவது?
முதலில் உங்கள் ஃபோனில் கூகுள் ஜெமினி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது கூகுளில் ஜெமினி என்று தேடலாம். ஜெமினி செயலியைத் திறந்து, கீழ் இடதுபுறத்தில் உள்ள + குறியைத் தட்டி, உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படத்தைப் பதிவேற்றவும். அதன் பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி ப்ராம்ட்டைக் கொடுத்தால், ஜெமினி உங்களுக்கு 3D ஃபிகுரைன் படத்தை உருவாக்கித் தரும். தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ரியலிஸ்டிக் ஃபிகுரைன் படத்திற்கான ப்ராம்ட்களில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வைரல் டிரெண்ட்
Create a 1/6 scale commercialized figurine of the character in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk. The figurine has a round transparent acrylic base, with no text on the base. The content on the computer screen is the ZBrush modeling process of this figurine. Next to the computer screen is a toy packaging box designed in a style reminiscent of high-quality collectible figures, printed with the original artwork. The packaging features two-dimensional flat illustrations.