கூகுள் பே, போன் பே, பேடிஎம் இருக்கா.? யுபிஐ லிமிட் மாறிப்போச்சு! புது ரூல்ஸ் இதோ!
யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் பயனாளர்களுக்கு தேசிய கட்டண கழகம் (NPCI) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 15, 2025 முதல் யுபிஐ பரிவர்த்தனை லிமிட் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம்
யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் பயனாளர்களுக்கு தேசிய கட்டண கழகம் (NPCI) பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15, 2025 முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும். இனி இன்சூரன்ஸ், கடன் தவணை, பங்குச் சந்தை முதலீடு, அரசாங்க கட்டணங்கள், பெரிய பயண முன்பதிவுகள் போன்றவற்றில் ஒரு நாளில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை செலுத்த முடியும். போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகளின் மூலம் இந்த வசதி கிடைக்கும்.
யுபிஐ பரிவர்த்தனை வரம்பு
ஆனால், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்பப்படும் பர்சன்-டூ-பர்சன் (P2P) பரிவர்த்தனை லிமிட் ரூ.1 லட்சமாக தொடர்கிறது. முன்னதாக இன்சூரன்ஸ் மற்றும் கேப்பிட்டல் மார்க்கெட் முதலீட்டிற்கு ரூ.2 லட்சம் மட்டுமே அனுமதி இருந்தது. இப்போது அது ரூ.5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கிரெடிட் கார்டு பில் கட்டணம் ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம், ஆனால் ஒரு நாளின் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணத் துறையில் ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம்.
யுபிஐ லிமிட் மாற்றம்
இதற்கு முன்பு இது ரூ.1 லட்சமே. அரசு e-Marketplace-ல் (GeM) வரி மற்றும் EMD கட்டணங்களும் ரூ.5 லட்சம் வரை செலுத்த அனுமதி உள்ளது. கடன் மற்றும் EMI செலுத்துதலுக்கும் பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்னர் குறைந்த தொகை கட்டணம் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது ஒரே முறையில் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். ஒரு நாளில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் செலுத்தும் வசதி கிடைக்கும். நகை வாங்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்ந்துள்ளது, மேலும் ஒரு நாளின் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ புதிய விதிகள்
வங்கிக் காலத் தாமச பணமுதலீட்டுக்கும் (கால வைப்புத்தொகை) ரூ.5 லட்சம் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம். அந்நிய செலாவணி கட்டணங்கள் BBPS மூலமாக ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் IPO-வில் (பங்கு முதலீட்டு வெளியீடு) விண்ணப்பிக்கும் போது, முந்தையதைப்போலவே ரூ.5 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது IPO-க்கு புதிய ரூ.10 லட்சம் வரம்பு பொருந்தாது. இதனால் முதலீடு, காப்பீடு, அரசாங்க கட்டணம், பெரிய பயண முன்பதிவு என அனைத்தையும் யுபிஐ மூலம் எளிதாக செலுத்த முடியும்.
இன்சூரன்ஸ் பிரீமியம்
புதிய வரம்பு உயர்வு மூலம் பயனாளர்கள் பெரிய தொகைகளை சிறு சிறு தவணைகளாக அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே முறையில் அனுப்ப முடியும். அதுவே கடன் EMI, இன்சூரன்ஸ் பிரீமியம், பங்குச் சந்தை முதலீடு, அரசு கட்டணம், நகை வாங்குதல் போன்றவற்றில் பெரிதும் உதவும். முக்கியமாக,கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னும் வசதியாகவும் வேகமாகவும் அமையும் என்று NPCI தெளிவாக கூறியுள்ளது.