ஒப்போ நிறுவனம் தனது புதிய தலைமுறை F31 5G சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 5G தொழில்நுட்பம், 4K வீடியோ, சக்திவாய்ந்த பிராசசர் போன்ற அம்சங்களுடன் இந்த சீரிஸ் இளைஞர்களை ஈர்க்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது புதிய தலைமுறை F31 5G சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கோவளம் கடற்கரைக்கு அருகில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இதன் வெளியீட்டு விழா. இந்த நிகழ்வில் ஒப்போ F31, F31 ப்ரோ மற்றும் F31+ என மூன்று மாடல்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மாடலும் இளைஞர்களின் தேவைகளை கருத்தில் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய F31 சீரீஸ், அதிவேக 5G தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் மிக விரைவான இன்டர்நெட் பிரௌசிங், தரவு பதிவிறக்கம் மற்றும் உயர் தர ஸ்ட்ரீமிங் அனுபவத்தை வழங்குகிறது. நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில், எங்கிருந்தாலும் இணைப்பை சீராக வைத்திருக்கிறது. கேமரா அம்சங்களில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தண்ணீருக்குள் கூட 4K வீடியோ எடுக்கும் திறன் கொண்டுள்ளது.
புகைப்படக் கலைஞர்கள் முதல் இளைஞர்கள்வரை அனைவருக்கும் இந்த மொபைல் புதிய அனுபவத்தைத் தரும். நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளிலும் கூட துல்லியமான சிக்னலைப் பெறும் வகையில் இந்த மொபைல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது பயணிகளுக்கும், கிராமப்புறங்களில் வாசிப்போருக்கும் பெரும் நன்மையாக அமையும். மேலும், சக்திவாய்ந்த பிராசசர், நீண்ட கால பேட்டரி ஆயுள் மற்றும் துடிப்பான திரை ஆகிய அம்சங்கள் இணைந்து, தினசரி பயன்பாட்டிலும், கேமிங்கிலும், அலுவலக பணிகளிலும் சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.
இந்த அறிமுக விழாவில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், “இந்த ஸ்மார்ட்போனின் கேமரா தரம் அசாதாரணமாக உள்ளது. இது முற்றிலும் புதிய அனுபவத்தை பயனர்களுக்கு தரும்” என்று கூறினார். ஒப்போவின் இந்த புதிய 5G சீரிஸ் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
