ரியல்மி நிறுவனம் 7000mAh பேட்டரியுடன் கூடிய Realme 15T 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. செப்டம்பர் 2 அன்று அறிமுகமாகும் இந்த மாடல், ஸ்லிம் வடிவமைப்பு, சிறந்த கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்கும்.

இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனம் ரியல்மி, தனது புதிய ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், ஏற்கனவே வெளியாகியுள்ள Realme 15 மற்றும் 15 Pro தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 7000mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், மற்ற மாடல்களைவிட நீண்ட பேட்டரி ஆயுள் தருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

அறிமுகம் செப்டம்பர் 2 அன்று ரியல்மியின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் வழியாக நேரலையாக நடைபெறும். பெரிய பேட்டரி இருந்தாலும், Realme 15T 5G எடை குறைவாகவும் ஸ்லிம் வடிவமைப்புடனும் இருக்கும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தடிமன் சுமார் 7.79mm மட்டுமே இருக்கும். எடையில், இது Redmi 15 (217g) உடன் போட்டியிடும் அளவில் இருக்கும். அதாவது, பெரிய பேட்டரி இருந்தாலும் மொபைல் கனமாக உணரப்படாது.

கேமரா அம்சங்களில், இந்த மொபைல் நடுத்தர விலையில் சிறந்த அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50MP பின்புற கேமரா, 50MP முன் செல்ஃபி கேமரா, கூடுதலாக 2MP இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை வழங்கப்படலாம். இதன் மூலம் போட்டோகிராபி மற்றும் வீடியோ அனுபவம் மேம்படும்.டிஸ்ப்ளே தரப்பில், 6.57 இன்ச் திரை மற்றும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்படும்.

 அதனுடன் உள்ளமைக்கப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும். மிகப்பெரிய திரை அல்லாததால், கையில் எளிதாக பிடிக்கவும், ஸ்மூத் ஸ்க்ரோலிங் அனுபவத்தையும் தரும். பிராசஸர் பக்கம், MediaTek Dimensity 6400 Max சிப் பயன்படுத்தப்படலாம். இது முந்தைய Dimensity 6300-ஐ விட மேம்பட்டது. மேலும், இந்த மொபைல் 4 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் மற்றும் 3 முக்கிய Android OS அப்டேட்கள் பெறும். 

கூடுதலாக, IP66, IP68, IP69 சான்றிதழ்களும் இருப்பதால், நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கும். விலையைப் பொறுத்தவரை 8GB + 128GB மாடல் ரூ.20,999, 256GB மாடல் ரூ.22,999, மற்றும் 12GB + 256GB வேரியண்ட் ரூ.24,999 ஆக இருக்கும். அதனால், அதிக பேட்டரி திறனுடன், சிறந்த கேமரா மற்றும் அப்டேட் வசதிகளைத் தரும் இந்த மொபைல், நடுத்தர விலையிலேயே சிறந்த தேர்வாக இருக்க முடியும்.