MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 9,020mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே: வெறும் 5.74 மிமீ தடிமனுடன் வரபோகும் ஐக்யூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட்!

9,020mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே: வெறும் 5.74 மிமீ தடிமனுடன் வரபோகும் ஐக்யூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட்!

ஐக்யூ நிறுவனம் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 8.8 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 9,020mAh பேட்டரியுடன் கூடிய 'ஐகூ பேட் ப்ரோ 8.8' டேப்லெட்டை விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 17 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐக்யூ பேட் ப்ரோ 8.8 அறிமுகம்
Image Credit : X

ஐக்யூ பேட் ப்ரோ 8.8 அறிமுகம்

ஐக்யூ iQOO) நிறுவனம் தனது புதிய 'ஐக்யூ பேட் ப்ரோ 8.8' (Pad Pro 8.8) டேப்லெட்டை விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் இந்த புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் டிஸ்பிளே, பேட்டரி திறன் மற்றும் கூலிங் தொழில்நுட்பம் போன்ற முக்கிய அம்சங்களை விவோவின் இந்த துணை பிராண்ட் வெளியிட்டுள்ளது.ஐக்யூ நியோ 12 (iQOO Neo 12) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து இந்த டேப்லெட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவில் ஐக்யு பேட் ப்ரோ 8.8 டேப்லெட்டிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது காம்பேக்ட் வடிவமைப்பு மற்றும் 9,020mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐக்யூ பேட் ப்ரோ 8.8: சிறப்பம்சங்கள்
Image Credit : X

ஐக்யூ பேட் ப்ரோ 8.8: சிறப்பம்சங்கள்

வெளியிடப்பட்ட வெய்போ (Weibo) பதிவின்படி, இந்த மாத இறுதியில் ஐக்யூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட் சீனாவில் அறிமுகமாகும் என்று ஐக்யூ உறுதிப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், JD.com, Tmall மற்றும் Douyin ஆகிய தளங்கள் மூலம் முன்கூட்டிய ஆர்டர்களை நிறுவனம் ஏற்றுக்கொண்டு வருகிறது.

டிஸ்பிளே - இந்த டேப்லெட் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 8.8 இன்ச் OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் (FPS) கேம்களுக்காக இந்த டிஸ்பிளே பரந்த பார்வைத் புலத்தை (field of view) வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

34
பேட்டரி & கூலிங் சிஸ்டம்
Image Credit : X

பேட்டரி & கூலிங் சிஸ்டம்

ஐக்யூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட்டில் 9,020mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும், 30x30x3.5 மிமீ அளவிலான ஆக்டிவ் கூலிங் ஃபேன் கொண்ட 'ஐஸ் டோம் குவாட்-கூலிங்' (Ice Dome quad-cooling) அமைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூலிங் செட்டப் ஆனது மொத்தம் 23,253 மிமீ சதுர வெப்பச் சிதறல் பகுதியைக் கொண்டுள்ளதுடன், 3 நுண்ணறிவு விசிறி வேக அமைப்புகளை (intelligent fan-speed settings) ஆதரிக்கிறது.

அளவு மற்றும் எடை - வரவிருக்கும் இந்த டேப்லெட் வெறும் 298 கிராம் எடையும், 5.74 மிமீ தடிமனும் மட்டுமே கொண்டுள்ளது.

44
விலை & கிடைக்கும் இடங்கள்
Image Credit : X

விலை & கிடைக்கும் இடங்கள்

இந்த ஐக்யூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட்டின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த கூடுதல் விவரங்கள் அதன் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்யூ நியோ 12 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து வெளியிடப்படலாம்.

முன்னதாக, இதே போன்ற 8.8 இன்ச் 165Hz OLED திரையுடன் ஐக்யூ பேட் அல்ட்ரா (iQOO Pad Ultra) சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் 12GB ரேம் + 256GB சேமிப்பு வேரியண்ட்டின் விலை தோராயமாக CNY 6,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.92,900) ஆகும்.

இது 5.74 மிமீ தடிமன் கொண்ட உடல் மற்றும் 66W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 9,020 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் மூலம் இயங்குகிறது. இருப்பினும், வரவிருக்கும் புதிய ஐகூ பேட் ப்ரோ 8.8 டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
JioHome Plans: செம பிளான்.. ஒரே ரீசார்ஜில் வைஃபை, டிவி, ஓடிடி வசதிகள்.. ஜியோவின் 3-in-1 திட்டம்
Recommended image2
200MP கேமரா, 8000mAh பேட்டரி: 90W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் களமிறங்கும் விவோ போன்!
Recommended image3
2100-க்குள் கடல் மட்டம் உயரும் அபாயம்: 2 மடங்கு வேகத்தில் உருகும் அண்டார்டிகா; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
5200mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே: ரூ.11,000 பட்ஜெட்டில் களமிறங்கிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20!
Recommended image2
ஆபிஸ் வேலை டூ எடிட்டிங் வரை: ரூ.60,000-க்குள் கலக்கும் டாப் 5 லேப்டாப்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved