MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 5200mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே: ரூ.11,000 பட்ஜெட்டில் களமிறங்கிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20!

5200mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே: ரூ.11,000 பட்ஜெட்டில் களமிறங்கிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் 'இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20' ஸ்மார்ட்போன் வங்கித் தள்ளுபடிகளுடன் ரூ.11,000 விலையில் கிடைக்கிறது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 15 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அறிமுகம்
Image Credit : X

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அறிமுகம்

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 (Infinix Smart 20) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்குக் கிடைக்கிறது. 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிபிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பற்றி பார்போம்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விலை & சலுகை விவரங்கள்
Image Credit : X

விலை & சலுகை விவரங்கள்

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலையானது 33 சதவீத தள்ளுபடி போக ரூ.13,499 ஆக இருக்கிறது. இதுபோக தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,475 தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தள்ளுபடிகள் போக ரூ.11,024 விலைக்கு இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனை வாங்கலாம். மேலும், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) சலுகையும் கிடைக்கிறது.

34
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள்
Image Credit : X

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள்

டிஸ்பிளே (Display) - 6.78 இன்ச் (1576 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 700 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. இவற்றுடன் 240Hz டச் சாம்பிளிங் ரேட்டும் வழங்கப்பட்டுள்ளது.

செயல்திறன் (Performance) - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் 12என்எம் (Octa Core MediaTek Helio G81 Ultimate 12nm) சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் யூனிட் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற பர்பாமென்ஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிசைன் மற்றும் டைனாமிக் பார் - டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனையும் கொண்டுள்ளது. இந்த டிசைன் ஸ்மார்ட்போனுக்கு மாடர்ன் லுக்கை வழங்குவதுடன், நோட்டிபிகேஷன்கள் மற்றும் சில முக்கிய தகவல்களை எளிதாகப் பார்க்கும் வகையில் உதவுகிறது.

கேமரா (Camera) - கேமராவைப் பொறுத்தவரை, இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனில் 8எம்பி மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்பீ எடுக்கவும், வீடியோ கால்களை மேற்கொள்ளவும் 8எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஐ கேம் (AI Cam), டூயல் வீடியோ (Dual Video), போர்ட்ரெய்ட் (Portrait), டைம்-லேப்ஸ் (Time-Lapse), சூப்பர் நைட் (Super Night) உள்ளிட்ட பல்வேறு கேமரா பீச்சர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி & சார்ஜிங் - இந்த ஸ்மார்ட்போனில் 5200mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இருப்பினும், பாக்ஸில் 10W சார்ஜர் மட்டுமே கிடைக்கிறது. மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. 7.7எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடையுடன் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

44
கூடுதல் அம்சங்கள்
Image Credit : X

கூடுதல் அம்சங்கள்

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டிடிஎஸ் (DTS) சப்போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வயர்டு இயர்போன்களைப் பயன்படுத்த முடியும். மேலும், IP64 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதியும் உள்ளது.

கனெக்டிவிட்டி & நிறங்கள் - டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-ஃபை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. ஷேடோ பிளாக் (Shadow Black), போலாரிஸ் டைட்டானியம் (Polaris Titanium), சன்லைக் ஆரஞ்ச் (Sunlike Orange), கிளவுட்லைட் ப்ளூ (Cloudline Blue) ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Caller ID Rule: இனி தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தாலும் ஈசியா தெரிஞ்சிடும்..! 1ம் தேதி முதல் அமல்
Recommended image2
ஆபிஸ் வேலை டூ எடிட்டிங் வரை: ரூ.60,000-க்குள் கலக்கும் டாப் 5 லேப்டாப்கள்!
Recommended image3
100% சார்ஜ் ஆன பிறகும் ஸ்மார்ட்போன் பிளக்கில் இருந்தால் வெடிக்குமா? பலரும் சொல்லாத உண்மை!
Related Stories
Recommended image1
Caller ID Rule: இனி தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தாலும் ஈசியா தெரிஞ்சிடும்..! 1ம் தேதி முதல் அமல்
Recommended image2
ஆபிஸ் வேலை டூ எடிட்டிங் வரை: ரூ.60,000-க்குள் கலக்கும் டாப் 5 லேப்டாப்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved