ரூ.200 கூட செலவில்லாமல் அன்லிமிடெட் 5G.. ஜியோ செம சர்ப்ரைஸ்!
ரிலையன்ஸ் ஜியோ ரூ.198-க்கு ஒரு குறைந்த விலை ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. இந்த பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பற்றி முழு விபரங்களை இங்கு காண்போம்.

அன்லிமிடெட் 5G பிளான்
இன்றைய காலத்தில் மொபைல் டேட்டா என்பது லட்சம் இல்லை, அவசியம். வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கிளாஸ், ஆபிஸ் வேலை என அனைத்துக்கும் இணையம் தேவை. ஆனால் Unlimited 5G என்றாலே அதிக செலவு என்று பலர் நினைக்கிறார்கள். குறிப்பாக ரூ.200-க்குள் 5G பிளான் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். அந்த எண்ணத்தை உடைக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறைந்த விலை பிளானை வழங்குகிறது.
ஜியோ ரூ.198 பிளான்
ஜியோவின் ரூ.198 ரீசார்ஜ் பிளான், குறைந்த பட்ஜெட் பயனர்களுக்காக உள்ளது. இந்த பிளானில் தினமும் 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா, இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். தினசரி டேட்டா முடிந்ததும் இணைய வேகம் 64kbps ஆக குறைக்கப்படும். சாதாரண உலாவலுக்கு இது போதுமானதாக இருக்கும்.
வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் 5ஜி
இந்த பிளானின் வேலிடிட்டி 14 நாட்கள். அதாவது மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஜியோ 5G நெட்வொர்க் உள்ள பகுதியில் இருந்தால், மேலும் 5G மொபைல் வைத்திருந்தால், இந்த பிளானில் வரம்பற்ற 5G டேட்டாவையும் பயன்படுத்தலாம். கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
கூடுதல் பலன்களும் உண்டு
ரூ.198 பிளானில் கால் மற்றும் டேட்டா மட்டுமல்ல. JioTV மூலம் லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம். மேலும், Jio Cloud Storage வசதியும் வழங்கப்படுகிறது. இது புகைப்படங்கள், டாக்குமென்ட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக சேமிக்க உதவும்.
ஏர்டெல் பிளான்
ஏர்டெல்லில் ரூ.200-க்குள் Unlimited 5G பிளான் தற்போது இல்லை. Airtel-ன் குறைந்த விலை 5G பிளான் ரூ.349. இதில் தினமும் 1.5GB டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். வேலிடிட்டி அதிகமாக இருந்தாலும், குறைந்த பட்ஜெட் பயனர்களுக்கு ஜியோ ரூ.198 பிளான் தான் இப்போது அதிக மதிப்பளிக்கும் தேர்வாக உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

