ஒரே நேரத்தில் 4 டிவிகளில் பார்க்கலாம்! ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி மாற்றம்!
JioHotstar ஜியோ ஹாட்ஸ்டார் புதிய திட்டங்கள் ₹79 முதல் ஜனவரி 28 அன்று தொடங்குகிறது. மொபைல் மற்றும் பிரீமியம் பிளான் விவரங்களை இங்கே அறியுங்கள்.ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி மாற்றம்!

JioHotstar
பொழுதுபோக்கு உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தனது புதிய சந்தாத் திட்டங்களை (Subscription Plans) அறிவித்துள்ளது. புதிய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் ஜனவரி 28, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. மொபைல், சூப்பர் மற்றும் பிரீமியம் என மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டங்கள், வெறும் 79 ரூபாயில் தொடங்குவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டம் (Mobile Plan)
ஸ்மார்ட்போன் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மாதாந்திரக் கட்டணம் வெறும் ₹79 மட்டுமே. காலாண்டுக்கு ₹149 மற்றும் வருடத்திற்கு ₹499 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் சாதனத்தில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்க முடியும். மேலும், ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொடர்களைத் தவிர மற்ற அனைத்து உள்ளடக்கங்களையும் இதில் காணலாம். ஹாலிவுட் படங்களைப் பார்க்க விரும்புவோர் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
சூப்பர் திட்டம் (Super Plan)
ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த 'சூப்பர் திட்டம்' சிறந்தது. இதன் மாதாந்திரக் கட்டணம் ₹149, காலாண்டுக் கட்டணம் ₹349 மற்றும் வருடாந்திரக் கட்டணம் ₹1,099 ஆகும். மொபைல், லேப்டாப் மற்றும் டிவி என அனைத்துச் சாதனங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். இத்திட்டத்தில் ஹாலிவுட் உள்ளடக்கங்களும் இலவசமாகவே கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
பிரீமியம் திட்டம் (Premium Plan)
விளம்பரங்கள் இல்லாத (Ad-free) அனுபவத்தை விரும்புபவர்களுக்காக இந்த பிரீமியம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மாதாந்திரக் கட்டணம் ₹299. காலாண்டுக்கு ₹699 மற்றும் வருடத்திற்கு ₹2,199 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பார்க்கலாம். நேரலை விளையாட்டுப் போட்டிகள் (Live Sports) தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் விளம்பரங்கள் இன்றி 4K தரத்தில் கண்டு மகிழலாம்.
பழைய பயனர்களுக்கு பாதிப்பு உண்டா?
இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் ஜனவரி 28 முதல் இணையும் புதிய பயனர்களுக்கு (New Users) மட்டுமே பொருந்தும் என நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சந்தா வைத்திருக்கும் பழைய பயனர்களுக்கு, அவர்களின் தற்போதைய பலன்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

