மலிவு விலை மாடலானாலும் பிரீமியம் அம்சங்கள்.. iPhone 17e-யின் அதிரடி அப்டேட்ஸ்
ஆப்பிளின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனான iPhone 17e, 2026-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரதான iPhone 17 மாடலுக்கு இணையான 18MP செல்ஃபி சென்சார், A19 சிப் மற்றும் 4,000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வரக்கூடும்.

ஆப்பிள் ஐபோன் 17இ
ஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் ஐபோன் 17இ (iPhone 17e), 2026 பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகலாம் என தொழில்நுட்ப வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை குறைவாக இருந்தாலும், இது பிரதான மாதலான iPhone 17-க்கு இணையான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய செல்ஃபி சென்சார் மூலம் புகைப்படத் தரம் அதிகரிக்க உள்ளது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றது.
பிரபல ஆய்வாளர் ஜெஃப் வெளியிட்ட தகவலின்படி, iPhone 17 மாடலில் இருக்கும் அதே தரமான சென்சார் iPhone 17e-க்கும் வழங்கப்படும். கடந்த 12MP முன்பக்க ஆண்டின் கேமராவை மாற்றி, ஆப்பிள் இந்த ஆண்டின் iPhone 17-ல் 18MP செல்ஃபி கேமரா கிடைத்துள்ளது. இதே 18MP சென்சார் iPhone 17e-யிலும் சேரக்கூடும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் மூலம் போனைத் திருப்பாமல் செங்குத்தும், கிடைமட்டமும் செல்ஃபி எடுக்கும் வசதி கிடைக்கும். கூடுதலாக, A19 சிப் போன்ற அம்சங்களும் சேர்க்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் டிஸ்ப்ளே & கேமரா அம்சங்கள்
முந்தைய iPhone ‘e’ மாடல்களைப் போலவே, iPhone 17e-யும் 60Hz புதுப்பிப்பு விகிதம் கொண்ட 6.1-inch OLED திரையுடன் வரலாம். பின்புறத்தில் இருக்கும் 48MP ஒற்றை கேமரா தொடரும், ஆனால் மென்பொருள் அடிப்படையிலான புகைப்பட மேம்பாடுகள் கிடைக்கக்கூடும். இதன் மூலம் நிதானமான நிறத் துல்லியம் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் கூடுதல் தெளிவு கிடைக்கும் என அப்டேட் செய்யப்படுகிறது.
பேட்டரி துறையில், iPhone 17e-க்கு 4,000mAh கொண்ட பேட்டரி வழங்கப்படலாம். 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், Apple வழக்கமாக அனைத்து விவரங்களையும் அதிகாரப்பூர்வ நிகழ்வில் மட்டுமே உறுதிப்படுத்துகிறது. எனவே, iPhone 17e பற்றிய முழுமையான தகவல்கள் வெளியீட்டு நாளில் தான் தெரியும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

