- Home
- Business
- உங்கள் ஆதார், பான் கார்டை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா? சரிபார்ப்பது எப்படி? முழு விபரம்
உங்கள் ஆதார், பான் கார்டை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா? சரிபார்ப்பது எப்படி? முழு விபரம்
ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நிதி இழப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது அவசியம் ஆகும் .

ஆதார் பான் கார்டு
நமது ஆதார் மற்றும் பான் கார்டு ஒரு சாதாரண அடையாள ஆவணம் அல்ல. இவை வங்கி பரிவர்த்தனை, கடன் விண்ணப்பம், காப்பீடு, முதலீடு, சிம் கார்டு வாங்குவது போன்ற பல முக்கிய செயல்களில் பயன்படுத்தப்படும் அடிப்படை ஆவணங்கள். ஆனால் சில நேரங்களில், நாமே பகிர்ந்த ஆவணங்கள் மற்றவரால் தவறாக பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட தவறான பயன்பாடு நமக்கு நிதி இழப்பு, கடன் சிக்கல், அல்லது சட்ட பிரச்சனை வரக்கூடிய அபாயத்தை உருவாக்கும். அதனால், இந்த ஆவணங்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது அவசியம்.
கிரெடிட் அறிக்கையை சோதிக்கவும்
உங்கள் KYC விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும், ஆண்டிற்கு ஒருமுறை கிரெடிட் பீரோக்களிடம் இருந்து இலவச கிரெடிட் ரிப்போர்ட் பெற்றுச் சரிபார்க்கலாம். இந்தியாவில் தற்போது நான்கு கிரெடிட் பீரோக்கள் செயல்படுகின்றன. அவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், நீங்கள் விண்ணப்பிக்காத கடன், கணக்கு தொடக்கம், அல்லது தெரியாத லோன் விசாரணை இருந்தால், உடனே விசாரிக்க வேண்டும். இது மோசடி நடந்ததற்கான முதல் எச்சரிக்கை ஆகும்.
சந்தேகமான தகவல்களை புறக்கணிக்காதீர்கள்
எந்த வகையான கடன் தொடர்பான SMS, மின்னஞ்சல், கடிதங்கள் வந்தாலும் கவனமாகப் படியுங்கள். நீங்கள் விண்ணப்பிக்காத கடனுக்கு “Approved” அல்லது “Rejected” என்ற தகவல் வந்தால், அது மோசடியின் அறிகுறி. அப்படியானால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட விவரங்களை சரிபார்க்கவும். தேவையானால் கணக்கை நிறுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கை
உங்கள் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதியாக உணர்ந்தால், காவல்துறையில் புகார் அளிப்பது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், வலுவான கடவுச்சொல், OTP பகிராமை, மற்றும் ஆவணங்களை பகிரும் முன் இருமுறை யோசிப்பு போன்ற பாதுகாப்பு பழக்கங்களை பின்பற்ற வேண்டும். மேலும், எப்படி முன்னேறுவது என்று தெரியவில்லை என்றால், ஒரு சட்ட நிபுணரின் ஆலோசனை பெறுவது சிறந்த வழி ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

