MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பழைய ஐபோன் வாங்க பிளான் பண்றீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கம்மி விலையில் வருது ஐபோன் 17e!

பழைய ஐபோன் வாங்க பிளான் பண்றீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கம்மி விலையில் வருது ஐபோன் 17e!

iPhone 17e பிப்ரவரி 19-ல் ஐபோன் 17e ரிலீஸ்? டைனமிக் ஐலேண்ட், 48MP கேமரா மற்றும் A19 சிப்செட் என கலக்க வரும் ஆப்பிளின் மலிவு விலை போன்!கம்மி விலையில் வருது ஐபோன் 17e!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 08 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone 17e
Image Credit : Gemini

iPhone 17e

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மலிவு விலை ஐபோன் மாடலான 'ஐபோன் 17e' (iPhone 17e) ஸ்மார்ட்போனை எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 16e மாடலின் வாரிசாக வரும் இந்த புதிய போன், பல நவீன வசதிகளுடன் களமிறங்கவுள்ளது. குறிப்பாக இதன் சிப்செட், கேமரா மற்றும் சார்ஜிங் தொழில்நுட்பங்களில் ஆப்பிள் பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளதாக லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25
வெளியீட்டுத் தேதி மற்றும் எதிர்பார்ப்புகள்
Image Credit : iPhone 17e

வெளியீட்டுத் தேதி மற்றும் எதிர்பார்ப்புகள்

சமீபத்திய லீக்ஸ் தகவலின்படி, ஐபோன் 17e வரும் பிப்ரவரி 19 அன்று அறிமுகப்படுத்தப்படலாம். ஜெர்மனியைச் சேர்ந்த 'Macwelt' என்ற இணையதளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தான் ஐபோன் 16e வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 10a (Pixel 10a) போனையும் பிப்ரவரி 18 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் பட்ஜெட் ப்ரீமியம் போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
ஒரு ஐபோன் விலைக்கு 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.. ஷோரூமுக்கு ஓடும் மக்கள்
Related image2
ஸ்டைலான 'ஃபிளிப்' டிசைனில் ஐபோன்! ஆப்பிளின் ரகசிய திட்டம் அம்பலம்.
35
புதிய டிசைன் மற்றும் டிஸ்பிளே மாற்றம்
Image Credit : Google

புதிய டிசைன் மற்றும் டிஸ்பிளே மாற்றம்

ஐபோன் 17e மாடலில் முதன்முறையாக நாட்ச் டிசைன் நீக்கப்பட்டு, 'டைனமிக் ஐலேண்ட்' (Dynamic Island) வசதி அறிமுகப்படுத்தப்படலாம். இது பயனர்களுக்கு ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்கும். மேலும், பேஸ் ஐடி (Face ID) வசதி மட்டுமே இருக்கும் என்பதால், பழைய டச் ஐடி (Touch ID) நீக்கப்பட வாய்ப்புள்ளது.

45
சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் சார்ஜிங் வேகம்
Image Credit : Google

சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் சார்ஜிங் வேகம்

செயல்திறனைப் பொறுத்தவரை, ஐபோன் 17e மாடலில் சக்திவாய்ந்த A18 Pro அல்லது அதிநவீன A19 சிப்செட் பயன்படுத்தப்படலாம். அத்துடன் மல்டிடாஸ்கிங்கை மேம்படுத்த புதிய C1X மோடம் சிப் இடம்பெறலாம். சார்ஜிங் வசதியில், இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் MagSafe வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும். மேலும், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.

55
கேமரா மற்றும் இதர சிறப்பம்சங்கள்
Image Credit : Apple Hub | X

கேமரா மற்றும் இதர சிறப்பம்சங்கள்

புகைப்படம் எடுப்பதற்காக, பின்புறம் 48 எம்பி சிங்கிள் கேமரா (Single Rear Camera) கொடுக்கப்படலாம். இது துல்லியமான படங்களை எடுக்க உதவும். முன்புறம் செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 12 எம்பி கேமரா இடம்பெறும் எனத் தெரிகிறது. பட்ஜெட் விலையில் இத்தனை பிரீமியம் வசதிகள் கிடைப்பது ஐபோன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone-க்கே டஃப் கொடுக்கும் ஸ்லிம் லுக்..! 8000mAh பேட்டரியுடன் Tecno Pova Curve 2 இந்தியாவில்..!
Recommended image2
அலர்ட்! ஏசி போட்டா கரண்ட் பில் எகிறுகிறதா? ஆன் செய்யும் முன் இந்த 5 விஷயங்களை மறக்காம செஞ்சிடுங்க!
Recommended image3
அடேங்கப்பா.. லேப்டாப் வாங்க இவ்ளோ விஷயங்கள் இருக்கா? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
ஒரு ஐபோன் விலைக்கு 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.. ஷோரூமுக்கு ஓடும் மக்கள்
Recommended image2
ஸ்டைலான 'ஃபிளிப்' டிசைனில் ஐபோன்! ஆப்பிளின் ரகசிய திட்டம் அம்பலம்.
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved