ஸ்டைலான 'ஃபிளிப்' டிசைனில் ஐபோன்! ஆப்பிளின் ரகசிய திட்டம் அம்பலம்.
Apple ஆப்பிள் நிறுவனம் கிளாம்ஷெல் வடிவிலான 'ஐபோன் ஃபிளிப்' மாடலை உருவாக்கி வருவதாக மார்க் குர்மன் தகவல் வெளியிட்டுள்ளார். இதன் டிசைன் மற்றும் முக்கிய விவரங்கள் இதோ.

Apple
நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து ஒரு மடிக்கக்கூடிய ஐபோனை (Foldable iPhone) எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, பிரபல தொழில்நுட்ப பத்திரிகையாளர் மார்க் குர்மன் (Mark Gurman) ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தற்போது புத்தக வடிவிலான 'ஐபோன் ஃபோல்டு' (iPhone Fold) மட்டுமல்லாமல், கிளாம்ஷெல் (Clamshell) வடிவிலான 'ஐபோன் ஃபிளிப்' (iPhone Flip) மாடலையும் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மார்க் குர்மன் வெளியிட்ட ரகசியம்
ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநரான மார்க் குர்மன், தனது 'பவர் ஆன்' (Power On) செய்திமடலில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஆப்பிள் நிறுவனம் செங்குத்தாக மடிக்கக்கூடிய ஒரு சிறிய ஐபோனை உருவாக்கி வருகிறது. இது சந்தையில் ஏற்கனவே உள்ள சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் சீரிஸ் போன்களுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாடல் விற்பனைக்கு வருவது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாம்சங் மற்றும் மோட்டோரோலாவுக்கு செக்?
சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7) மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஆகிய மாடல்கள் தற்போது மடிப்பு மொபைல் சந்தையை ஆட்சி செய்து வருகின்றன. ஆப்பிள் தனது பிராண்ட் மதிப்போடு இந்த களத்தில் இறங்கினால், அது இந்த நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும். ஆப்பிளின் இந்த 'ஃபிளிப்' மாடல் மிகவும் மெலிதாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் ஃபோல்டு (iPhone Fold) எப்போது வரும்?
மறுபுறம், ஆப்பிளின் பெரிய மடிப்பு மொபைலான 'ஐபோன் ஃபோல்டு' இந்த ஆண்டே அறிமுகமாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2nm தொழில்நுட்பத்தில் உருவான அதிவேக A20 Pro சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் ஃபேஸ் ஐடிக்கு (Face ID) பதிலாக, பவர் பட்டனில் டச் ஐடி (Touch ID) வசதி வழங்கப்படலாம் என்றும் கசிந்த தகவல்கள் கூறுகின்றன.
ஆப்பிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?
இதுவரை ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், ஆப்பிள் தனது முதல் மடிப்பு சாதனத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே, அடுத்தடுத்து 'ஐபோன் ஃபிளிப்' போன்ற மாடல்களை வெளியிடும் என்று தெரிகிறது. எனவே, ஆப்பிளின் இந்த புதிய முயற்சி வெற்றியடையுமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

